என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தவறவிட்ட பணப்பையை மீட்டு கொடுத்த பஸ் நிலைய பொறுப்பாளர்.
    தேவகோட்டை, 

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தத்தணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சித்ரா (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

    இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்து அங்கு சாலையோர உணவகம் நடத்தி வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சித்ரா நேற்று மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். இதற்காக சித்ரா கிராமத்திலிருந்து தேவகோட்டைக்கு அரசு பஸ்சில் புறப்பட்டார்.

    தேவகோட்டை பஸ்நிலையத்தில் அவர் இறங்கினார். அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த பேக்கை அரசு பஸ்சில் தவற விட்டார். அதில் ஒரு 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் இருந்தது.

    பேக்கை எடுக்க செல்வதற்குள் அந்த பஸ் ஆவுடையார்கோயிலுக்கு புறப்பட்டு சென்றது. தன்னுடைய பேக்கை மர்மநபர்கள் திருடிச் சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில்  செய்வதறியாது திகைத்த சித்ரா பஸ்நிலையத்தில் கண் கலங்கியபடி நின்றிருந்தார்.

    இதனை பஸ் நிலைய பொறுப்பாளர் சந்தியாகு பார்த்து சித்ராவிடம் விசாரித்தார். அப்போது அவர் தான் பணப்பையை தவறவிட்ட விவரத்தை கூறினார்.

    இதைத்தொடர்ந்து சந்தியாகு உடனே சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பஸ்சின் பின் இருக்கையில் ஏதேனும் பேக் உள்ளதா? என பார்க்குமாறு கூறினார்.அதன்படி கண்டக்டர் பார்த்தபோது பஸ்சின் பின் இருக்கையில் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

    சந்தியாகு கொடுத்த தகவலின்படி பேக்கை எடுத்துக் கொண்ட கண்டக் டர் சிறிது நேரத்தில் தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பாளர் சந்தியாகுவிடம் ஒப்படைத் தார்.

    பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் பத்திரமாக இருந்தது. இதை பார்த்து சித்ரா நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    பேக்கை தவறவிட்ட சில மணி நேரத்தில் அதனை மீட்க நடவடிக்கை எடுத்த பேருந்து நிலையப் பொறுப்பாளர் சந்தியாகு, அதற்கு உதவியாக இருந்த அரசு பஸ் கண்டக்டர் தமிழரசன், டிரைவர் பாலகிருஷ்ணன், ஊழியர் முத்துக்குமார் ஆகியோருக்கு சித்ரா நன்றி தெரிவித்தார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 8,9 தேதிகளில் நடைபெற உள்ளது என சிவகங்கை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
     தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.  மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திடவும், மாற்றுத்திறனா ளிகளுக்கான அரசின் மற்றத்துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் வருகிற 8ந்தேதி சிங்கம்புணரியிலும்,  9ந் தேதி சிவகங்கையிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.  

    இதில்மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல்,  ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிகடன்  மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    மானாமதுரை முதல் நகரசபை தலைவராக மாரியப்பன் கென்னடி இன்று பதவியேற்றார்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்து சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27வதுவார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி வெற்றி பெற்றார். தற்போது தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் தலைவர் பதவிக்கு மாரியப்பன் கென்னடி அறிவிக்கப்பட்டு உள்ளார். 

    மானாமதுரை நகராட்சி வார்டுகளில் அதிக அளவில் தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளதால் முதல் நகரசபை தலைவராக போட்டியின்றி முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தேர்வானார். அவர் இன்று காலை மானாமதுரை நகராட்சியின் முதல் தலைவராக பதவி யேற்றார். 

    இவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மாவட்டத் தியே முதல் முறையாக மானாமதுரை&சிவகங்கை இடையே மகளிருக்கென தனி பஸ்கள் விட பெரும் முயற்சி செய்தார். தற்போதுவரை பெண்களுக்கு பெரிதும் பயன் உள்ளது. மாரி யப்பன் கென்னடி நகரசபை தலைவராக வந்துள்ளதால் மக்களுக்கு அடிப்படை தேவையான வசதிகள் கிடைக்கும் என மானாமதுரை நகராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 
    சிவகங்கை அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 28 பேர் காயமடைந்தனர்.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள பாலாருடைய ஜய்யனார், காளியம்மன் கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா நடந்தது. 

    இதை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடை பெற்றது. இதனை ராமநாத புரம் மன்னர் குமரன் சேதுபதி, இருமதி துரை கருணாநிதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். 

    முதலில் மேளதாளத் துடன் சென்ற மஞ்சுவிரட்டு திடலில் மாடுகளுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கூட்டமாக திரண்ட இளை ஞர்கள் அதனை பிடிக்க முயன்றனர். சில காளைகள் சிக்கின. பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றது.

    சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகளுக்கு மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப் பட்டது. மஞ்சுவிரட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண் டனர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் 289 காளைகளுக்கு மஞ்சு விரட்டில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப் பட்டது. 15 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  

    மஞ்சுவிரட்டு திடலில் தற்காலிக மருத்துவமனை யில் திருவேம்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்து வர்கள் அழகுதாஸ், மணி கண்டன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வசதியுடன் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

    மஞ்சுவிரட்டில் 25 நபர்கள் காயம் அடைந்தனர். 3 நபர்கள் மேல் சிகிச்சைக் காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேவகோட்டை காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டனர். 

    இருமதி, சக்கந்தி, முட்டக் குத்தி, சிலாமேக வளநாடு, திடக்கோட்டை, மொன்னி, கார்மாங்குடி, பனங்குளம் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும்  எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியர் தெய்வானை வரவேற்றார். 

    1928ம் ஆண்டு பிப்ரவரி 28ந் தேதி இந்திய இயற்பியலாளர் சர்.சி.வி.ராமன், ராமன் விளைவை  கண்டு பிடித்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ந்தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

    மனித நலனுக்காக அறிவியல் துறையில் அனைத்து செயல்பாடுகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை காட்சிப் படுத்த அறிவியல் துறையின் வளர்ச்சிக்காக அனைத்து சிக்கல்களையும் விவாதிக்கவும் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தவும் இது கொண்டாடப்படுகிறது. 

    இந்தியாவில் உள்ள அறிவியல் மனப்பான்மை கொண்ட குடிமக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மக்களை ஊக்குவிப்பதுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் பேசினார். 

    இதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்கள் 115 பேருக்கும் சர்.சி.வி.ராமன் கண்டுபிடிப்புகள் பற்றிய புத்தகங்கள் வழங்கி சர்.சி.வி.ராமன் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அவரின் முகமூடி அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கண்ணகி, சகாயமைக்கேல் சாந்தி, தேவி, நீலகேசி, சுப்புலட்சுமி, மரகதம், மகாலட்சுமி, ராமலட்சுமி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.
    திருப்பத்தூர் அருகே உடும்பை வேடையாடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் திருப்பத்தூர், மானாமதுரை சமூக நல காடுகள் அதிகாரிகளுக்கு ஒன்றிணைத்து ஒரு குழு அமைக்கப்பட்டது. 

    இந்த குழுவில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் திருப்பதிராஜன், சம்பத்குமர், வீரையா அப்துல் ரஹீம் சதீஷ்குமார், பிரகாஷ், உதயகுமார், சாமிக்கண்ணு, கருணாநிதி மற்றும் காவலர்கள் சின்னப்பன், வாசுகி ஞானசேகரன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

    அந்த குழுவினர் திருப்பத்தூர்-கருப்பூர் அருகே உள்ள பகுதியில் பருத்தி கண்மாயில்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த  அடைக்கப்பன் (வயது 65) கையில் உடும்புடன் சென்றார் அவரை பிடித்து விசாரித்தனர். 

    அப்போது அடைக்கப்பன் உடும்பை வேட்டையாடி எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வு செய்தபோது கருப்பையா (65) என்பவர்   முயலை வேட்டையாடி  எடுத்து சென்றார். அவரையும் வனத்துறையினர்  பிடித்தனர். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 
    காலம் காலமாக ரஷியாவுடன் இந்தியா நல்லுறவு வைத்துள்ளதால் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னென்ன உத்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த வி‌ஷயம். சில கவுன்சிலர்கள் பணம் செலவழித்து வெற்றி பெற்று உள்ளனர். தற்போது அந்த பணத்தை எடுப்பதற்காகவே கவுன்சிலர்கள் விலை போகின்றனர்.

    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அந்த கட்சியின் தலைமை சரியில்லாத காரணத்தால், அவர்களின் வாக்கு வங்கியையும் அந்த இயக்கத்தையும் அவர்களால் ஒருங்கிணைத்து தேர்தலிலே செயல்பட முடியவில்லை என கருதுகிறேன்.

    காலம் காலமாக ரஷியாவுடன் இந்தியா நல்லுறவு வைத்துள்ளதால் உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போர் நீடித்தால் ரஷியா மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அரசு அதை சரி செய்ய வேண்டும். இங்குள்ள மருத்துவ படிப்பு முறை சரியில்லாததால்தான் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிறார்கள். எனவே அதிகளவிலான மருத்துவக் கல்லூரிகளை இந்தியாவில் நிறுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை யூனியனில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்துமுடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    இடையமேலூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் கிராமச்சந்தை வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பொதுமக்கள் நாள்தோறும் வந்து பயன்பெறக்கூடிய வகையில் உள்ளதால், போதியஅளவு உள்கட்டமைப்பு வசதிகளுடன் பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடித்திடவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதேபகுதியில் ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவுசெய்து பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், அங்கு பணியாற்றும் பணியாளர்கள் நல்லமுறையில் பராமாரித்து வரவேண்டும். அதன்மூலம் கிராம ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் அளவிற்கு பல்வேறு மரங்களின் மூலம் பலவகையான பயன்கள் கிடைக்கும். எனவே ஊராட்சிபணியாளர்கள் கண்காணித்து பராமரிக்கவேண்டுமென கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் தமறாக்கி சாலையில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் இடையமேலூர் பாசன கண்மாயில் கட்டப்பட்டு உள்ள தடுப்பணையை பார்வையிட்டதுடன், தடுப்பணைக்கு தண்ணீர் வரவுள்ள வரத்துக்கால்வாய் சீர்செய்து எப்பொழுதும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் மழை காலங்களில் வரும் தண்ணீர் கண்மாய்க்கு வருவதுடன், தடுப்பணையில் தண்ணீர் தேங்குவதன் மூலம் விளைநில பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயருவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

    ஒத்தப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள பள்ளிக்கட்டிடங்களை நடப்பு நிதியாண்டில் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அழகமாநேரி ஊராட்சியில் ரூ23லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுவருவதை பார்வையிட்டதுடன், அந்த பணிகளை விரைந்துமுடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அழகமாநேரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவுசெய்து பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். 

    அப்போது மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அதிகளவு நிழல்தரும் மரங்களை நடவுசெய்து பராமரிக்க வேண்டுமென பணியாளர்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தினார். 

    இந்த ஆய்வில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் உதவித்திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினவேல்,  அன்புச்செல்வி, உதவி பொறியாளர் கார்த்தியாயினி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் கடந்தமாதம் 19ந்தேதி நடைபெற்றது. 

    4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 117 வார்டுகளில் 544பேரும், 11 பேரூராட்சிகளில் உள்ள 168 வார்டுகளில் 641 பேரும் போட்டியிட்டனர். பேரூராட்சி வார்டுகளை பொறுத்தவரை கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8வது வார்டில் யாரும் போட்டியிடாததால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. 

    அந்த வார்டை தவிர நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 284 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது-. தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில், வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 


    அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று நடந்தது. 

    நகராட்சிகளை பொறுத்தவரை சிவகங்கையில் 27 வார்டு கவுன்சிலர்கள், காரைக்குடியில் 36 வார்டு கவுன்சிலர்கள், தேவகோட்டையில் 27 வார்டு கவுன்சிலர்கள், மானாமதுரையில் 27 வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 117பேர் பதவியேற்றனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத் தனர். 

    இதேபோல் பேரூராட்சிகளில் இளையான்குடியில் 18 வார்டு கவுன்சிலர்கள், கானாடுகாத்தானில் 12 வார்டு கவுன்சிலர்கள், கண்டனூரில் 15 வார்டு கவுன்சிலர்கள், கோட்டையூரில் 15 வார்டு கவுன்சிலர்கள், நாட்டரசன்கோட்டையில் 12 வார்டு கவுன்சிலர்கள், நெற்குப்பையில் 12 வார்டு கவுன்சிலர்கள், பள்ளத்தூரில் 15 வார்டு கவுன்சிலர்கள், புதுவயலில் 15 வார்டு கவுன்சிலர்கள், சிங்கம்புணரியில் 18 வார்டு கவுன்சிலர்கள், திரும்புவனத்தில் 18 வார்டு கவுன்சிலர்கள், திருப்பத்தூரில் 18 வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 168 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள். 

    மாவட்டம் முழுவதும் வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்க அனுமதியல்லாததால், அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.  கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவை முன்னிட்டு அனைத்து நகராட்சிமற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  
    தேவகோட்டை ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 1040 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் நடந்தது.  தலைவர் பிர்லா கணேசன் தலைமை வகித்தார். ஆணையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பேசுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசு நிதியுடன் ஒன்றியத்தில் 1040 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

    முதல் கட்டமாக 809 வீடுகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றியத்தில் 75 கிலோமீட்டர் அளவில் கிராமப்புறங்களில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். 

    2021 டிசம்பர் மற்றும் 2022 ஜனவரி மாதங்களுக்கான வரவு செலவு கணக்குகளை மன்றத்தின் முன்வைத்த னர். முன்னதாக ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஜெயங்கொண்ட விநாயகர் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    அந்த கோவிலில் காலையில் சிறப்பு பூஜையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்  கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நன்றி கூறினார்.
    மானாமதுரை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த சிவராத்திரி விழாவில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள தஞ்சாகூர் ஜெகதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி தவகோலத்தில் சிவபெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவிலின் பரம்பரை பூசாரிபால சுப்பிரயசுவாமி முன்னிலையில் கூடலூர் மகாசக்தி பீடஸ்தாபகர் சுந்தரமிவடிவேல் தமிழ் முறைப்படி பிரம்ம யாகத்தை நடத்தினார்.

    இதில் மூலிகை பொருள்கள், மிகபெரிய பூசணிக்காய் போட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் மற்றும் நந்திக்கு சிறப்புமகா அபிஷேகமும் தீபாரதனையும் நடந்தது. இதில் ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை பரமக்குடி சாலையில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசி சிவலிங்கத்திற்கு 16 வகையான அபிஷேகம் தீபாராதனை நடந்தது. 

    4 கால பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். வைகை ஆற்றுங்கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல் மேலநெட்டூர் சொர்ணேஸ்வீரர், இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், பூரணசக்கரவிநாயகர், நம்பி நாகம்மாள், சங்குபிள்ளையார், வைகை கரை அய்யனார், இடைகாடர்சித்தர், கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி ஆகிய கோவில்களில் விடியவிடிய நடந்த சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய 2 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த முகாம் நாளை நடைபெறுகிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-&

    அரசின் சேவைகள் பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டுசெல்லும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. 

    அதன் தொடர்ச்சியாக நாளை(2&ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் வேப்பங்குளம் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் செலுவத்தி கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் சிறுகூடல்பட்டி கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் காயாம்பட்டி கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் நாலுகோட்டை கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் எழுநூற்றி மங்களம் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் டி.நெல்முடிக்கரை கிராமத் திலும், இளையான்குடி வட்டத்தில்¢ கீழநெட்டூர் கிராமத்திலும், காளையார் கோவில் வட்டத்தில் வலனை கிராமத்திலும் கணினிபட்டா திருத்தமுகாம்கள் நடைபெற உள்ளன.

    பொதுமக்கள் மேற்கண்ட வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×