வீட்டின் முன்பு பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

இளையான்குடி அருகே வீட்டின் முன்பு பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டின் முன்பு பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு
Published on

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி நாகவள்ளி (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்றிருந்தனர். இதை பார்த்த நாகவள்ளி அவர்களிடம் விசாரித்தார்.

அப்போது அவர்கள் அந்த பகுதியில் திருட வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகவள்ளி இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். உடனே மர்மநபர்கள் நாகவள்ளியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து நாகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு ேபான்றவை அடிக்கடி நடந்து வருகிறது. பூட்டி இருக்கும் வீட்டை ேநாட்டமிடும் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டுவதும், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com