என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
    X

    ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

    • பெட்டிக்கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள்
    • புகையிலைப் பொருட்களை கடையில் விற்கிறீர்கள்?, என தட்டிக் கேட்டுள்ளார்

    அன்னதானப்பட்டி:

    சேலம் அம்மாப்பேட்டை , சுப்ரமணிய பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தாதகாப்பட்டி பாட்டப்பன் காடு பகுதிக்கு சவாரி வந்திருந்தார். அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனைப் பார்த்த அப்துல், கடை உரிமையாளரிடம் ஏன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடையில் விற்கிறீர்கள்?, என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அப்துலை தாக்கி, அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் தாதகாப்பட்டி பாட்டப்பன் காடு ரெட்டை கிணறு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 65 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 150 பான் மசாலா பாக்கெட்டுகள், 10 கூல் லிப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த எடை 2 கிலோ 900 கிராம், மதிப்பு ரூ.2900 ஆகும்.

    Next Story
    ×