என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்வி கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • புதிதாக விண்ணப்பித்துள்ள 71 மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவு கள் 2 வாரங்களில் கிடைக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    மாணவர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, கலெக்டர் ஆஷா அஜித், கார்த்தி சிதம்பரம் எம்.பி., வழங்கினர்.

    பி்ன்னர் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு 2 சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த 5-ந்தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் 39 மாணவர்களுக்கு ரூ.2.57 கோடி மதிப்பில்கடன் ஆணைகள் வழங்கப்பட்டது.37 மாணவர்களுக்கு ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப் பம் பெறப்பட்டது.

    காரைக்குடி சிறப்பு முகாமில் 65 மா ணவர்களுக்கு ரூ.6.59 கோடி மதிப்பில் கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34 மாணவர்கள் ரூ.் 1.73 கோடி மதிப்பில் புதிய கல்வி கடனுதவி பெற, விண்ணப்பித்துள் ளனர்.

    மொத்தமாக 104 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்துள்ள 71 மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவு கள் 2 வாரங்களில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
    • கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகர் காலனியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் விக்கி (வயது 26). சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் விக்கியை தனியாக பேச அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் விக்கியை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதில் அவர் படுகாயமடைந்தார். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட விக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததோடு கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர். கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

    • தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவிகளுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் உடற்கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அஹமது கான் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் நைனா முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி களுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
    • கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் முடிவுற்ற சுகாதார திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் பெரிய கருப்பன், சுப்பிரமணியன் கலந்து கொண்டு பயன்பாட் டிற்கு திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் இளையான்குடி ஆகிய பகுதிகளில், ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு, செவிலியர் குடியிருப்பு, துணை செவிலியர் மற்றும் தாதியர் பயிற்சிப்பள்ளி கூடுதல் விடுதி, ஆய்வக கூடுதல் கட்டிடங்கள் ஆகியவைகளை ஒருங்கி ணைத்து, இந்நிகழ்ச்சியின் வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென புதிய கட்டி டங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவம் மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவு கட்டிடமும், இது தவிர ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முத்தனேந்தல் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடமும், ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் செஞ்சை - நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் முத்துப்பட்டிணம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் தேவகோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாரநாடு, விராமதி, புளியால் ஆகியவைகளில் தலா ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 6 துணை சுகாதார நிலை யங்கள் மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தை கள் பிரிவு கட்டிடம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம் ஆகிய மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், மாங்குடி எம்.எல்.ஏ., ஆவின் பால்வள தலைவர் சேங்கை மாறன், பிரான்மலை ஊராட்சி மன்றத்தலைவர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழடி ஊராட்சியில் இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழடிஊராட்சியில் பாண்டிய மண்டல பேரமைப்பு மற்றும் வைகை உழவர் பிரிவு பசுமை பூமி இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு விதைதிருவிழா நடந்தது. சிவகங்கை அரசுமருத்துவ கல்லூரி டாக்டர் சரோஜினி தொடங்கி வைத்தார். கீழடி ஊராட்சி தலைவர் வெங்கிட சுப்பிரமணியன் வரவேற்றார். அருட்தந்தை ஜெகத்கஸ்பர், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், தாளான்மை ஆசிரியர் பாமயன் ஆகியோர் இயற்கை பாதுகாப்பு பற்றியும் பாரம்பரிய நெல் விதைகளை பற்றி பேசினார்கள்.

    விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள், பொதுமக்களுக்கு தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. பாரம்பரிய அரிசி வகைகளில் தயாரான உணவுகள் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகள், வேளாண் பொருள்கள், இயற்கையான மருத்துவ குணமுடைய தாவரங்கள், சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடந்தது. முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் குதிரையேற்ற பயிற்சி தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி முதல்வர் கருணாநிதி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி விசாலயன் கோட்டை சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவ னத்தில் சேதுபாஸ்கரா குதிரை ஏற்ற பயிற்சி பள்ளி தொடக்க விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கல்லூரி தாளாளர் சேது குமணன் வரவேற்று நினைவு பரிசுகளை வழங்கினார். கவுரவ விருந்தினர்களாக காரைக்குடி 9 -வது தமிழ்நாடு பட்டாலியன் தே.மா.ப கட்டளை அதிகாரி கர்னல் ரஜ்னிஷ் பிரதாப், முன்னாள் அமைச்சர் தென்னவன், கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், கோயம்புத்தூர் அலெக்சாண்டர் குதிரை ஏற்ற கழக நிறுவனர் சக்தி பாலாஜி, கூட்டுறவு பால் உற்பத்தி சங்க தலைவர் சேங்கை மாறன், சிங்கப்பூர் தொழிலதிபர் துவார்.சந்திரசேகர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் நெடுஞ்செழியன், குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், தேவகோட்டை நகர செயலாளர் பாலா, திருப்புத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மாவட்ட மாணவரணி ராஜ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், திருப்புத்தூர் ஒன்றிய இளைஞரணி புதூர்.கண்ணன், பரணி மற்றும் கல்லூரி பேராசி ரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கருணாநிதி நன்றி கூறினார்.

    • கல்லூரி மாணவர்கள் 39 பேருக்கு ரூ.2.57 கோடி கல்விக்கடன் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
    • தகுதியான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாண வர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்வி கடன் முகாம் கள் நடத்திட திட்டமிடப்பட் டது. அதன் தொடக்கமாக சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம் தொடங் கியது. இம்முகாமில் விண் ணப்பித்த மாண வர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக் கப்பட்டு அதன்படி நேற்றைய தினம் மொத்தம் 39 பேருக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் ஆணை–கள் வழங்கப் பட்டுள்ளது.

    மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட 37 மா–ணவர்கள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற் கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதி யான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவு களை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள் ளது. இதேபோன்று வருகின்ற 8-ந்தேதி அன்று காரைக்குடி கண்ணதாசன் மணி மண்ட பத்திலும் மா வட்ட அளவி லான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது. எனவே தற்போது பயன் பெற்றுள்ள மாணவர்களும், தங்களை சார்ந்தோர்களிடம் எடுத்து ரைத்து, பயன்பெற செய்வ தற்கான நடவடிக்கை–களில் ஈடுபடவேண்டும்.

    மேலும் கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் சிவ கங்கை சுற்று வட்டா ரத்தில் இயங்கும் 18 வங்கி களின் மேலாளர்கள் கலந்து கொண்டு மாண வர்கள் சமர்ப்பித்த விண்ணப் பங்களை பெற்றுக் கொண்டனர்.

    • பணித்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அரசு அலுவ லர்களும் பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் அமைந்துள்ள பிர சித்தி பெற்ற பணித்துறை விநாயகர் கோவில் அமைந் துள்ளது. சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தின் கட்டுமான பணியின் போது இந்த விநா யகர் கோவில் அரசு அலுவ லர்களால் பிரதிஷ்டை செய் யப்பட்டது.

    40 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறிய கோவிலாக இருந்ததை அகற்றி ஆகம விதிப்படி புதிதாக கட்டப் பட்டது. கட்டுமானப்பணி கள் முடிவடைந்த நிலையில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடை பெற்றது. முன்னதாக கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இரண்டு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாஹூதி அளிக்கப்பட் டன.

    பின்னர் மங்கள வாத்தி யங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத் தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப் பட்டது.

    தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப் பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் அரசு அலுவ லர்களும் பங்கேற்றனர்.

    • வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி வட்டார வெள்ளாளர் வ.உ.சி அறக் கட்டளை மற்றும் காரைக் குடி வட்டார வெள்ளாளர் சங்கம் இணைந்து நடத்தும் 37-ஆம் ஆண்டு விழா மற்றும் தியாகச்செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்தநாள் விழா காரைக்குடியில் நடைபெற்றது. வ.உ.சி அறக்கட்டளை பொருளாளர் ராஜமாணிக்கம்பிள்ளை வரவேற்றார். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங் கத்தின் தலைவர் சேவுகன் பிள்ளை தலைமை வகித்தார்.

    மதுரை மாருதி குரூப்ஸ் நிறுவனர் மாருதி பாலகிருஷ்ணன் பிள்ளை வ.உ. சிதம்பரனார் படத்தை திறந்து வைத்து பேசினார். திருச்சி இந்தியன் வங்கியின் மேனாள் மண்டல மேலாளர் சோமையா பாரதி பிள்ளை பரிசுகளை வழங்கினார். வ.உ.சி அறக்கட்டளையின் தலைவர் சபாபதி பிள்ளை, செயலாளர் முத்து ராமலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மணிசங்கர் பிள்ளை, முல்லை கொடி உள்ளிட்டோர் பலர் பேசினர். காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கத்தின் செயலாளர் கருப்பையா பிள்ளை நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தின ஊர்வலம் நடந்தது.
    • இந்த கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் உலக கடிதம் எழுதும் தினத்தையொட்டி ஊர்வலம் நடந்தது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள வேலுநாச்சியார் சிலை முன்பு ஊர்வலம் தொடங்கியது. நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று வண்ண கையெழுத்துகளால் எழுதப்பட்ட கோரிக்கை மனு கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.

    • ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில்ன பவர் டில்லர், பவர் வீடர் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எந்திரங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் பயிர் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கும் கூடுதலாக ரூ.13 ஆயிரத்து 500 கோடி பயிர் கடன்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.

    பயிர் கடன் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் கலெக்டர், இணைப்பதிவாளரை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை எந்தியரமயமாக்கல் திட்டம் 2023-24-ன் கீழ் மானிய விலையில் பவர் டில்லர், பவர் வீடர் எந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் விழா திருப்பத்தூர், மானாமதுரையில் நடைபெறுகிறது.

    அதில் திருப்பத்தூரில் நடைபெறும் விழாவின் மூலம் 68 விவசாயி களுக்கும் மானாமதுரையில் நடைபெறும் விழாவின் மூலம் 77 விவசாயிகளுக்கும் என மொத்தம் 145 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் மொத்தம் ரூ.3 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீ்ட்டில் மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் சிறு விவசாயி களுக்கு ரூ.85 ஆயிரம் மானியத்தொகையும், பெரு விவசாயிகளுக்கு ரூ.70 ஆயிரம் மானிய தொகையும் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த விவசாயி களுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மானியத்தொகையும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில்இ திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் முத்துக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு மணப்பெண் வந்தார்.
    • இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள அளவாக்கோட்டையில் அண்ணாமலை சொக்க லிங்கம் என்ற தேவநாத னுக்கும், ஐஸ்வர்யா என்ற கல்யாணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மணமக்கள் மாலை கீழச்சிவல்பட்டி வந்தனர்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான பி.அழகா புரிக்கு, பழமை மாறாத பாரம்பரிய முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டியில், மின் னொளி அலங்காரத்தில், லாந்தர் விளக்குடன் மண மகள் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்றார். கீழச்சிவல்பட்டி யின் முக்கிய வீதிகளை கடந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தரிசனம் புறப் பட்டனர். பி.அழகாபுரி வந்த மணமக்களுக்கு உற் றார் உறவினர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர். இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    ×