என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "840 bottles of liquor worth Rs.5 lakh"

    • அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை
    • வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள்

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யாவிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காந்திநகர் பகுதியில், கலைச்செல்வன் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தம்மம்பட்டி போலீசார், வருவாய் துறையினருடன சேர்ந்து, கலைச்செல்வன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,840 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து விடுமுறையை பயன்படுத்தி மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை வருவாய் துறையினர், தம்மம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கலைச்செல்வனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×