search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி திருவிழா"

    • கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன.
    • சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி கிராமத்தில் மட்டி கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பெரிய கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 3 ஆண்டுகளாக நல்லமழை பொழிந்ததால் கண்மாயில் நீர் வற்றாமல் போதிய நீர் இருந்து அதனை விவசாயிகள் நெல் வயலுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டு சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து மட்டிக்கண்மாயில் வேகமாக தண்ணீர் வற்றியதால் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மழைவரம் வேண்டியும் மீண்டும் விவசாயம் செழிக்கவும் இலவசமாக மீன்களை பிடித்து செல்ல சுற்று வட்டார கிராம மக்களுக்கு வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    அதனை தொடர்ந்து பிரான்மலை குமரத்த குடிப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, வேங்கைபட்டி, அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் , சிங்கம்புணரி, மருதிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் சாரை சாரையாக கண்மாயை சுற்றி அனைத்து சமுதாய மக்கள் ஒன்று கூடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருந்தனர்.

    இவர்கள் ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க கொக்கு காத்திருப்பது போல் காத்திருந்தனர். அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை வாணவெடி போட்டு வெள்ளை வீசி துவக்கி வைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீன்பிடி திருவிழா என்பதால் எதிர்பார்ப்புடன் காத்திருந்த கிராம மக்கள் வெடி வெடித்து வெள்ளை வீசிய உடனே கண்மாயை சுற்றி காத்திருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஆர்ப்பரித்து மீன்களை அள்ள துள்ளி குதித்து கண்மாய்க்குள் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை சல்லடை போட்டு தேடியதில் விரால், ஜிலேபி, கெண்டை, கட்லா, ரோகு, சிசி, மசரைகெழுத்தி உள்ளிட்ட அதிக ருசியான நாட்டுவகை மீன்கள் கிலோ கணக்கில் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    சிங்கம்புணரி பகுதியில் வடகிழக்கு பருவமழை முடிந்த ஒரே மாதத்தில் நடக்கும் முதல் மீன்பிடி திருவிழா இதுவே என்பதால் குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக ஆயிரக்கணக்கானோர் மீன்பிடிக்க குவிந்ததால் இந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • மேலூர் அருகே அய்வத்தான்பட்டியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பூர் ஊராட்சி அய்வத் தான்பட்டி கிராமத்தில் உள்ள அய்வத்தான் கண் மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று காலை நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மேலூர் மற்றும் கொட்டாம் பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து பொது மக்கள் மீன்பிடி உபகர ணங்களான வலை, கச்சா, ஊத்தா ஆகியவற்றை கொண்டு மீன்களை பிடிக்க கண்மாய் கரையில் காத்திருந்தனர்.



    பிடிப்பட்ட மீனுடன் வாலிபர்கள்.

    பின் அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் வழிபட்டு பின் கண்மாய் கரையில் வெள்ளை கொடி வீசி யதை தொடர்ந்து தயாராக நின்ற பொதுமக்கள் கண் மாய்க்குள் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து சென்ற னர். இந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தலா 2 கிலோ முதல் 5 கிலோ வீதம் வரை நாட்டு வகை மீன் களான கட்லா, ரோகு, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் சிக்கன.

    இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து உண்பதை கடை பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இது போன்ற மீன்பிடி திருவிழா நடத்துவதால் விவசாயம் செழித்து மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .

    இந்த மீன்பிடித் திரு விழாவின்போது பெண் ஒருவர் பிடித்த மீன் வலையில் திடீரென பாம்பு ஒன்று அகப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • நத்தம் அருகே சிறுகுடி கருங்குட்டு கோவில் சிறுகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கட்லா, ஜிலேபி, விறால், பாறை, கெண்டை உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ந்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கருங்குட்டு கோவில் சிறுகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையினால் இந்த குளம் நிரம்பியது. தற்போது குளத்தில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்ப ட்டது. இது தொடர்பாக அ றிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து இன்று காலை கிராம மக்கள் சிறுகுடி கண்மாய்க்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்குள்ள கருங்குட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்பிறகு மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து பூசாரிப ட்டி, அர ண்மனைபுதூர், சமுத்திராப்பட்டி, நல்ல கண்டம், ஒடுகம்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம ங்களை சேர்ந்த மக்கள் குளத்தில் இறங்கி போட்டி ப்போட்டு மீன்களை பிடித்தனர். ஊத்தா கூடை, வலை மூலம் மீன்கள் பிடிக்க ப்பட்டது. கட்லா, ஜிலேபி, விறால், பாறை, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. தங்களுக்கு கிடைத்த மீன்களை கிராம மக்கள் சமைத்து சாப்பிட்டனர்.

    • மீன்பிடி திருவிழாவில் குளத்தில் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர்.
    • சமுதாய ஒற்றுமைக்காக நடத்தப்படும் இந்த திருவிழாவில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள காணப்பாடி கிராமத்தில் மந்தைகுளம் உள்ளது. இங்கு மீன்குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகளவு இருந்ததால் மீன்கள் அதிகளவில் காணப்பட்டன. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

    இதனைதொடர்ந்து ஊர்நாட்டாமை ராம லிங்கசேதுபதி தலைமையில் இன்று கிராமமக்கள் மந்தைகுளத்தில் ஒன்றுகூடினர். நாட்டாமை கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். காணப்பாடி ஊராட்சி தலைவர் பாண்டி, முருகேசன் மற்றும் ஊர்முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    குளத்தில் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர். சிறுவ ர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் உற்சாகமாக கலந்து கொண்டனர். கெண்டை, கெழுத்தி, ரோகு உள்ளிட்ட பல்வேறு மீன்கள் அதிகளவில் கிடைத்தன. அதனை பிடித்து சென்ற பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைத்து சாப்பிட்டனர்.

    சமுதாய ஒற்றுமைக்காக நடத்தப்படும் இந்த திருவிழாவில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படாது என்றும், அதனை தங்கள் சொந்த தேவைக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

    • ஏரி கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • காலை 6 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா காலை 9 மணியுடன் முடிவடைந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ளது கொண்டையம் பள்ளி. இங்கு சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    கட்லா, ரோகு, ஜிலேபி, அயிரை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் இந்த ஏரியில் உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு மீன்பிடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கொண்டையம் பள்ளி ஊர் பொதுமக்கள் ஏராளமான பேர் அதிகாலை முதலே ஏரி பகுதியில் குவிய தொடங்கினர்.

    இதனால் ஏரி கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் காலை 6 மணியளவில் மீன்களை பிடித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏரிக்குள் இறங்கி பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா காலை 9 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஏரியில் பிடித்த மீன்களை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். இந்த மீன் பிடி திருவிழாவில் ஒருவருக்கு 12 கிலோ எடையுள்ள மீன் கிடைத்தது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன் பிடி திருவிழாவை பலரும் கண்டு ரசித்தனர்.

    • மணப்பாறை அருகே 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா
    • விரால், காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் கிடைத்தனர்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டியில் உள்ள பெரிய குளத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. சுமார் 13 ஆண்டுகளுக்கு இந்த மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மீன்பிடிக்க திரண்டனர்.

    வலை உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். விரால், காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் பலருக்கும் சிக்கிய போதும் பெரிய அளவிலான மீன்கள் சிலருக்கு மட்டுமே கிடைத்தது.

    பலருக்கும் சிறிய அளவில் தான் மீன்கள் சிக்கியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு மீன்கள் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் சிறிய மீன்களை பலரும் கரையில் போட்டு விடவே அந்த மீன்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த சிறுவர்கள் சிலர் மீண்டும் அந்த மீன்களை குளத்திலேயே எடுத்துப் போட்டது தான் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

    • சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மாங்குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
    • கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சியில் தி.பள்ளபட்டி உள்ளது.இங்கு உள்ள மாங்குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் மாங்குளம் நிரம்பியது. விவசாயத்திற்கு மாங்குளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று ஊர் பொதுமக்கள் மாங்குளத்தில் அருகே உள்ள கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் மாங்குளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் மணியக்காரன்பட்டி, ராமராஜபுரம், மந்தநாயக்கன்பட்டி,வேட்டைக்காரன் புதூர், திம்மணநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.

    சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மாங்குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன.

    கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    • பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சியில் புகையிலைப்பட்டி உள்ளது. இங்கு உள்ள பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் பெரியகுளம் நிரம்பியது. விவசாயத்திற்கு பெரியகுளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று ஊர் நாட்டாமை சூசைமாணிக்கம், மணியக்காரர் சின்னப்பன், கோவில்பிள்ளை சின்னப்பன், ஊர் நிர்வாகிகள் காமராஜ், சரவணன் மற்றும் பொதுமக்கள் பெரிய குளத்தின் அருகே உள்ள கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் வான வேடிக்கையுடன் பெரியகுளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த மீன்பிடி திருவிழாவில் ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி, பெரியகோட்டை மற்றும் திருச்சி, மணப்பாறை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக பெரியகுளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், தேளிவிரா, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை கிராம மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதோடு, தங்கள் உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விருந்தோம்பலை போற்றி கொண்டாடினர்.

    • கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.
    • பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கருப்பு கோவில் அருகே முதலைக்குளம் கண்மாய் உள்ளது. 487 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் இந்தப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.

    கருப்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பின் இந்த கண்மாயில் மீன்களை விட்டுச்செல்வது வழக்கம்.

    இந்த கண்மாயை ஏலம் விடும் நடைமுறை இல்லை. ஆனால் வருடந்தோறும் முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா உற்சாகமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.

    மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் முதலைக்குளம் கண்மாயை முற்றுகையிட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி, பெரியாறு பாசன கூட்டமைப்பு தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை முடிந்தபின் 3 முறை வெடிகள் வெடிக்கப்பட்டு மீன்பிடி திருவிழா தொடங்கியது. வெடி வெடித்து முடித்தவுடன் கரையில் நின்றிருந்த சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் முதலைக்குளம் கண்மாயில் திபுதிபுவென இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடித்தனர்.

    இதில் பெரும்பாலானோருக்கு பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

    • திருப்பத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சென்னல்குடி கண்மாயில் ஊத்தாகூடை மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு ஊத்தா கூடைக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி மீன்பிடிக்க சென்றனர். கண்மாயில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தாகூடைகளில் மீன் பிடித்தனர். இதில் சிலருக்கு நாட்டு மீன்களான கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாப்புலெட், வயித்து கெண்டை உள்ளிட்ட பெரிய மீன்கள் கிடைத்தன.

    பலருக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இருந்தபோதும் ஆர்வத்துடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர். மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.

    • தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அதிகாலை முதல் பெரியகாரை கிராமத்தை சுற்றியுள்ள பணங்காட்டான்வயல், கள்ளிக்குடி, கோட்டவயல், நயினார்வயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கச்சா, வாளி, கூடையுடன் வந்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கிராமத்து முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளைக்கொடி காட்டிய தும் மீன்பிடிக்க தயாராக இருந்தவர்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கி னர்.

    இதில் விரால், கெழுத்தி, கட்லா, கெண்டை போன்ற மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ அளவிலும் மேலும் அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுபோன்ற மீன் பிடி திருவிழாக்களால் விவசா யம் செழித்து கிராம மக்க ளின் ஒற்றுமை வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.

    • வடமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பின்பு மீன்பிடி திருவிழா நடந்தது
    • இதில் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வமாக மீன்களை பிடித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள சேர்வைக்காரன்பட்டி, சொக்கன்பட்டியில் பழமையான குளம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் இது வறண்டு காணப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக குளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதனைதொடர்ந்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இங்குள்ள கன்னிமார் கோவிலுக்கு பொதுமக்கள் குதிரைஎடுப்பு திருவிழா நடத்தினர். அதனைதொடர்ந்து ஊர்பெரியவர் மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.

    வலை மற்றும் துணிகளை கொண்டு கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு மீன்களை அள்ளிச்சென்றனர். ஒற்றுமையுடன் நடந்த இந்த திருவிழாவில் பிடிபடும் மீன்களை விற்பனைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள். தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைப்பதுடன் உறவினர்களுக்கும் மீன்களை வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

    20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் வந்து பார்வையிட்டனர்.




    ×