என் மலர்
சேலம்
- காவிரி டெல்டா பாசனத்திற்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
- மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.
மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று முன்தினம் விநாடிக்கு 885 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 896 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 933 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்ப டுகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்று 104.21 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.87 அடியாக சரிந்தது.
- சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகரில் வசிப்பவர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
- அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கிரேஸ்குமார் (வயது 37). இவர் நேற்று காலை பள்ளப்பட்டி, மையனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிரேஸ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிரேஸ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பழையூர் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
- எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி ராஜமாணிக்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராகதேவன் (வயது 21). இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீரென தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ராகதேவனை தடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்யாவின் பெற்றோர் வந்து, நித்யாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். மேலும் நித்யாவை அழைத்து வர, அவர் வீட்டிற்கு சென்றபோது என்னை விரட்டி விட்டனர்.
எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார். போலீசார் தொடர்ந்து ராகதேவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதித்தது.
- பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம்:
தமிழகம் முழுவதும் பரவலாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மல்லூர், பனமரத்துப்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெறுகிறது.
கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதித்தது. இதனால் அப்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100 வரை விலை உயர்ந்தது.
இதையடுத்து கடந்த டிசம்பரில் விவசாயிகள் அதிகளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது பல இடங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு சின்னவெங்காயம் வரத்து அதிகரிதுள்ளதால் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சின்ன வெங்காயம் வியாபாரிகள் கூறுகையில், "கடந்த இரு மாதத்திற்கு முன்பு சின்ன வெங்காயம்" கிலோ ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு சின்னவெங்காயம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட 40 சதவீதம் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பால் ரூ.40 முதல் ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.
- சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் தான் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து இருக்கிறோம்.
- நான் தொடர்ந்து திருமண விழாக்களில் மணமக்கள் எப்படி இருக்க கூடாது என்று சொல்வேன். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மாதிரி இருந்து விடாதீர்கள்.
சேலம்:
சேலம் நடுவனேரியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நான் வரும் வழியில் எல்லாம் எனக்கு மிக எழுச்சியோடு உணர்வு பூர்வமாக வரவேற்பு அளித்த சேலம் மாவட்ட தி.மு.க.வினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறன்.
சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் தான் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து இருக்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரபோகிறது. அதற்கு அமைச்சர் நேரு தான் அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடி தருவார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் சேர்ந்து மிகப்பெரிய வெற்றியை தேடி தருவீர்கள் என நம்புகிறேன்.
நான் தொடர்ந்து திருமண விழாக்களில் மணமக்கள் எப்படி இருக்க கூடாது என்று சொல்வேன். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மாதிரி இருந்து விடாதீர்கள். பக்கத்தில் பக்கத்தில் சட்டபேரவையில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கு நான் சாட்சி. கண்கூடாக பார்த்து இருக்கிறேன். ஆனால், ஒருத்தர் ஒருத்தர் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பேசிக்கொள்ள மாட்டார்கள். பிரதமர் மோடிக்கு யார் மிகபெரிய அடிமை என்கிற போட்டியோ நடக்கும். ஆட்சியில் இருந்தவரைக்கும் அவர்கள் 2 பேருக்குள்ளேயும் எந்த பிரச்சினையும் இல்லை. இப்போது ஆட்சி இல்லை என்றவுடனே நீயா, நானா? என பிரச்சினை நிலவுகிறது.
சட்டமன்றத்தில் நான் பேசியபோது, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவர்களே 2 பேரும் என்னுடைய காரை தவறுதலாக எடுக்க போயிவிட்டீங்க. தயவு செய்து எடுத்துக்கொண்டு போங்க. ஆனால் ஒன்றே ஒன்று கமலாலயம் மட்டும் போயிடாதீங்க என்று சொன்னேன். அப்போது அண்ணன் எடப்பாடி பழனிசாமி மட்டும் பேசவே இல்லை. அதற்கான அர்த்தம் இப்போது தான் தெரிகிறது.
அண்ணன் ஓ.பி.எஸ். மட்டும் எழுந்து என்னுடைய கார் எந்த காலத்திலும் கமலாலயம் செல்லாது என்று கூறினார். இப்போது 2 பேரும் போட்டிபோட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள். பா.ஜ.க. சிக்னல் கிடைக்கிறதுக்கு. அவர்களுடைய எஜமானார் மோடி.
இவ்வாறு அவர் பேசினார்
- அய்யனார் அடிக்கடி மனைவியிடம் கோபப்படுவதாக தெரிகிறது.
- அய்யனார் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் பழைய சூரமங்கலம் வன்னிய கவுண்டர் தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலை அரசி (வயது 24). இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு பிரபாஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
அய்யனார் அடிக்கடி மனைவியிடம் கோபப்படுவதாக தெரிகிறது. அது போல் கடந்த 24-ந்தேதி காலையில் அவர், மனைவியிடம் கோபத்தில் சத்தம் போட்டுவிட்டு வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். கணவர் தன்னிடம் கோபப்படுவதால் கலை அரசி மனமுடைந்தார். இனிமேல் கணவருடன் வாழ்வதை விட, அவரைவிட்டு பிரிவதே மேல் என முடிவு செய்து அன்று மதியம் 1 மணி அளவில் மகன் பிரபாஸை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு கலைஅரசி சென்று விட்டார்.
அய்யனார் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் மனைவியும், குழந்தையும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் உள்ள வீடுகள், பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருவரும் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள் என எதுவும் தெரியவில்லை.
இதுகுறித்து அய்யனார் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கலை அரசி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணுக்கு கடைசியாக வந்த அழைப்புகள், மற்றும் அக்கம், பக்கத்தில் யார்? யாரிடம்? பேசினார் போன்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
- மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று விநாடிக்கு 885 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 896 கன அடியாக அதிகரித்தது.
- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.
மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று விநாடிக்கு 885 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 896 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் தேவை குறைந்துள்ளதால், நேற்று பிற்பகல் முதல் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்துவருகிறது. நேற்று 104.60 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 104.21அடியாக சரிந்தது.
- சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சிரியருக்கு புகார் வந்தது.
- காந்திநகர் பகுதியில், கலைச்செல்வன் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யாவிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காந்திநகர் பகுதியில், கலைச்செல்வன் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தம்மம்பட்டி போலீசார், வருவாய் துறையினருடன சேர்ந்து, கலைச்செல்வன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,840 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து விடுமுறையை பயன்படுத்தி மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை வருவாய் துறையினர், தம்மம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கலைச்செல்வனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு சரக்கு வாகனம்
- திடீரென ஒரு வளைவில் நிலை தடுமாறி குப்புற கவிழ்ந்தது
சேலம்:
சேலம் மாவட்டம் ஜருகுமலை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி ( வயது 60). இவர் மற்றும் இவரது உறவினர்கள் 10 பேர் சேலம் அருகே நடைபெற்ற ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலை ஒரு சரக்கு வாகனத்தில் வந்து, நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு சரக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஜருகுமலை அருகே உள்ள நடுக்காடு என்ற பகுதியில் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு வளைவில் நிலை தடுமாறி குப்புற கவிழ்ந்தது.இதில் வாகனத்தில் வந்த 2 பேர் சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். பனமரத்துப்பட்டி போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த குப்புசாமி ,விஜயா (50), ராகவன் (9),குப்பாயி (50), பாப்பா, மற்றொரு குப்பாயி உட்பட 10 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதில் சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்ட 2 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததால் உயிர் சேதம் இன்றி அனைவரும் தப்பினர். அதே வேளையில் சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து இருந்தால் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும்.
- பெட்டிக்கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள்
- புகையிலைப் பொருட்களை கடையில் விற்கிறீர்கள்?, என தட்டிக் கேட்டுள்ளார்
அன்னதானப்பட்டி:
சேலம் அம்மாப்பேட்டை , சுப்ரமணிய பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தாதகாப்பட்டி பாட்டப்பன் காடு பகுதிக்கு சவாரி வந்திருந்தார். அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனைப் பார்த்த அப்துல், கடை உரிமையாளரிடம் ஏன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடையில் விற்கிறீர்கள்?, என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அப்துலை தாக்கி, அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் தாதகாப்பட்டி பாட்டப்பன் காடு ரெட்டை கிணறு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 65 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 150 பான் மசாலா பாக்கெட்டுகள், 10 கூல் லிப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த எடை 2 கிலோ 900 கிராம், மதிப்பு ரூ.2900 ஆகும்.
- அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை
- வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள்
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யாவிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காந்திநகர் பகுதியில், கலைச்செல்வன் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தம்மம்பட்டி போலீசார், வருவாய் துறையினருடன சேர்ந்து, கலைச்செல்வன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,840 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து விடுமுறையை பயன்படுத்தி மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை வருவாய் துறையினர், தம்மம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கலைச்செல்வனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம்
- இந்நூலுக்கு சத்தியசோதனை என்று பெயர்
அன்னதானப்பட்டி:
சத்திய சோதனை என்பது மகாத்மா காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனாலேயே இந்நூலுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார். உலகளவில் இன்றளவும் இந்த நூலுக்கு தனி மவுசு உண்டு. இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலின் தலைப்பில் சேலத்தில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்ப டுவது வேதனையான உண்மை ஆகும்.
சேலம் செவ்வாய்பேட்டை தேர் நிலையம் அருகே தான், காந்தியின் இந்த "சத்திய சோதனை " நினைவுச் சின்னம் உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார். அவ்வாறு அவர் சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அந்த பகுதியில் அரிய பழங்கால வரலாற்று சின்னம் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் பரிதாபமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து தக்க நடவடிக்கைகள் எடுத்து, காந்தியின் வரலாற்று நினைவுச் சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






