search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for 1"

    • சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • 1,040 மூத்த தி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் தி.மு.க. மூத்த தொண்டர்கள் 1,040 பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    பொற்கிழி வழங்கும் விழா சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த மற்றும் நலிந்த தி.மு.க தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டியில் நேற்று மாலை நடந்தது.

    சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வ கணபதி வரவேற்று பேசி னார். அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், வக்கீல் ராஜேந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதயநிதி ஸ்டாலின்

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர், 1,040 மூத்ததி.மு.க. தொண்டர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி பேசினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு எனது கைகளால் பொற்கிழி

    வழங்குவதை நான் பெரு மையாக கருதுகிறேன். காரணம் நான், காண கிடைக்காத அண்ணா வையும், பெரியாரையும் உங்கள் வழியாக காண்கி றேன். தி.மு.க.வின் அனைத்து இன்ப, துன்பங்க ளிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பங்கு மிகப்பெரியது. அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் தற்போது பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளிலும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்படும்.

    மோடிக்கு விசுவாசம்

    அதேபோல் தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு இளைஞர் அணி சார்பில் கூடுதலான நிதியாக சுமார் 24 கோடி ரூபாய் வங்கியில் இட்டு வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் இருந்து

    கிடைக்கும் வட்டி தொகையை இரு மாதங்க ளுக்கு ஒரு முறை பெறப்பட்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் அவர்கள் நலம் சார்ந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவர் இருந்து வரும் கட்சியின் முதல் எழுத்தான அண்ணாவையே மறந்து, அவர் கருத்துகளுக்கு எதிரான கொள்கை கொண்ட நபர்களுடன் விசுவாசமாக உள்ளார். குறிப்பாக ஜெயலலிதா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு விசுவாசம் இல்லாத நிலையில், தற்போது மோடி, அமித்ஷா, கவர்னர் ஆகியோருக்கு மட்டுமே விசுவாசமாக செயல்படுகிறார்.

    சுயமரியாதை

    தற்போது இடைத்தேர்த லுக்காக ஈரோடு பகுதியில் முகாமிட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பெரியாரின் நினைவு இல்லத்திற்கு சென்று, தனது தன்மானம், சுயமரியாதையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும். அதற்கு உங்கள் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான நேரு பணியாற்றி வருகிறார். அவருக்கு நீங்கள் உறுதுணையாக இருந்து வெற்றியை ஈட்டித்தர வேண்டும்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • செங்கரைப்பா ளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
    • 1,600 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்காக குப்பைத்தொட்டிகளை வழங்கி பேசினார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த குளூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குப்பைத்தொட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    செங்கரைப்பா ளையத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு தலைவர் கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழை ப்பாளராக மாவட்ட கூடுதல் கலெக்டர் மதுபாலன் கலந்து கொண்டு கிராமங்கள்தோறும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் ஊராட்சியில் உள்ள சுமார் 1,600 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்காக குப்பைத்தொட்டிகளை வழங்கி பேசினார்.

    இதில் தோட்டக்காடு நல்லப்பகவுண்டர் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரோஜா, ஊராட்சி செயலாளர் வெ ங்கடாசலம், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை தாசில்தார் கலைவாணி நன்றி கூறினார்.

    ×