என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் வளர்ந்து வரும் பகுதியாகும். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அதிக அளவிலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்பவர்களும் இந்தப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
ராம்நகர், தில்லைநகர் முதல் வீதியில் சசிகுமார் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் திருவாடானை அருகே உள்ள அரநூற்றுவயல் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சசிகுமார் ஆண்டாவூரணியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஜோடி வெள்ளி கொலுசுகளும், ரூ. 20 ஆயிரமும் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ரமேஷ், ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சிவகங்கை கைரேகை நிபுணர் குழுவினர் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து தேவகோட்டை ஆறாவயல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம்நகர் பகுதியில் அதிக அளவில் அரசு அதிகாரிகள் வசித்து வருவதால் பகல் நேரங்களில் வீடுகள் பூட்டியே கிடக்கும். இதனை பயன்படுத்தி பகல் நேரத்தில் வீட்டை உடைத்து கொள்ளையர்கள் பொருட்களை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரிகள் அதிக அளவில் வசித்து வரும் இந்தப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமிராக்கள் வைக்க அப்பகுதி மக்களை கேட்டுக் கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சந்திரா. இவர்கள் இன்று பக்கத்து தெருவில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வீட்டில் இருந்து நடந்து சென்றனர்.
முத்தூரணி பள்ளி பகுதியில் தம்பதியினர் நடந்து வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சந்திராவை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 14 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் வந்து சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு சிம்ம வாகனம், நாக வாகனம், தங்க மூஷிக வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.. 6-ம் திருவிழாவான நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கோவிலில் உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் மற்றொரு சப்பரத்தில் சூரன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சூரனை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரருடன், வெள்ளி யானை வாகனத்தில் தந்தத்துடன் வந்த கற்பகவிநாயகர் இரவு 7.10 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கற்பகவிநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
கொரோனா தொற்று காரணமாக 9-ம் திருநாள் அன்று நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் அருள்பாலிக்கிறார். பின்னர் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 4, 5, 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன.
தற்போது 2021-ம் ஆண்டுக்கான 7-ம் கட்ட அகழாய்வு மாநில தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. இதில் 6, 7-ம் கட்ட அகழாய்வுகள் கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

ஆசிரியை நிறைமதி கிகி ஜாங், சீனராக இருந்தாலும் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். அதனால்தான் தனது பெயரை நிறைமதி என மாற்றி இருக்கிறார். தமிழகத்துக்கு இவர் ஏற்கனவே வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அதன்பின்பு தமிழ் கற்க தொடங்கினார். சீன வானொலியில் தமிழ் பிரிவிலும் பணியாற்றியவர். அதன்பின்புதான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாகி, தமிழ் கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அருகே உதயம் நகரில் வசித்து வருபவர் துரைராஜ். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 31-ந்தேதி துரைராஜூக்கு உடல்நிலை சரியில்லாமல் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். துரைராஜின் மகன் முத்துக்குமார் தனியார் வங்கியில் இருந்து 2.25 லட்சம் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு பாண்டிச்சேரி சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் பெட்டகத்தில் வைத்து இருந்த 40 சவரன் நகை 2.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
காலை வீட்டிற்கு வந்த முத்துக்குமார் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பள்ளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்துவர வேண்டும். வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்தது. இந்த விதிகள் சரிவர பின்பற்றப்படுகிறதா? என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் சிவகங்கை மருது பாண்டியர் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையில் தமிழ்ப்பாடம் கற்பிக்கப்பட்டது.
உடனே அந்த வகுப்பறைக்கு சென்ற கலெக்டர், மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம் வகுப்பெடுத்தார். அத்துடன் மாணவி ஒருவரை அழைத்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், நேர்முக உதவியாளர் மகேந்திரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் நகராட்சி பள்ளிகள் சேர்த்து மொத்தம் 294 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 5,443 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதேபோல் விடுதி மாணவ-மாணவிகளுக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடி:
உலக கடித தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடிதம் எழுதும் பழக்கத்தின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், வண்ண எழுத்துக்கள் மூலம் தமிழ் தாய் உருவில் எழுதப்பட்ட கடிதத்தை காரைக்குடியில் உள்ள வீட்டில் இருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம், வாகைகுடிக்கு நடந்து சென்று தனது தாயிடம் விவசாயி சின்ன பெருமாள் வழங்கினார்.
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் கையால் எழுதப்பட்ட கடிதம் நமக்கு வருகிறது என்பதே மிகப் பெரிய பரிசாக எண்ணி கொண்டாடப்பட வேண்டிய விஷயமாக இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு கடிதம் எழுதுவது சந்தோசமான நிகழ்வாகவே இருக்கும் என்கிறார் சின்ன பெருமாள்.
தொடக்கத்தில் சாதாரண பென்சில், பேனாவை கொண்டு எழுத தொடங்கியவர் பின்னர் வண்ண எழுத்துக்களின் மூலம் 6 ஆயிரம் கடிதங்கள் எழுதியுள்ளார்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் படும் துன்பங்களை எழுத்துக்களால் படம் வரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி மக்களின் நியாயமான கோரிக்கைகளை கடிதத்தில் எடுத்துரைத்தார்.
முதலில் சின்ன சின்ன விஷயங்களை எழுதியவர் போகப்போக பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைகளை கடிதங்களாக வரையும் படங்களின் மூலம் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
சாதாரண ஏழை விவசாயியான சின்ன பெருமாள், மக்கள் சார்ந்த பிரச்சினைகளை அக்கறையோடு, அரசின் கவனத்தை ஈர்க்கவும், பாரம்பரியம் மிக்க தமிழை வருங்கால சந்ததியினர் மறக்காத வகையிலும் கடிதம் எழுதும் பழக்கத்தை நூதன முறையில் கையாள்வது தமிழ் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கையை அடுத்துள்ள குட்டிதின்னி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜாங்கம். இவரது மனைவி விஜயராணி.
இவர்களுக்கு அபிராமி, அசோகா, வாசுகி என்கிற 3 மகள்களும், கரன்குமார் என்கிற மகனும் உள்ளனர்.
ராஜாங்கம் தினமும் மது குடித்து விட்டு மனைவி, குழந்தைகளிடம் தகராறில் ஈடுபடுவார். வழக்கம்போல் வீட்டில் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த மனைவி விஜயராணி, கணவன் ராஜாங்கத்தின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அவர் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களின்றி கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்திற்கு அருகில் உற்சவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள்வார்கள். அதன்பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெறும்.
வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் சதுர்த்தி திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பிரகாரத்தை வலம் வருவார்.
இந்த நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.
சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






