search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    208 பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்
    X

    ப. முத்தம்பட்டி ஊராட்சியில் தைப்பூசத்தை பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    208 பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்

    • காவடிகளை எடுத்து வந்தனர்
    • தைப்பூச விழாவையொட்டி நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி ஊராட்சியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 208பேர் பால்குட ஊர்வலம் நடைபெற்றது

    ப.முத்தம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சாமிக்கு பால்அபிஷேகம், திரவிய அபிஷேகம், கலச அபிஷேகம், நடைபெற்றது.

    தொடர்ந்து சாமிக்கு ராஜ அலங்கார தரிசனம், மஹா தீபஆராதனை அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமிக்கு ஹோமம், 208 பால்குடம் அபிஷேகம், கலசஅபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    சாமிக்கு ஸகணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம் நடைபெற்றது. குளக்கரை வினாயகர் ஆலயத்தில் இருந்து பம்பை, மேளதாளத்துடன் பக்தர்கள் 208 பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலைக் சென்றடைந்தது.

    அங்கு சாமிக்கு பால்அபிஷேகம், திரவிய அபிஷேகம், கலசஅபிஷேகம், ராஜ அலங்கார தரிசனம், மஹா தீபஆராதனை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்வாரிய பொறியாளர் சி. ரங்கநாதன், வாசுதேவன், டி பழனி, மோகன் குமார் பழனிச்சாமி உட்பட, நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோன்று திருப்பத்தூர் தண்டாயுதபாணி கோயில் பசலிகுட்டை முருகன் கோயில் ஜலகாம்பாறை வெற்றிவேல் ஆலயம், உள்ளிட்ட பகுதிகளில் தைப்பூச விழா வை ஒட்டி முருகன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் பக்தர்கள் பால்குட ஊர்வலம் மற்றும் காவடிகளை எடுத்து வந்தனர்.

    Next Story
    ×