என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கும்பாபிேஷகத்தில் பங்கேற்றவர்கள்.
  X
  கும்பாபிேஷகத்தில் பங்கேற்றவர்கள்.

  கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரிசல்பட்டி கிராமத்தில் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  திருப்பத்தூர்

  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி கிராமத்தில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட  பழமை வாய்ந்த கமலாம்பிகை உடனுறை  கைலாசநாதர்  கோவில் உள்ளது. 

  இந்த கோவிலில் 100 வருடங்களுக்கு பின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.  விழா   குழு நிர்வாகிகள் சந்திரசேகரன்,  ராமன்   முன்னிலையில் மாவட்ட சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. 

  இைதயொட்டி   கோவில் அருகே பிரமாண்ட யாக சாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை செய்யப்பட்டன.  தொடர்ந்து  யாக பூஜைகள் நடைபெற்று   யாக குண்டத்தில் 108 மூலிகை  பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாஹூதி நடந்தது. மங்கள வாத்தியங்க ளுடன் கடம் புறப்பாடாகி  கோவிலை   வலம் வந்தது.

   ராஜகோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விமான  கலசங்களுக்கு  வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்த னர். அ.தி.மு.க. செயலாளர் எம்.வி.ஓமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், வருவாய் ஆய்வாளர் இளையராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் அழகு, தானம் அறக்கட்டளை திட்ட இயக்குனர்  செல்வமணி, உலகம்பட்டி இன்ஸ்பெக்டர் கலாராணி மற்றும் பலர்  பங்கேற்றனர்.
  Next Story
  ×