search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thai Pusha Festival"

    • ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பவுர்ணமி நாளில் வரும் பூசம் நட்சத்திரத்தில், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பவுர்ணமி நாளில் வரும் பூசம் நட்சத்திரத்தில், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாமக்கல் நகரில் மோகனூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவ பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையும், 11 மணிக்கு சிறப்பு அபிசேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சந்தனக்காப்பு அலங்காரமும், சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    காந்தமலை முருகன்

    இதேபோல், நாமக்கல் மாவட்டம், மோகனூர் காந்தமலை, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் ஊர்வலமாக வந்து சுவாமியை வழிபட்டனர். இக்கோவிலில், ஆண்டு தோறும், தைப்பூசத் தேர்த் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், தைப் பூசத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இருப்பினும், சுவாமிக்கு வழக்கம் போல் பூஜைகள் மட்டும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல், கட்டளைதாரர்கள் மூலம் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, பால் குடம், தீர்த்தக்குடம், காவடி எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கோவிலை அடைந்தனர்.

    அதையடுத்து, சுவாமிக்கு, பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தை பூசத்திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகில் உள்ள கபிலர்மலை முருகன் கோயில், நாமக்கல் அருகில் உள்ள கூலிப்பட்டி, கந்தகிரி முருகன் கோயில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், பொம்மைக்குட்டை மேடு கருமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    • காவடிகளை எடுத்து வந்தனர்
    • தைப்பூச விழாவையொட்டி நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி ஊராட்சியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 208பேர் பால்குட ஊர்வலம் நடைபெற்றது

    ப.முத்தம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சாமிக்கு பால்அபிஷேகம், திரவிய அபிஷேகம், கலச அபிஷேகம், நடைபெற்றது.

    தொடர்ந்து சாமிக்கு ராஜ அலங்கார தரிசனம், மஹா தீபஆராதனை அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமிக்கு ஹோமம், 208 பால்குடம் அபிஷேகம், கலசஅபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    சாமிக்கு ஸகணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம் நடைபெற்றது. குளக்கரை வினாயகர் ஆலயத்தில் இருந்து பம்பை, மேளதாளத்துடன் பக்தர்கள் 208 பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலைக் சென்றடைந்தது.

    அங்கு சாமிக்கு பால்அபிஷேகம், திரவிய அபிஷேகம், கலசஅபிஷேகம், ராஜ அலங்கார தரிசனம், மஹா தீபஆராதனை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்வாரிய பொறியாளர் சி. ரங்கநாதன், வாசுதேவன், டி பழனி, மோகன் குமார் பழனிச்சாமி உட்பட, நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோன்று திருப்பத்தூர் தண்டாயுதபாணி கோயில் பசலிகுட்டை முருகன் கோயில் ஜலகாம்பாறை வெற்றிவேல் ஆலயம், உள்ளிட்ட பகுதிகளில் தைப்பூச விழா வை ஒட்டி முருகன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் பக்தர்கள் பால்குட ஊர்வலம் மற்றும் காவடிகளை எடுத்து வந்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம

    ஆற்காடு:

    ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சனிக்கி ழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதையொட்டி, வள்ளி - தேவசேனா உட னுறை சுப்பிரமணிய சுவாமிக்கு வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. சுவாமிக்கு மகா தீபாராதனை நடை பெற்றது.

    தொடர்ந்து பகல் உச்சிகால பூஜையும், மாலையில் ஏக தின லட்சார்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில், உபயதாரர்கள், ரத்தினகிரி மற்றும் சுற் றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தைப் பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கைலாச நாதர் கோவில் தைப் பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டளைதாரர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து 9-ந் தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்ற விழாவில் கோவில் தக்கார் திருஞன சம்பந்தர், கோவில் செயல் அலுவலர் புனித

    ராஜ், உமாபதி குருசாமி கள்,நான்கு கோடி மகா ஜனங்கள், மிராஸ்தா ரர்கள், கட்டளைதாரர்கள், கோவில் பணியாளர்கள், அனைத்து ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தேர்த் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வருகின்ற 5-ந் தேதி தைப்பூசத் திருநாளில் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் காவடி, பால் காவடி, இளநீர் காவடி, மயில் காவடிகளை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு செய்வார்கள்.

    மேலும் அன்று மாலை முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதன்படி, இன்று காலை கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள நாதஸ்வர வாத்தியங்கள் ஒலிக்க கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்றத்தின் போது அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கொடி மரத்திற்கும், மூலவர் முருகப்பெருமானுக்கும் உற்சவமூர்த்தி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் தைப்பூசத்தையொட்டி தொடர்ந்து 9 நாட்களும், தினமும் இரவு உற்சவமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் அலங்காரம் செய்யப்பட்டு யானை வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்னப்பச்சி வாகனம், காமதேனு வாகனம் ஆகிய வாகனங்கள் மூலம் திருவீதி உலா நடைபெறும் என்று சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

    ×