என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரக்கு வேன் கவிழ்ந்து 3 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்
- ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு சரக்கு வாகனம்
- திடீரென ஒரு வளைவில் நிலை தடுமாறி குப்புற கவிழ்ந்தது
சேலம்:
சேலம் மாவட்டம் ஜருகுமலை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி ( வயது 60). இவர் மற்றும் இவரது உறவினர்கள் 10 பேர் சேலம் அருகே நடைபெற்ற ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலை ஒரு சரக்கு வாகனத்தில் வந்து, நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு சரக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஜருகுமலை அருகே உள்ள நடுக்காடு என்ற பகுதியில் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு வளைவில் நிலை தடுமாறி குப்புற கவிழ்ந்தது.இதில் வாகனத்தில் வந்த 2 பேர் சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். பனமரத்துப்பட்டி போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த குப்புசாமி ,விஜயா (50), ராகவன் (9),குப்பாயி (50), பாப்பா, மற்றொரு குப்பாயி உட்பட 10 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதில் சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்ட 2 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததால் உயிர் சேதம் இன்றி அனைவரும் தப்பினர். அதே வேளையில் சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து இருந்தால் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும்.






