என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில்வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள் நாளை நடக்கிறது
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறி ப்பில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 445 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துக்களில் காலத்திற்குள் 5 ஆண்டு சுழற்சி முறையில் அனைத்து பஞ்சாயத்துக்களிலும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நல திட்ட பணிகளை அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
    ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் தேர்வு செய்யப்படும் கிராம பஞ்சாயத்துக்களில் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமும் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22ம் ஆண்டு முதல் கட்டமாக அனைத்து வட்டாரங்களிலும் மொத்தம் 68 கிராம பஞ்சயாத்துகளில் இந்த இரு திட்டங்களும் இணைந்து செயல்பட தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 

    இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 68 கிராம பஞ்சயாத்துகளிலும் நாளை (செவ்வாய்கிழமை) அனைத்துத்துறைகளும் இணைந்து கீழ்க்கண்ட வட்டங்களில் உள்ள கிராமங்களில் ஒருங்கிணைந்த சிறப்பு நலத்திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 

    அதன்படி, தேவகோட்டை வட்டத்தில் திருமணவயல், கீழசனி, நாகாடி, சிறுவதி, கண்டதேவி, திருவேகம்பத்தூர், வீரை குருந்தனக்கோட்டை ஆகிய கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் காரைக்குளம், தடியமங்களம், தாய மங்களம், சாலைக்கிராமம், நகரகுடி, பெரும்பச்சேரி ஆகிய கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் சிரமம், சிலுக்கப்பட்டி, மேலமருங்கூர், இலந்தக்கரை, முத்தூர்வாணியங்குடி. மல்லல், அதப்படக்கி, அ.வேலங்குளம் ஆகிய கிராமங்களிலும், கல்லல் வட்டத்தில் அ.சிறுவயல், சிறுவயல், அ.கருங்குளம். பொய்யாலூர், குருந்தம்பட்டு ஆகிய கிராமங்களிலும், கண்ணங்குடி வட்டத்தில் கண்ணங்கடி, பூசலக்குடி, களத்தூர் ஆகிய கிராமங்களிலும், மானாமதுரை வட்டத்தில் மாங்குளம், செய்களத்தூர், கல்குறிச்சி, கீழ்ப்பசலை,  முத்தனேந்தல், மேலப்ப சலை ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 

    அதேபோன்று எஸ்.புதூர் வட்டத்தில் வலசைப்பட்டி, மசுண்டப்பட்டி, செட்டிக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும், சாக்கோட்டை வட்டத்தில் சங்கராபுரம். சிறுகப்பட்டி, செங்கந்தங்குடி. ஜெயங்கொண்டான், நாட்டு ச்சேரி. அமராவதிபுதூர். ஆகிய கிராமங்களிலும், சிங்கம்புணரி வட்டத்தில் எஸ்.மாம்பட்டி, பிரான்மலை, எம்.சூரக்குடி, வகுத்தெழுவான்பட்டி ஆகிய கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் வாணியங்குடி. சக்கந்தி, மாங்குடி தெற்குவாடி, காஞ்சிரங்கால், ஆலங்குளம், அலவாக்கோட்டைப் திருக்கோஷ்டியூர். இ.மாம்பட்டி. பூலாங்குறிச்சி, திருக்கோலக்குடி, காரையூர், எ.வேளங்குடி, ஏனாதி - தேளி, கலுக்கார்கடை,  பிரமனூர், பூவந்தி, பொட்டபாளையம், கிழத்தெறி ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள்  நடத்தப்பட உள்ளன. 

    மேலும் வேளாண்மைத்து றையின் சார்பில் மண் மாதரி ஆய்வு, தரிசுநில மேம்பாடு, தென்னங்கன்றுகள், தார்பாலின், ஸ்பிரேயர் பயறு விதைகள் வழங்குதல், தோட்டக்கலைத்துறையின் சார்பில் காய்கறி விதைகள் மற்றும் கன்றுகள் வழங்குதல், பழக்கன்றுகள் வழங்குதல், நிழல் வலை கூடம் அமைக்க பயனாளிகள் தேர்வு செய்தல், வருவாய்த்து றையின் சார்பில் பட்டா மாறுதல், சிறு / குறு விவசாயிகள் சான்று வழங்குதல், கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் ஆய்வு செய்தல், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பண்ணைக்குட்டை அமைத்தல், கிராம இணைப்பு சாலைகள் அமைத்தல், உலர் களங்கள் தேர்வு செய்தல், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், பண்ணை எந்திரங்கள்.

    சூரிய ஒளி பம்ப்செட்கள் பயனாளிகள் தேர்வு செய்தல், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடை சிகிச்சை சிறப்பு முகாம், தீவன பயிர் விதை விநியோகம் செய்தல், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயிர் கடன், கிசான் கடன் அட்டை பயனாளிகள் தேர்வு செய்தல், மகளிர் திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம், இயற்கை வேளாண்மை, உற்பத்தி யாளர்கள் குழுக்கள் தேர்வு செய்தல், நீர் வள ஆதாரத் துறையின் சார்பில் கண்மாய்கள் தூர்வாருதல் கட்டமைப்பு ஆய்வு பணிகள் செய்தல் ஆகியத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, புதிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

    இந்த முகாம்களில் பட்டு வளர்ச்சித்துறை, கிராமத்தொழில் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு திட்டங்களை செயல்படுத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே, இந்த முகாம்களில் தொடர்புடைய கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனடையலாம்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள  தரியம்பட்டி கிராமத்தில் வழிவிடும் விநாயகர், வடக்கு வாசல் செல்வி அம்மன், கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

    இதையொட்டி கடந்த 6-ந்தேதி மங்கல இசையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல் கால யாக பூஜை ஆரம்பமானது. அன்று இரவு 8 மணி அளவில் பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால,  நான்காம் கால யாக பூஜை நடைபெற்று   வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை யாகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றினர். 

    அதனையடுத்து மூலவருக்கு கலசத்தில் இருந்த புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது.  பக்கத்து கிராமத்தினர் பலர் கோவிலுக்கு சீர் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். பின்னர் குல தெய்வத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 

    விழாவில் மாதவன் அம்பலம், முருகன் அம்பலம் , சாமிநாத குருக்கள், தண்டாயுதபாணி குருக்கள், ஊர் முக்கியஸ்தர் பரமசிவம்  உள்ளிட்ட திரளான கிராம மக்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தை யொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    கொரோனா இல்லாத தமிழகமாக உருவெடுத்து வருவதாக அமைச்சர் பேசினார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி, அண்ணா சிலை - பஸ்  நிலையம் அருகில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில்  அமைச்சர் பெரியகருப்பன்  தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் கடைக்கோடிப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும். பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, தமிழகம் முழுவதும் வளர்ச்சிப்பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு ள்ளார்.  அவர்  ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், 5 முத்தான் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    நேற்றையதினம் சிறுவ ர்கள், மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், ஊட்டச்சத்துக்களை வழங்கிடும் பொருட்டு காலை உணவுகளையும்  சேர்த்து வழங்கிடுவது போன்ற புதிய 5 திட்டங்களுக்கு கையெழுத்து இட்டுள்ளார். இதுபோன்ற தமிழகத்தில் அனைத்துத்துறைகளையும் மேம்படுத்துவதற்கென அனைத்து நடவடிக்கை களையும் சிறப்பாக மேற்கொண்டுள்ளார். 

    குறிப்பாக சுகாதாரத்து றையில் மத்திய அரசும் பாராட்டுகின்ற வகையில், செயல்பட்டு இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  முதலமைச்சர் மேற்கொண்ட கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொரோனா அல்லாத தமிழகமாக உருவெடுத்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில் கொண்டு, பொதுமக்களை பேணிக்கா த்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடை பெற்று வருகிறது. 
    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 16.1.2021 முதல் 4.5.2022 வரை மொத்தம் 20,30,517 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 10,88,824 நபர்களுக்கும் செலுத்தப்ப ட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரம்)   ராம்கணேஷ், திருப்பத்தூர் ஒன்றிய தலைவர்  சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவர் கோகிலா நாராயணன், துணைத்தலைவர் கான்முகம்மது, வட்டார வளர்ச்சி அலுவலர்  செந்தில்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    தேவகோட்டையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரைவேலு (வயது 60) விவசாயி. இவருக்கு விஜயராணி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.

    சித்திரைவேலுவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நாகூர் பிச்சை. சித்திரைவேலு மற்றும் நாகூர்பிச்சை ஆகிய இருவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று இரவும் தகராறு நடந்துள்ளது.

    இருவரது குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நாகூர்கனியின் மகன் செல்வம் (38) கீழே கிடந்த கட்டையால் சித்திரைவேலுவை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சித்திரைவேலு தாக்கப்பட்டது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் செல்வம் மீது கொலைமுயற்சி வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சித்திரைவேலு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து சித்திரை வேலுவை அடித்துக்கொன்ற செல்வத்தை கைது செய்தனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செல்வம் சமீபத்தில் தான் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். மேலும் அவரது மனைவிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிங்கம்புணரி அருகே சமத்துவபுரம் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி, கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுர கட்டுமான பணிகளை  கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கோட்டை வேங்கைப்பட்டி ஊராட்சி யில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில்புதிதாக 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பெரியார் நினைவு சமத்துவபுரம் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டுத்திடல் போன்ற அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 

    புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பயனாளிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன. இங்கு முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள்,   பொதுமக்க ளுக்கு தேவையான அத்தியாவ சியப்பொருட்கள் வழங்குவதற்காக பொது விநியோகக்கடை, விளை யாட்டுத்திடல், வீடுதோறும் வீட்டுக்காய்கறிகள் தோட்டம் அமைத்தல், மரக்கன்றுகள் வளர்த்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன்,  ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சிவரஞ்சனி, சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    சாக்கோட்டை யூனியன் கூட்டம் தலைவர் சரண்யா தலைமையில் நடந்தது.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி யூனியன் கூட்டம் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் கேசவன் முன்னிலை வகித்தார்.மேலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்றார்.  5-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் சுப்பிரமணியன் பேசுகையில், ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் நமது யூனியனுக்குட்பட்ட பகுதியில் தொடங்கியதை வரவேற்கிறேன். தேசிய நெடுஞ்சாலையில் அலு–வலகம் அமைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. 

    எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். எனது வார்டில் புதிதாக போடப்பட்ட சாலைகளின் மட்டம் வீடுகளின் தரையைவிட உயரமாக உள்ளதால் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார்.6-வது வார்டு உறுப்பினர் சொக்கலிங்கம் கூறுகையில், எனது கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில 20 அங்கன்வாடி பள்ளிகள் உள்ளன.அதில் சில நாடக மேடைகளிலும், மரத்தடிகளிலும், மோசமான கட்டங்களிலும் செயல்படுகின்றன. எனவே விபரீதம் ஏற்படும்முன் புதிய கடிடங்களை கட்ட வேண்டும் என்றார்.

    1-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் பேசும்போது, பள்ளத்தூரில் இருந்து கடியாபட்டி செல்லும் சாலை வனப்பகுதியில் வருவதால் சாலை அமைத்து 20 வருடங்களாகி விட்டது.முறையான அனுமதி வாங்கி சாலையை அமைக்க வேண்டும் என்றார். ஆணையாளர் பதிலளிக்கையில், மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி பள்ளிகள் குறித்த விவ–ரத்தை கேட்டுள்ளது.விரைவில் பள்ளிகளின் குறைகள் சரிசெய்யப்படும்.பத்திரப்பதிவு அலுவ–லகத்திற்கு சர்வீஸ் ரோடு அமைக்க ஆவண செய்யப்படும். அங்கு மகளிர் திட்டம் மூலம் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது என்றார்.

    தலைவர் சரண்யா செந்தில்நாதன் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்.அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும்.கோடைகாலமாக இருப்பதால் உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் நீர், மோர்ப்பந்தல்களை பொதுமக்களுக்காக அமைக்க வேண்டும்.  மின்சார குறைபாடு உள்ளிட்ட பிற குறைகள் சரி செய்யப்படும் என்றார்.

    இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிர மணியன், துணை தலைவர் கார்த்திக் உறுப்பினர்கள் சுப்பிர மணியன், சொக்கலிங்கம், ராமச்சந்திரன், தேவி மீனாள், யசோதா, தமிழ்ச்செல்வி, ஜெயந்தி, ரேவதி, திவ்யா பொறியாளர் கணேசன் உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டன்ர்.
    திருப்பத்தூரில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    நெற்குப்பை

    கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

    இதனால் தமிழகம் முழுவதும்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  உணவகங்களில் சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஷவர்மா விற்பனை செய்யும் ஓட்டல்கள், ஜஸ்கிரீம் தயாரிப்பகம், பேக்கரி,பார், துபானக்கடைகள், டீக்கடை,பழக்கடை என அனைத்து இடங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் அதிரடி ஆய்வு செய்தனர். 

    இந்த ஆய்வின் போது கலர் பவுடர் அளவுக்கு  அதிகமாக உள்ளதாக 1000-த்திற்க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம்கள், பாதுகாப்பாக வைக்கப்படாத  பிரட், கேக் உள்ளிட்டவைகளையும், கலர் பவுடர் அதிகமாக சேர்க்கப்பட்ட  கோழிக்கறி சிக்கன் 65,கெட்டுப்போன இறைச்சி, ஷவர்மா சிக்கன் உள்ளிட்ட 30 கிலோ இறைச்சியையும்   பறிமுதல் செய்து புதைத்தனர். 

    ஷவர்மாவுக்கு பயன்படுத்தப்படும் மாவு தரமானதாக  உள்ளதா? பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். 

    தரமான கோழிக்கறியை பயன்படுத்த வேண்டும், பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் முறையில் ஷவர்மா விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக கடைக்கு சீல் வைக்கப்படும் என்று கடை உரிமையாளர்களிடம்  அதிகாரிகள் எச்சரித்தனர். 

    சாலையோர சிற்றுண்டி கடைகளில் சோதனை செய்த உணவு பாதுகாப்புத்துறையினர் அவர்களிடம் லைெசன்ஸ் பெற்று உணவகம் நடத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் 3 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நாளை நடக்கிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    முதல்-அமைச்சர்  உத்தரவின்படி   ஒரு  லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து  அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டது. 

      சிவகங்கை மாவட்டத்தில் நாளை (8-ந்தேதி) 2,950 இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. 

    சிவகங்கை மாவட்டத்தில் இந்த முகாம்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கமாக நடைபெறும் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகிய இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகிய இடங்களிலும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2-ம் தவணை செலுத்த வேண்டிய நபர்கள் உள்ள கிராமங்களில் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 16.1.2021 முதல் 4.5.2022 வரை மொத்தம் 20 லட்சத்து 30 ஆயிரத்து 517 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 10 லட்சத்து 88 ஆயிரத்து  78 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 

       15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 54 ஆயிரத்து 383 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.    12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட வயதி னருக்கு 38 ஆயிரத்து 915 பேருக்கு கோர்பிவேக்ஸ் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணை தடுப்பூசிகள் 9 லட்சத்து 31 ஆயிரத்து 475   பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.    15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதின ருக்கு 2-ம் தவணை தடுப்பூசிகள் 47,067  பேருக்கு  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 10.1.2022 முதல் 10 ஆயிரத்து 966பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக நாளை  (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெறும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஆதார்  எண் மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அகழாய்வு பணியை பார்வையிட கீழடியில் மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன, தற்போது 8-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது.
    இந்தநிலையில் தமிழ்நாடு அரசு கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்த‌ வெளி அருங்காட்சியமாக அறிவித்திருந்தது. பொதுமக்கள் இதை எப்போது வேண்டு மானாலும் பார்த்து செல்லலாம் என்றும் அறிவித்தது. 

    கீழடி7 ம் கட்ட திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பி.எஸ்சி. 2-ம்ஆண்டு வேளாண் படிக்கும் 100 மேற்பட்ட மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
    இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், நாங்கள் கல்விச் சுற்றுலாவாக மதுரை வந்தோம். கீழடி அருகே இருப்பதாக அறிந்தோம். உடனே ஆசிரியருடன் இங்கே வந்து பா ர்வையி ட்டோம். இது  மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.

    நம் மு ன்னோர்கள் மிகவும் நாகரீகமாக வாழ்ந்து ள்ளார்கள். தொல்லியல் துறை ஆராய்ச்சி யாளர்கள் இதை பற்றி முழு விளக்கம் கொடுத்தனர்.
    இங்கு கண்டுபிடித்த பல பொருட்களை படமாக வைத்துள்ளார்கள். அதை பார்த்து வியந்தோம். எங்களைப்போல் அனைவரும் வந்து இந்த அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும் என்றனர். 

    பள்ளி வகுப்பறைகள் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம் ரூ. 29.64 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

    அப்போது தலைமையாசிரியர் மதிவாணன் குத்துவிளக்கேற்றி கட்டிடத்தை திறந்து வைத்தார்.  

    இதேபோன்று வார்டு கவுன்சிலர் நேரு மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வர் காணொளிகாட்சி மூலம் கட்டிடத்தை திறந்த பொழுது அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கண்டுகளித்து கைதட்டி வரவேற்றனர். 

    சுமார் 800 மாணவர்களைக் கொண்ட மாவட்டத்திலேயே சிறந்து விளங்கும் இந்த பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிதவித்து வந்த நிலையில், இந்த கட்டிடம் கொடுத்துள்ளது ஆறுதலாக உள்ளதாக புதுப்பட்டி கிராம மக்கள் கூறினர்.
    வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து முதியவர் இறந்தார்.
    சிவகங்கை

    சிவகங்கையை அடுத்துள்ள ஊத்திக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 70). மாட்டுவண்டி ஓட்டும் தொழிலாளி.  இவர் தனது வீட்டிற்கு தேவையான காய்கறி வாங்க சிவகங்கை நேரு பஜார் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தார். 

    அங்குள்ள வாலாஜா நவாப் பள்ளிவாசல் அருகே உள்ள காய்கறி கடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கியவர் வெயில் கொடுமையால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். பின்னர் அவர் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    அங்குவந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரின் உயிரிழப்பை உறுதி செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். மேலும் காவல்து றையினர் கண்டு கொள்ளாததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக முதியவரின் உடல் அங்கேயே கிடந்தது.  

    பின்னர் பள்ளிவாசல் ஜமாத்தினர் முதியவரின் உடலை  தங்களது ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    வெயில் கொடுமைக்கு முதியவர் பலியான சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
    கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ராம் நகர், தனியார் திருமண மஹாலில், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் மதுசூதன்  ரெட்டி தலைமையில் நடந்தது. 

    இதில் கலெக்டர் பொது மக்களிடமிருந்து 1,028 கோரிக்கை மனுக்கள் பெற்று, நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
    தமிழக அரசின் உத்தரவின்படி, வார ந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலும், மாத ந்தோறும் ஏதேனும் ஒரு வருவாய் கிராமத்திலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்று, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

    பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதனால் ஏற்படும் நேரம் விரையம் மற்றும் பொருளாதார விரையத்தை தவிர்த்திடும் வகையிலும்  பொதுமக்களுக்கு விரை வாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், வட்ட அளவில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

    காளையார்கோவில், மானாமதுரை, காரை க்குடியைத் தொடர்ந்து தற்போது தேவகோட்டை வட்டத்தில் நடத்தப்படுகிறது. அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து பெற ப்படும் மனுக்களை ஏடுகளில் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட துறை அலுவ லர்கள் தீர்வு வேண்டும். 

    அலுவலர்கள் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வாராந்திர அறிக்கை வழங்க வேண்டும். மனுக்கள் மீது ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 
    ×