என் மலர்
நீங்கள் தேடியது "நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சமூகவிரோதிகளை வன்கொடுமை Brutality of anti-socials mixed with human waste in water tank"
- மத்திய மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- மத்திய மாவட்ட பொருளாளர் தலித் ராஜ் கண்டன உரை
சேலம்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், வேங்கைவயல் கிராம பட்டியலின மக்கள் குடிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சமூகவிரோதிகளை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய, தமிழக அரசை வலியுறுத்தி சேலம் மத்திய மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொருளாளர் தலித் ராஜ் கண்டன உரையாற்றினார்.மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் தாதம்பட்டி கேபிள் மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னண்ணன், கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தரம், அழகாபுரம் ரத்தினம், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் பன்னீர்செல்வம், அம்மாபேட்டை மண்டல செயலாளர் சக்தி, மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் ரகுபதி, துணைச்செயலாளர் ராமண்ணா, மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் தீனா காமராஜ், தங்கராஜ், நாட்டாமங்கலம் கிளை தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.






