என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடுப்பூசி
18 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் 18 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், ஓக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் 23வது கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
முகாம்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகை தந்தவர்களின் எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி முதல் தவணை, 2ம் தவணை செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் தடுப்பூசி மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில் கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநிலம் முழுவதும் துரிதப்படுத்தி, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 18 லட்சத்து 21 ஆயிரத்து 83 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 23வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, மாவட்டம் முழுவதும் 700 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 78,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 45,500 கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 1,23,500 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் பா காத்திட முடியும். எனவே, 18வயதிற்கு மேற்பட்ட, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களும், 2ம் தவணை தடுப்பூசி செலுத்தக்கூடியவர்களும் தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஸ், சிவகங்கை வட்டாட்சியர்தங்கமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






