என் மலர்
சேலம்
- முப்போக சாகுபடி முடிவுக்கு வந்ததால், 249 நாட்களுக்கு பிறகு தண்ணீர் திறப்பு நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.
- அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சார உற்பத்தியும், சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால், 12 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை, 230 நாட்களுக்கு அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால், குறித்த நாளான ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக, மே 24-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. முப்போக சாகுபடி முடிவுக்கு வந்ததால், 249 நாட்களுக்கு பிறகு தண்ணீர் திறப்பு நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சார உற்பத்தியும், சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், செக்கானூர் மற்றும் நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல்மேடு உள்ளிட்ட 7 கதவணை மின்நிலையங்களில் 210 மெகாவாட் என மொத்தம் 460 மெகா வாட் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
இந்த நீர்மின் நிலையங்கள், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்போது, நீரின் விசையை கொண்டு மின் உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டவையாகும்.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் இன்னும் ஓரிரு நாட்களில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தைப் பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் கைலாச நாதர் கோவில் தைப் பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டளைதாரர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து 9-ந் தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்ற விழாவில் கோவில் தக்கார் திருஞன சம்பந்தர், கோவில் செயல் அலுவலர் புனித
ராஜ், உமாபதி குருசாமி கள்,நான்கு கோடி மகா ஜனங்கள், மிராஸ்தா ரர்கள், கட்டளைதாரர்கள், கோவில் பணியாளர்கள், அனைத்து ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
- நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம்
- நித்யாவை அவரது பெற்றோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனர்
சேலம்:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே மின்னம்பள்ளி அடுத்த ராஜமாணிக்கம் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராகதேவன் (வயது 21). இவர் கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .நித்யாவை அவரது பெற்றோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றதால், தனது காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் திடீரென தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி, ராகதேவனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
- இப்பேரணியை எடப்பாடி ஒன்றிய செயலா–ளர், அட்மா குழு தலைவர் நல்லதம்பி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் இருப்பாளி மற்றும் வேம்பனேரி, சித்தூர், வெள்ளிரிவெள்ளி, செட்டிமாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடந்தது.
இப்பேரணியை எடப்பாடி ஒன்றிய செயலாளர், அட்மா குழு தலைவர் நல்லதம்பி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்தப் பேரணியில் சிறு–தானிய ஆண்டு 2023 கொண்டாடப்படும் நோக்கம், அதன் நன்மைகள், சத்துமிக்க சிறுதானிய உணவுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பொள்ளாச்சி வானவராயன் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளும் பங்கேற்று தேசிய உணவு பாதுகாப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில், எடப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் சிறுதானிய சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் இப் பேரணியில் வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவ–லர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்போட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜேந்திரன் (வயது 27). இவரை கடந்த 2015-ம் ஆண்டு வழிப்பறி வழக்கில், அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வழக்கு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், ராஜேந்திரன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.போலீசார் ராஜேந்திரன் தேடி வந்த நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடந்த 2022-ல் முதல்-அமைச்சரின் தனிப்–பிரிவுக்கு புகார் அளித்தார்.
- இதுகுறித்து விசாரிக்க, சேலம் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் பனம–ரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு 42 வீட்டு மனை பிரிவுக்கு அனுமதி வழங்க, வசூலிக்கப்பட்ட தொகையை அரசு கணக்கில் சேர்க்காமல், அப்போதைய பி.டி.ஓ ராஜா, ஊராட்சி செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் முறை கேட்டில் ஈடுபட்டதாக, அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் கடந்த 2021-ல், உதவி இயக்குனரிடம் புகாரளித்தார்.
மீண்டும் இது தொடர்பாக கடந்த 2022-ல் முதல்-அமைச்சரின் தனிப்–பிரிவுக்கு புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க, சேலம் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, சேலம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ராமஜெயம் (தணிக்கை), கடந்த 19-ந் தேதி மனுதாரர், ஊராட்சி செயலர், தற்போது சங்க–கிரியில் உதவி இயக்குனராக உள்ள ராஜா (அப்போதைய பி.டி.ஓ) ஆகியோர் 27-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.
இதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரான தங்கராஜ், ஊராட்சி செயலர் விவேகா–னந்தம், உதவி இயக்குனர் ராஜா ஆகியோரிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதைதொடர்ந்து நில–வாரப்பட்டி ஊராட்சியில் சம்பந்தப்–பட்ட வீட்டுமனை உரிமை–யாளர்களிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் இன்று காலை பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
- பல்வேறு ஊர்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் விடப்பட்டது. இந்த காளை களை அடக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் இன்று காலை பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல், கரூர்,கள்ளக்குறிச்சி பெரம்பலூர்,உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் விடப்பட்டது. இந்த காளை களை அடக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கிவைத்தார். போட்டியை திரளானோர் பார்த்தனர். முன்னதாக எருதுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதன் பிறகே எருதுகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
இந்தாண்டு முதன்முறை யாக ஜல்லிக்கட்டு போட்டியை காண பொது மக்களிடம் ரூ 300 பெற்றுக் கொண்டு காலரியில் அமர்ந்து பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற பொதுமக்கள் ஓரமாக நின்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை கூலமேடு, ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
- பூக்கள் ரகங்களில் பல கணிசமாக விலை குறைந்துள்ளது.
- வியாபாரிகள் மகிழ்ச்சி
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்றும், இன்றும் முகூர்த்த தினங்கள் ஆகும். இதையடுத்து தேவை அதிகரித்து , சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.800, ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. முகூர்த்த தினத்தால் மல்லிகை பூ ஒரு கிலோ இன்று ரூ.1200- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேசமயம் மற்ற பூக்கள் ரகங்களில் பல கணிசமாக விலை குறைந்துள்ளது. தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து முகூர்த்த தினங்கள் வருவதால் பூக்கள் விற்பனை நன்றாக இருக்கும். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : மல்லிகை - ரூ.1200, முல்லை - ரூ.1200, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.300, கலர் காக்கட்டான் - ரூ.300, மலை காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.200, சம்பங்கி - ரூ.50, சாதா சம்பங்கி - ரூ.80, அரளி - ரூ.120, வெள்ளை அரளி - ரூ.120, மஞ்சள் அரளி - ரூ.120, செவ்வரளி - ரூ.160, ஐ.செவ்வரளி - ரூ.160, நந்தியா வட்டம் - ரூ.120, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குமரவேல், ராஜேஸ்வரி, தீபன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
சேலம்:
மலேசியா ஜேலான் தெண்டல் பேர்மை பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 42). இவரது மனைவி ராஜேஸ்வரி (40), மகன் தீபன் (21) ஆகியோருடன் சேலத்தில் இருந்து ஒரு ஆட்டோவில், தங்கள் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வையப்பமலை பகுதிக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிலவாரப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது சேலத்தில் இருந்து கொல்லிமலை நோக்கி சென்ற, அரசு பஸ் கவிழ்ந்து கிடந்த ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குமரவேல், ராஜேஸ்வரி, தீபன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால், அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோவை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
- கல்லப்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
- ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் சிறப்பு பச்ைச பூஜை நடைபெறும்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கல்லப்பாளையம் பகுதியில் மிகவும் பழமையான அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் சிறப்பு பச்ைச பூஜை நடைபெறும்.
இதன்படி, நேற்று அய்யனாராப்பன் கோவிலில் சிறப்பு வழிபாட்டு பச்சை பூஜை நடைபெறுகிறது. இதில் சேலம், எடப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- மத்திய மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- மத்திய மாவட்ட பொருளாளர் தலித் ராஜ் கண்டன உரை
சேலம்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வேங்கைவயல் கிராம பட்டியலின மக்கள் குடிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சமூகவிரோதிகளை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய, தமிழக அரசை வலியுறுத்தி சேலம் மத்திய மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொருளாளர் தலித் ராஜ் கண்டன உரையாற்றினார்.மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் தாதம்பட்டி கேபிள் மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னண்ணன், கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தரம், அழகாபுரம் ரத்தினம், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் பன்னீர்செல்வம், அம்மாபேட்டை மண்டல செயலாளர் சக்தி, மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் ரகுபதி, துணைச்செயலாளர் ராமண்ணா, மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் தீனா காமராஜ், தங்கராஜ், நாட்டாமங்கலம் கிளை தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
- சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- 1,040 மூத்த தி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பொற்கிழி வழங்கும் விழா சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த மற்றும் நலிந்த தி.மு.க தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டியில் நேற்று மாலை நடந்தது.
சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வ கணபதி வரவேற்று பேசி னார். அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், வக்கீல் ராஜேந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதயநிதி ஸ்டாலின்
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர், 1,040 மூத்ததி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு எனது கைகளால் பொற்கிழி
வழங்குவதை நான் பெரு மையாக கருதுகிறேன். காரணம் நான், காண கிடைக்காத அண்ணா வையும், பெரியாரையும் உங்கள் வழியாக காண்கி றேன். தி.மு.க.வின் அனைத்து இன்ப, துன்பங்க ளிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பங்கு மிகப்பெரியது. அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் தற்போது பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளிலும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும்.
மோடிக்கு விசுவாசம்
அதேபோல் தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு இளைஞர் அணி சார்பில் கூடுதலான நிதியாக சுமார் 24 கோடி ரூபாய் வங்கியில் இட்டு வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் இருந்து
கிடைக்கும் வட்டி தொகையை இரு மாதங்க ளுக்கு ஒரு முறை பெறப்பட்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் அவர்கள் நலம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவர் இருந்து வரும் கட்சியின் முதல் எழுத்தான அண்ணாவையே மறந்து, அவர் கருத்துகளுக்கு எதிரான கொள்கை கொண்ட நபர்களுடன் விசுவாசமாக உள்ளார். குறிப்பாக ஜெயலலிதா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு விசுவாசம் இல்லாத நிலையில், தற்போது மோடி, அமித்ஷா, கவர்னர் ஆகியோருக்கு மட்டுமே விசுவாசமாக செயல்படுகிறார்.
சுயமரியாதை
தற்போது இடைத்தேர்த லுக்காக ஈரோடு பகுதியில் முகாமிட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பெரியாரின் நினைவு இல்லத்திற்கு சென்று, தனது தன்மானம், சுயமரியாதையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும். அதற்கு உங்கள் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான நேரு பணியாற்றி வருகிறார். அவருக்கு நீங்கள் உறுதுணையாக இருந்து வெற்றியை ஈட்டித்தர வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.






