என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாயிடம் கடிதத்தை வழங்கிய விவசாயி சின்ன பெருமாள்
    X
    தாயிடம் கடிதத்தை வழங்கிய விவசாயி சின்ன பெருமாள்

    உலக கடித தினத்தையொட்டி 53 கி.மீ. தூரம் நடந்து சென்று தாயிடம் கடிதம் வழங்கிய விவசாயி

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் படும் துன்பங்களை எழுத்துக்களால் படம் வரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி மக்களின் நியாயமான கோரிக்கைகளை கடிதத்தில் எடுத்துரைத்தார்.

    காரைக்குடி:

    உலக கடித தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடிதம் எழுதும் பழக்கத்தின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், வண்ண எழுத்துக்கள் மூலம் தமிழ் தாய் உருவில் எழுதப்பட்ட கடிதத்தை காரைக்குடியில் உள்ள வீட்டில் இருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம், வாகைகுடிக்கு நடந்து சென்று தனது தாயிடம் விவசாயி சின்ன பெருமாள் வழங்கினார்.

    இன்றைய கம்ப்யூட்டர் உலகில் கையால் எழுதப்பட்ட கடிதம் நமக்கு வருகிறது என்பதே மிகப் பெரிய பரிசாக எண்ணி கொண்டாடப்பட வேண்டிய வி‌ஷயமாக இருந்து வருகிறது.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில் டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு கடிதம் எழுதுவது சந்தோசமான நிகழ்வாகவே இருக்கும் என்கிறார் சின்ன பெருமாள்.

    தொடக்கத்தில் சாதாரண பென்சில், பேனாவை கொண்டு எழுத தொடங்கியவர் பின்னர் வண்ண எழுத்துக்களின் மூலம் 6 ஆயிரம் கடிதங்கள் எழுதியுள்ளார்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் படும் துன்பங்களை எழுத்துக்களால் படம் வரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி மக்களின் நியாயமான கோரிக்கைகளை கடிதத்தில் எடுத்துரைத்தார்.

    முதலில் சின்ன சின்ன வி‌ஷயங்களை எழுதியவர் போகப்போக பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைகளை கடிதங்களாக வரையும் படங்களின் மூலம் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

    சாதாரண ஏழை விவசாயியான சின்ன பெருமாள், மக்கள் சார்ந்த பிரச்சினைகளை அக்கறையோடு, அரசின் கவனத்தை ஈர்க்கவும், பாரம்பரியம் மிக்க தமிழை வருங்கால சந்ததியினர் மறக்காத வகையிலும் கடிதம் எழுதும் பழக்கத்தை நூதன முறையில் கையாள்வது தமிழ் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×