என் மலர்
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆனந்த பூபாலன் தலைைம தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறைப்படுத்த வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக உத்தரவிட வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கல்லூரி மாணவிகள் கணக்கெடுத்தனர். அப்போது 15 ஆயிரம் பறவைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி, கொள்ளுக்குடிப்பட்டியில் 17 ஹெக்டர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. இங்கு பிரான்ஸ், சுவீடன், நார்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்துள்ளன.
இந்த பறவைகள் ஆகஸ்டு மாதம் முதல் மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. அதில் நத்தை, கொக்கி நாரை, வாத்து, புள்ளி அழகு வாத்து, கொக்கு, முக்குளிப்பான், நாமகோழி, நைட் ஹெரான், பாம்புதாரா, கூழைக்கடா, மார்களியன், கருநீலஅரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், உண்ணிகொக்கு உள்ளிட்ட பல வகையான பறவைகள் இங்கு உள்ளன.
இந்த பறவைகளின் கணக்கெடுப்பு சரணாலயத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கலை கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர்கள் கோபிநாத், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், 2-ம் ஆண்டு விலங்கியல் துறையை சேர்ந்த 35 மாணவ, மாணவிகள், வனச்சரக அலுவலர் மதிவாணன், சரக பணியாளர்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு குழுவிற்கு 8 மாணவர்கள் வீதம் 4 குழுக்களாக பிரித்து கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 57 வகையான பறவைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டது. சரணாலயத்தில் 15 ஆயிரம் பறவைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன் கூறியதாவது:-
இந்த வேட்டங்குடி பட்டி பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நத்தை கொத்தி, நாரை உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தங்களது இனத்தை பெருக்கி விட்டு மீண்டும் திரும்பி செல்லும். நடப்பாண்டில் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் இங்குள்ள கண்மாய்களில் தற்போது வரை தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. பொதுவாக ஆண்டுதோறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை மட்டுமே வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றது. ஆனால் இந்தாண்டு அதிகளவு மழை காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளது இந்த கணக்கெடுப்பின்படி தெரிய வருகிறது. இதில் அதிகளவு அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்குடி அருகே தந்தையை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் சொர்ணலிங்கம் (வயது 54). இவர் அரியக்குடி ெரயில்வே கேட் அருகே கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் பிரதீப் ராஜா (29).சம்பவத்தன்று பிரதீப் ராஜா தனது தந்தையிடம் மகள்களுக்கு மட்டுமே எல்லாம் செய்கிறாய் எனக்கு ஏதும் செய்யவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது தகராறாக முற்ற பிரதீப் ராஜா அருகில் இருந்த கோழி வெட்டும் கத்தியை எடுத்து தனது தந்தையின் இடது கழுத்து, தலையின் பின்புறத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த சொர்ணலிங்கம் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் ராஜாவை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சாலைகிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுகாதார ஆய்வாளராக மனோஜ்குமார் (வயது 28) என்பவர் உள்ளார்.
சம்பவத்தன்று மனோஜ்குமார், அருண்ஜோஸ்வா, கார்த்திக் ஆகியோர் சாலை கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது முக கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது அதே பகுதியில் உள்ள ஜாகீர் உசேன் என்பவரின் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் விதிமுறைகளை மீறி கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் முக கவசம், சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை.
உடனே மனோஜ்குமார், கூட்டத்தை கூட்டக்கூடாது என ஜாகீர் உசேனிடம் கூறியுள்ளார். அரசு விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன்னை தாக்கியதாக ஜாகீர் உசேன் மீது மனோஜ்குமார் சாலைகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காளையார்கோவில்:
கோயம்புத்தூர் கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அழகிரிசாமி என்பவரது மகன் செல்வராஜ் (வயது38). இவர் கூலி வேலை செய்து வருகிறார். காளையார்கோவில் அருகே உள்ள கண்டனிப்பட்டியைச் சாந்தி (35) என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் மனைவியின் சொந்த ஊருக்கு வந்தவர் காளையார்கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து விட்டு திரும்பிச்சென்றார். அப்போது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜெபத்தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பாச்சேத்தி அருகே மதுபானக் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:
திருப்பாச்சேத்தி பக்கம் உள்ளது பிச்சைபிள்ளையேந்தல் கிராமம். இங்கு அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபான கடையில் கடந்த மாதம் 29-ந்் தேதி இரவு பூட்டை உடைத்து ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள 487 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்தசம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.இந்த திருட்டை கண்டு பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின்பேரில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் எர்சாத், சபரிதாசன், கோடீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் முதல் நிலை காவலர்கள் சரவணன், முத்துப்பாண்டி, காளீஸ்வரன் உள்பட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்தநிலையில் ரகசிய தகவலின்படி கலியாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற ராஜதுரை (வயது27), வேலு (32), திருப்புவனம் பழையூரைச் சேர்ந்த வன்னிமுத்து (27), டி.பாப்பான்குளத்தைச் சேர்ந்த ராஜா என்ற வீரபத்திரன் (31), முத்துகிருஷ்ணன் (38), பிரகாஷ் (18), பாண்டி (20), பிரபுதேவா (26), மேலூர் தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தசாமி (26) ஆகிய 9 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் மதுக்கடையில் திருடியது தெரிய வந்துள்ளது.
இவர்களிடம் மேலும் தொடர்ந்து விசாரணை செய்ததில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து 16 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கை கண்டுபிடிக்க சைபர் கிரைம் சப்-இன்ஸ் பெக்டர் சுரேந்தர் மற்றும் போலீஸ்காரர்களும் திருப்பாச்சேத்தி காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் அசோக்குமார் ஆகியோரும் விசாரணையில் ஈடுபட்டு இருந்தனர்.
மகனின் காதணி விழாவுக்காக கோவிலில் 108 கிடாய் வெட்டி சீமான் விருந்து வைத்தார்.
காளையார்கோவில்:
காதணி விழா சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி் ஒருங்கிணைப்பாளர் சீமான் மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடந்தது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது சீமான் கூறியதாவது:-
எனது மகன் காதணி விழாவிற்காகவும், குலதெய்வ வழிபாட்டிற்காகவும் இங்கு வந்தோம். 108 கிடாய் வெட்டி விருந்து வைத்து விழா நடத்தி மகிழ்ச்சியோடு நிற்கிறேன்.
விவசாயிகள் கடனாளி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெல் வாங்கி விற்பவனும், தவிடாக்கியவனும் கூட பணக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். விளைவித்தவன் கடனாளி ஆக காரணம் என்ன?. ஒவ்வொரு முறையும் விவசாய கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே ஆகிறான். அடிப்படையில் பிரச்சினை இருக்கிறது. உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாத நிலையை மாற்றவேண்டும்.
பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தது வெறும் வெற்று அறிவிப்பு தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை பணியை தொடங்கினார்கள் வந்ததா?. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் என்ன செய்தார்கள். ஒரு வெற்று அறிவிப்பு, பசப்பு வார்த்தைகள் தான் கூறப்பட்டு உள்ளது. நிதி இருக்கிறது என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை ஏன் நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு செய்வதெல்லாம் ஒரு ஏமாற்று வேலை. தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வெற்றி நடைபோடும். பெட்ரோல், டீசல் விலை குறித்து சுப்பிரமணியசாமி சொன்னதுபோல ராவணன் நாடு, சீதா நாடுகளில் எல்லாம் விலை குறைவா இருக்கு. ராமன் நாட்டில் விலை ரொம்ப கூடுதலாக இருக்கிறது. எல்லாம் தனியார்மயம் ஆக்கியதால் அவர்களுக்கு நினைத்த நேரம் விலையேற்றுவது வாடிக்கையாகி விட்டது.
கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது. இதை மாற்ற வேண்டும். முடிக்கரையில் தொல்லியல் ஆய்வு நடக்க உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த மரம், செடி கொடிகள் மக்கி கரியானதும் இடைவெளியில் புகுந்த காற்று மீத்தேனாகவும் பூமிக்குள் மறைந்துள்ளது. அதுபோலதான் கீழடியும். தொல்லியல் ஆய்வுகளை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பிரபாகரன் கட்டுமானங்கள் நிறுவனர் பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

காரைக்குடியில் நடைபயிற்சி சென்ற பெண் முகத்தில் ஸ்பிரே அடித்து 4½ பவுன் நகையை பறித்து சென்ற 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 49). இவர் சம்பவத்தன்று காலை 6.15 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அரியக்குடி செல்லும் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் குழந்தையம்மாள் முகத்தில் கண் எரிச்சலை தரும் ஸ்பிரேயை அடித்தனர். இதனால் அவர் கண் எரிச்சலுடன் அவதிப்பட்டார்.
உடனே அந்த ஆசாமிகள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்து நகையை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இளையான்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே மாணிக்கவாசக நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 58). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இளையான்குடி புறவழிச்சாலையில் மொபட்டில் சென்றார்.
எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார். இது குறித்து இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூரில் பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்களத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 65) இவருடைய மனைவி செங்காயி(56). கடந்த 9-ந்தேதி இரவு பாண்டி தனது வீட்டு நாயை வெளியே நடைபயிற்சிக்கு அழைத்து சென்று இருந்தார். செங்காயி கணவரின் வருகைக்காக வீட்டில் காத்திருந்தார்.
பாண்டி வீட்டை விட்டு வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம கும்பல் அவர் சென்றவுடன் வீட்டுக்குள் புகுந்தது. அந்த கும்பல் செங்காயின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தது. சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவதாக மிரட்டியதால் செங்காயி சத்தம் போடவில்லை. நகையை பறித்த அந்த கும்பல் வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி சென்று விட்டது.
பின்னர் பாண்டி வந்தவுடன் செங்காயி நகையை மர்ம கும்பல் பறித்து சென்று விட்டதை கண்ணீருடன் கூறி இருக்கிறார். இது குறித்து பாண்டி திருப்பத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மர்ம கும்பல் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரித்தனர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இது தொடர்பாக நாட்டார்மங்கலம் ராமசாமி மகன் குணசேகரன் (வயது 43), திருமங்கலத்தை சேர்ந்த உதயசூரியன் மகன் முத்துக்குமார் (30), வண்டியூர் குரு மகன் மணிகண்டன் (28), அண்ணா நகர் ராசு மகன் ஆனந்த் (35), ஆனையூர் ராமமூர்த்தி மகன் பூபதி (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதானவரிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பொதுமக்கள் பாராட்டினார்கள்.
பயிர் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று கல்லல் அருகே நடந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
கல்லல்:
காரைக்குடியை அடுத்த கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்யலூர் ஊராட்சி கூத்தலூர் மற்றும் வாரிவயல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
வாரிவயல் கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50லட்சம் மதிப்பீட்டில் நாடகமேடை கட்டுவதற்கான பூமி பூஜைக்கு அமைச்சர் பாஸ்கரன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். பொங்கல் விழாவை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
தற்போது விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி உள்ளார். அதேபோல் இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கூட்டுக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்த உத்தரவிட்டு தற்போது அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டமும் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு காரணம் அவர் சாதாரணமான ஒரு விவசாயியாக இருந்து முதல்-அமைச்சராக வந்துள்ளதால் ஏழ்மையில் உள்ளவர்களின் கஷ்டம் என்ன என்பது அவருக்கு நன்றாக தெரிந்துள்ளது. அதனால்தான் இந்தியாவில் எந்தவொரு முதல்-அமைச்சரும் செய்யாத திட்டமான குடிமராமத்து திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்து இன்று தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கண்மாய்களில் தண்ணீர் தேங்கி விவசாயம் செழித்துள்ளது. இதற்கு அவர் தான் முதல் காரணமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொன் மணிபாஸ்கரன், துணைத்தலைவர் சரஸ்வதி, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபரமேஸ்வரி, உதவி பொறியாளர் வீரப்பன், தேவபட்டு ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார், ஒன்றிய மேற்பார்வையாளர் சகுந்தலா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாதாள சாக்கடை திட்ட பணியால் பழுதான சாலைகளை சீரமைக்க கோரி காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சமையல் செய்யும் போராட்டம் நடத்தினார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி செஞ்சை பகுதியில் இருந்து தேவகோட்டை ரஸ்தா பகுதி, நாச்சுழியேந்தல், வைத்திலிங்கபுரம், கணேசபுரம், சத்தியாநகர் உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணி முடிந்தும் சாலை போடவில்லை. அங்கு சாலை குண்டும்-குழியுமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.
இந்த நிலையில் சேதமான சாலைகளை சீரமைக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
பின்னர் நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.. இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவதற்காக நுழைய முயன்றபோது காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அதையும் மீறி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காலதாமதம் ஆனதால் மதியம் 12.30 மணிக்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு கியாஸ் சிலிண்டர், அடுப்பு, காய்கறிகள், தண்ணீர் ஆகியவற்றை கொண்டு வந்து சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பாதாள சாக்கடை திட்ட பணியால் சேதமான சாலைகளை ஒரு மாத காலத்திற்குள் சீரமைப்பதாக எழுத்து பூர்வமாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.