என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- காவிரி டெல்டா பாசனத்திற்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
- மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடிக்கிறது.
மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று முன்தினம் விநாடிக்கு 885 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 896 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 933 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்ப டுகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்று 104.21 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.87 அடியாக சரிந்தது.
Next Story






