என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
சுப்பிரமணி 2015-ம் ஆண்டு வழிப்பறி வழக்கில் கைது
சேலம்:
சேலம் கொண்ட லாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜேந்திரன் (வயது 27). இவரை கடந்த 2015-ம் ஆண்டு வழிப்பறி வழக்கில், அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வழக்கு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், ராஜேந்திரன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.போலீசார் ராஜேந்திரன் தேடி வந்த நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






