என் மலர்
சிவகங்கை
- எம்.எல்.ஏ. நிதியில் அமைக்கப்பட்ட சாலை திறப்புவிழா நடந்தது.
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சீகூரணி கிராமத்தில் சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த பகுதியில் சாலை வசதி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியில் சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி அந்தப் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதனை செந்தில் நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டிபன்அருள்சாமி, காளையார்கோவில் ஒன்றிய தலைவர் கோவிந்தன், மறவமங்கலம் ஊராட்சி தலைவர் அன்பழகன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட பாசறை துணை செயலாளர் சதிஷ், வழக்கறிஞர்கள் நக்கீரன், நவநீதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- மானாமதுரையில் நடந்த கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜையில் அமைச்சர் பங்கேற்றார்.
- கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன் தலைமை தாங்கினார்.
தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தற்போது மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 8.50 கி.மீட்டர் தூரத்திற்கு பிரதானக்குழாய்கள் பதித்து, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான அக்ரஹாரம் சாலை, தாயமங்கலம் சாலை, அழகர்கோவில் சாலை, மதுரா நகர் சாலை, கன்னார் சாலை, சோனையா கோவில் என 6 இடங்களில் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.
மேற்கண்ட 6 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரானது 2.20 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாங்குளம் குப்பைக் கிடங்கில் அமைக்கப்பட உள்ள (20 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் கசடு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பட உள்ளது. இத்திட்டத்தினை ஓராண்டு காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விழாவில் துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜாமணி, தி.மு.க. நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்-கருவிகள் வழங்கப்படும் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய வாடகையில் சிறு, குறு விவ சாயிகள் பெற்று பயன் பெறலாம். உழவுப்பணி கள் மற்றும் அறுவடைப் பணிக ளுக்கு டிராக்டருடன் இயக்கக்கூடிய கருவிகளான சுழற்கலப்பை, நிலக்கடலை தோண்டும் கருவி, சோளம் அறுவடை எந்திரம், வைக்கோல் ரவுண்டு பேலர் போன்ற கருவிகளுடன் 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.
புன்செய் நிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் உழவுப்பணிக்கு தேவைப் படும் டிராக்டர் மற்றும் உபகரணங்களுடன் 1 ஏக்கர் நிலத்துக்கு ரூ.250-ம், அதிக பட்சமாக 5 ஏக்கர் நிலத்திற்கு 5 மணி நேரத்துக்கு மொத்த வாடகையில் ரூ.1,250-ம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
நன்செய் நிலம் வைத்து உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நிலத்திற்கு மொத்த வாடகையில் ரூ.625 பின்னேற்பு மானியமாக பெற்று பயன்பெறலாம்.
மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவி கள் வாடகைக்கு தேவைப் படும் விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம். தாங்கள் செலுத்திய தொகையை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு இளை யான்குடி, காளையார் கோவில், சிவகங்கை, மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார சிறு, குறு விவசாயிகள் உதவி செயற் பொறியாளரையும், தேவகோட்டை, கல்லல், கண்ணங்குடி, எஸ்.புதூர், சாக்கோட்டை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டார சிறு, குறு விவசாயிகள் காரைக்குடி உதவி செயற் பொறி யாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
- வருகிற 30-ந்தேதி முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடக்கிறது.
- தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் மற்றும் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 5.30 மணிக்கும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின், ஒருங்கி ணைந்த கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதில் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து பல்வேறு துறை அலுவ லர்கள் விளக்கி பேசுவர். எனவே ஆர்வமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.
அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர், சார்ந்தோர், தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தி னர் தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிக ரத்த தானம்் வழங்கியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
- கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தேவகோட்டை
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தேவகோட்டை வட்டாரத்தில் அதிகளவில் ரத்தம் வழங்கிய ரத்த கொடையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரத்த ெகாடையாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சமூக ஆர்வலர் சாவித்திரி, பாலமுருகன், கல்லூரி மாணவர்கள் சூர்யா, கமலேசுவரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் ஷாம் சேசுரான், திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆலோசகர் அழகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டிளித்தார்.
- சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கி வரலாம்.
சிவகங்கை
சிவகங்கையில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி நடந்தது. இதனை பா.ஜ.க முன்னாள் தேசிய செயலா ளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் குடிமகனாக உள்ள எவரும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது என்ற திருமா வளவனின் கருத்தை ஏற்று கொள்கிறேன்.
2016-ல் மோடி ஆட்சி அமையவில்லை என்றால் பிச்சைக்கார நாடாக இந்தியா மாறியிருக்கும். மெட்ரோ ெரயில் பணிக்கு தகுதி இருந்தும் ஒப்பந்தம் கிடைக்காதவர்களே சி.பி.ஐக்கு புகார் செய்தனர். 6-வது நபராகவே அண்ணா மலை புகார் அளித்துள்ளார்.அதில் மு.க.ஸ்டாலினை விசாரிக்க வாய்ப்புள்ளது.
நெல்லை எம்.பி ஞான திரவியத்திடம் திமுக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது தி.மு.க.வின் கண்துடைப்பு நாடகம். மணிப்பூர் கலவரம் என்பது நீண்ட நாட்களாக நடந்து வரும் பிரச்சினை.விரைவில் முடிவுக்கு வரும்.
சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு என்பது பொய் வழக்கு. அறநி லையத்துறை அங்கு செல்லவே அதிகாரமில்லை. பீகாரில் நடந்த எதிர்கட்சி கூட்டம் என்பது அமலாக் கத்துறையால் பாதிக்கப் பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற வாய்ப்பில்லை.
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார்?. சீமான் தமிழ் தேசியத்தை கை விட்டால் பா.ஜ.க.வுடன் நெருங்கிவரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள், வக்கீல் சொக்கலிங்கம் தேசிய பொது குழு உறுப்பினர், நாகேசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவர்களுக்கு ஆதார் திருத்த முகாம் நடந்தது.
- 5 வயதை கடந்த மாணவ-மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
மானாமதுரை
மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் ஆதார் அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. எமனேசுவரம், தெ.புதுக்கோட்டை ஆகிய அஞ்சலகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ளவும், பெயர், முகவரி, புகைப்படம், கைரேகை, கைப்பேசி எண் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யவும் 5 வயதை கடந்த மாணவ-மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆசிரியர்கள் செய்தனர். அஞ்சல் துறை சார்பில் வர்த்தக மேலாளர் பாலு, தபால் அதிகாரி தீனதயாளன், தொழில் நுட்ப உத வியாளர்கள் மஞ்சுளா, நந்தினி, செண்பகா தேவி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
- முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
- சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.
காரைக்குடி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, ேபாலீஸ் நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
இதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சிவகங்கை மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காரைக்குடி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.
- தேவகோட்டை அருகே புரவி எடுப்பு விழாவையொட்டி மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
- சின்னஉஞ்சனை கிராமத்தில் அனுசரிக்கப்பட உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சின்னஉஞ்சனை கிராமத்தில் 1979-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி அன்று நடை பெற்ற புரவி எடுப்பு விழா வில் உயிர்நீத்த 5 பேரின் நினைவாக சின்னஉஞ்சனை கிராமத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து 44-வது ஐவர் தினம் நாளை (28-ந்தேதி) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் சின்னஉஞ்சனை கிராமத்தில் அனுசரிக்கப்பட உள்ளது.
இதைெயாட்டி பால்குடம் மற்றும் பூத்தட்டு நிகழ்ச்சி சின்னஉஞ்சனை கிராமத்தில் நடைபெற உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு நாளை (28-ந்தேதி) ஒருநாள் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடை கள் 7501 (ஆராவயல்), 7521 (உஞ்சனை) மற்றும் 7603 (நரசிம்மபுரம்) ஆகிய 3 மட்டும் மூடப்படும்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- மானாமதுரை பகுதியில் கோவில் திருவிழாவிற்கு குதிரைகள் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
- மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அதிக அளவில் மண்பாண்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு முழுவதும் மண்பாண்ட தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அரசு சார்பில் புவிசார் குறியீடு கிடைத்து உள்ளதால் மானாமதுரை மண்பாண்ட பொருட்க ளுக்கு பொதுமக்களிடம் மவுசு கூடி உள்ளது. மண்பாண்ட பொருட்களில் சமைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என நம்பபடுவதால் தினமும் மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான மக்கள் உற்பத்தி விலைக்கு மண்பாண்ட பொருள்களை வாங்கி செல்கின்றனர். இங்கு சீசனுக்கு ஏற்ற மண்பாண்ட பொருட்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மானாமதுரை சுற்றி உள்ள கிராமங்களில் மழை வேண்டி விவசாயம் செழிக்க குதிரை எடுப்பு விழாக்கள் ஆடி, ஆவணி மாதத்தில் நடைபெறும். இந்த திருவிழாவிற்காக ஏராளமான குதிரை சிலை, அய்யனார், கருப்பு, அம்மன் மற்றும் குழந்தை பொம்மை சிலைகள் செய்யும் பணியில் மண்பாண்ட தொழி லாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயார் செய்யப்படும் குதிரை மற்றும் சுவாமி சிலைகளை திருவிழா நடைபெறும் முதல் நாள் மானாமதுரையில் இருந்து திருவிழா நடைபெறும் கிராமம் வரை வான வேடிக்கையுடன் ஊர் வலமாக செல்வார்கள். கிராமங்களில் நடைபெறும் கோவில் விழாவிற்காக தற்போது மானாமதுரை பகுதியில் குதிரைகள் சுவாமி சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது.
- மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
- சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றன.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சிவகங்கை சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களும், அண்ணா சிலை அருகே வாடகை கட்டிடத்தில் சார்பு நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்படும் கட்டிடத்துக்கு அருகிலேயே நீதித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அப் துல்குத்தூஸ், மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இவர்கள் நீதிமன்ற அலுவல் பணிகளை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சிவகங்கை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், சார்பு நீதிபதி கீதா, மானாமதுரை நீதிமன்ற நீதிபதி அருண் பாண்டியன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.
முன்னதாக, நீதிபதிகளை மானாமதுரை வக்கீல்கள் சங்க தலைவர் கணேசன், செயலர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையிலான வக்கீல்கள் வரவேற்றனர்.
- காரைக்குடி, தேவகோட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

புதுவயல் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடந்த பேரணி.
காரைக்குடி
காரைக்குடியில் உட்கோட்ட போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கினார். வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி கண்ணதாசன் மணி மண்டபத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக சென்று மீண்டும் கண்ணதாசன் மணி மண்ட பம் வந்தடைந்தது.
காரைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விடுதலை எனும் பெயரில் குழு ஒன்றை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
புதுவயல் கல்லூரி
புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் பேரணி நடந்தது. கல்லூரி பொருளாளர் முகமது மீரா, சாக்கோட்டை சப் -இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் தாளாளர் மற்றும் மற்றும் முதல்வர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.
இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். புதுவயல், சாக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து மேட்டுக்கடை பஸ் நிலையம் வரை பேரணி நடந்தது.

தேவகோட்டையில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பிரசாரம்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆலோசனை யின் பேரில் ேதவ கோட்டையில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அழகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, அன்சாரி உசேன், போலீசார், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். யூனியன் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்நிலையம் வழியாக தியாகிகள் பூங்கா வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.






