என் மலர்tooltip icon

    சேலம்

    • சத்திரம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்
    • சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார்

    சேலம்:

    சேலம் பொன்னாம்மா–பேட்டை புது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் அஜித் (வயது 23).

    வெள்ளி பட்டறை தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சத்திரம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாரியை முந்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நேருக்கு நேர் பலமாக மோதியது
    • 2 பேரும் உடல்நசுங்கி இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி 1-வது வார்டை சேர்ந்த அண்ணாமலை மகன் வசந்தபிரசாத் ( வயது 22). இவரது நண்பர் வைத்திய கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பூமலை மகன் யுவராஜ் (22).

    இருவரும் நேற்று வாழப்பாடியில் இருந்து பெரிய கிருஷ்ணாபுரம் நோக்கி இரு சக்கர வாக னத்தில் சென்றனர். கொட்ட வாடி பிரிவு சாலை அருகே லாரியை முந்த முயன்ற போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த விபத்தில் வசந்த பிரசாத், யுவராஜ் ஆகிய 2 பேரும் உடல்நசுங்கி வாலி பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
    • தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

    வாழப்பாடி:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், வாழப்பாடியில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.

    வட்டாரத் தலைவர் விஜயராஜ், செயலாளர் அண்ணாமலை, பொரு–ளாளர் இளங்கோவன் மற்றும் வாழப்பாடி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணடனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.

    நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்கிட வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பபப்ட்டது.

    • கோவில்கள் வண்ணம் திட்டி புதுப்பிக்கப் பட்டு கும்பாபிஷேக விழா நடத்திட முடிவு
    • தீமிதித் திருவிழா நடத்து வதற்கு அம்மன் உத்தரவு கொடுக்க வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பழமை யான மாரியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவில்கள் அமைந்துள் ளன.இக்கோவில்கள் வண்ணம் திட்டி புதுப்பிக்கப் பட்டு கும்பாபிஷேக விழா நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதித் திருவிழா நடத்திட ஊர் பெரியதனக்காரருக்கு, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து, நேற்று மாலை வாழப்பாடி மாரியம்மன் சன்னதியில் கூடிய ஊர் பெரிய தனக்கா ரர்கள் மற்றும் பொதுமக்கள், மேள வாத்திய முழங்க, தாம்பூல தட்டுகளுடன் திரவுபதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    தீமிதித் திருவிழா நடத்து வதற்கு அம்மன் உத்தரவு கொடுக்க வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர்.

    கோவில் மண்டபத்தில் அமர்ந்து குபேர மூலையில் பல்லி சத்தமிட்டால் நல்ல சகுனம் என கருதி வேண்டிக் கொண்டனர். பொதுமக்கள் அமைதியாக அமர்ந்த ஒரு சில நிமிடங்களில் எதிர்பார்த்த குபேர மூலையில் இருந்து பள்ளி பலமாக சத்தமிட்டது.

    இதனால், தீமிதித் திரு விழா நடத்துவதற்கு திரவு பதி அம்மன் உத்தரவு கொடுத்து விட்டதாக பக்தர்கள் பரவசம் அடைந்த னர். இதை தொடர்ந்து வாண வேடிக்கை நடத்தி மிகுந்த ஆரவாரத்தோடு, திருவிழா நடத்தப்படும் என அறிவித்தனர்.

    அதன் தொடர்ச்சியாக தீ மிதி விழா ஏற்பாடுகல் மும்முர மாக நடைபெற்று வருகிறது. 

    • வார்டு களில் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது
    • எங்கள் வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தர தலைவர் அனு மதி அளிக்கவில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டு 18 வார்டுகள் உள்ளன. இதில் 11 தி.மு.க கவுன்சிலர்கள், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள், 3 அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவி கவிதா மற்றும் கவுன்சிலர் ராஜா ஆகியோர் மற்ற கவுன்சிலர்களிடம் எந்த ஆலோசனையும் பெறாமல், தன்னிச்சையாக டெண்டர் விடுவது மற்றும் மற்ற வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் ஒரே நபருக்கு அனைத்து டெண்டர்களையும் வழங்குவதால், வார்டு களில் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பேரூராட்சி சம்பந்தப்பட்ட பணிகளை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என பலமுறை பேரூராட்சி செயல் அலுவலர், பேரூ ராட்சி தலைவி கவிதாவிடம் மனு கொடுத்தும், இதை இதை கண்டு கொள்ள வில்லையாம்.

    இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் நேற்று பேரூராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தட்டுடன் உடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தம்மம்பட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் பேரூராட்சி தலைவி கவிதா, கவுன்சிலர் ராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில், அடிப்படை வசதிகளை செய்து தருகி றோம் எனக்கூறி நாங்கள் வார்டு மக்களிடம் வாக்குகள் பெற்றுள்ளோம். ஆனால் எங்கள் வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தர தலைவர் அனு மதி அளிக்கவில்லை. இதனால் எங்களால் வார்டுக்குள் செல்ல முடியவில்லை.

    மேலும் தம்மம்பட்டியில் பேரூராட்சியில் ஒரே ஒப்பந்தாரிடம் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் விடப்பட்டதால் ஊருக்குள் எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பேரூ ராட்சி மன்ற கூட்டம் நடத்த வேண்டும். பேரூராட்சியில் நடக்கும் அனைத்து திட்டங்க ளும் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றனர். இதை ஏற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் பேரூராட்சி தலைவி கவிதா ஆகியோர், போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர்.மேலும் கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், தங்களுடைய பிரச்சனை களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொலை பேசி மூலம் கவுன்சிலர்க ளிடம் தெரிவித்தார். இதை யடுத்து சுமார் 8 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தை கவுன்சி லர்கள் கைவிட்டனர். 

    • ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார்.
    • விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் காங்கேயத்தான் (வயது 22). பொறியியல் படித்துள்ளார். இவர் நேற்று பகல், தனது நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) ஆகியோருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சேலம்-விருத்தாசலம் ரெயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அந்த வழியாக காரைக்காலிருந்து பெங்களுரு செல்லும் ரெயில் வந்தது. இதைப்பார்த்த காங்கேயத்தான் ஓடும் ரெயில் முன்பாக சென்று செல்பி எடுக்க முயன்றார்.

    இதனிடையே வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். அவர் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான காங்கேயத்தான் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதும், ரெயில் அருகே சென்று செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    இந்த வழக்கம் விபரீதித்தில் முடிந்துள்ளதாக அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவித்தனர்.

    • வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நேரங்களில், ஸ்பிரிங்ளரில் வெளியாகும் நீர் சாரலில் நனைந்தபடி புள்ளி மான்கள், கடமான்கள் உற்சாகமாக புற்களை மேய்கின்றன.
    • குரங்குகள், கிளி உள்ளிட்டவற்றுக்கு வெயில் நேரத்தில் தர்பூசணி, வெள்ளிரி பழங்கள் வழங்கப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் குரும்பப்பட்டி பகுதியில் 31 ஹெக்டேரில் தமிழக அரசுக்கு சொந்தமான வன உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு புள்ளி மான், கடமான், குரங்கு, தேவாங்கு, நரி மலைப்பாம்பு, நட்சத்திர ஆமை, முதலை, நீர்ப்பறவைகள் உள்பட 24 வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை 200-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பராமரிக்கப்படுகின்றன.

    சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பள்ளிக் குழந்தைகள், ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் என தினமும் ஏராளமானோர் இப்பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.

    இதனிடையே, கோடை காலம் தொடங்கி விட்டதல், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வன விலங்குகளுக்கு, வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புள்ளி மான்கள், கடமான்கள் உள்ளிட்டவை உலாவும் பகுதியில், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் நவீன நீர் தெளிப்பான் கருவியான ஸ்பிரிங்ளர் அமைத்து நீரை நாலாபுறமும் தெளித்து வருகின்றனர்.

    இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அப்பகுதி குளிர்ச்சியாக இருப்பதுடன், மண்ணிலும் ஈரப்பதம் அதிகரித்து தரை சூடாவது தவிர்க்கப்படுகிறது.

    வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நேரங்களில், ஸ்பிரிங்ளரில் வெளியாகும் நீர் சாரலில் நனைந்தபடி புள்ளி மான்கள், கடமான்கள் உற்சாகமாக புற்களை மேய்கின்றன.

    இதேபோல் குரங்குகள், கிளி உள்ளிட்டவற்றுக்கு வெயில் நேரத்தில் தர்பூசணி, வெள்ளிரி பழங்கள் வழங்கப்படுகின்றன. மயில் உலாவும் இடத்தில், வெயில் நேரத்தில் நீர் பனித்தூவலாக பரவுவது போன்ற அமைப்பு செய்யப்பட்டு, அங்கு குளிரூட்டப்படுகிறது. எப்போதும் தரையில் ஈரப்பதம் இருக்கும்படி தொடர்ந்து வனத்துறையினர் பராமரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 9-ந் தேதி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருட்டு சாவி மூலம் திருட முயன்றார்.
    • அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி, தெக்களூரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 26). இவர், கடந்த 9-ந் தேதி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருட்டு சாவி மூலம் திருட முயன்றார். அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி அவரது கூட்டாளியான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சடையன்பாளையத்தை சேர்ந்த ராஜா (27) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

    இருவரும் சேர்ந்து தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதனால் இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் முடிவு செய்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
    • மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு அவர் நிருபர்களிடம் கூறும்போது,

    நாங்கள் வாழப்பாடி பகுதியில் வசித்து வருகிறோம். நான், என்னுடன் தங்கை மற்றும் தம்பி ஆகிய 3 பேரும் கல்லூரியில் படித்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மின்சார அலுவலகத்தில் மனு அளித்திருந்தோம்.

    இந்த நிலையில் மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு, மின் இணைப்பு வழங்க விடாமல் மிரட்டி வரும் தி.மு.க கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் ஊராட்சியில் சமீபத்தில் 2 லட்சும் ரூபாய் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
    • சமூக விரோத கும்பல் முகாமிடுவதால் பாதுகாப்பு காரணங்க ளுக்காக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துள்ளோம் என்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் ஊராட்சி யில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். அங்கு ஏரிக்கரை அருகே சுகாதார வளாகம் உள்ளது. அதை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ள தால், மக்கள் பயன்படுத்த முடியவில்லை.

    இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சமீபத்தில் 2 லட்சும் ரூபாய் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால் கதவு, பைப் உள்ளிட்டவற்றை சமூக விரோதிகள் உடைத்த னர்.

    மேலும் சுகாதார வளாகத்தில் மது அருந்து கின்றனர். இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் தயங்கு கின்றனர். சமூக விரோத கும்பல் முகாமிடுவதால் பாதுகாப்பு காரணங்க ளுக்காக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துள்ளோம் என்றனர்.

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 11 குழுக்களைக் கொண்ட 33 பறக்கும் படையினர், 215 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளிலும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்வுகள் அனைத்தும் காலையில் ெதாடங்கி மதியம் வரை நடை பெறுகின்றன.

    தமிழ் முதல்தாள்

    முதல் நாளான, இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மொழிப்பாட தேர்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வையொட்டி அதிகாலை முதலே மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து மும்முரமாக பாடங்களை படித்தனர். காலை 7 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நோட்டீசு போர்டில் பெயர் மற்றும் பதிவு எண், தேர்வு அறை எண் ஆகியவை கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. அவற்றை பார்த்து, மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வை அறையை தெரிந்து கொண்டனர்.

    பின்னர் காலை 9 மணி அளவில் இறை வழிபாடு நடைபெற்றது. அதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று விட்டு தங்களது தேர்வு அறைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பறக்கும் படையினர், தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று தேர்வுகள் நடைபெறுவதை கண்காணித்தனர். தேர்வையொட்டி பள்ளி களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கலெக்டர் ஆய்வு

    சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    பொதுத்தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். தலைமை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் அன்றாடம் நம்பிக்கை அளித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் ஒரு தேர்வு முடிந்த பின், அதைப்பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்து அடுத்தடுத்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் தேர்வு நேரங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் போதிய நேரம் தூங்க வைத்து, சத்தான உணவுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்பிட வேண்டும். பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மண்டி உரிமையாளர்கள் மாம்பழங்களை பெட்டிகளில் அடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தும் வருகின்றனர்.
    • மாங்காய் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்தில் இருந்து மாம்பழங்கள் சென்னை மற்றும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இது தவிர மண்டி உரிமையாளர்கள் மாம்பழங்களை பெட்டிகளில் அடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தும் வருகின்றனர். இந்த ஆண்டு தற்போது மாங்காய்கள் மண்டிகளுக்கும், பழக்கடைகளுக்கும் வியாபாரத்திற்கு வந்துள்ளது.

    அடுத்த மாதம் முதல் கூடுதலாக விற்பனைக்கு மாங்காய்கள் வரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:

    தற்போது அல்போன்சா மற்றும் செந்தூரா போன்ற மாங்காய்கள் விற்பனைக்கு வருகிறது. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்கு பிறகு கூடுதலாக மாங்காய் விற்பனைக்கு வரும். ஏப்ரல் மாத இறுதியில் மா அறுவடை சீசன் முழுவீச்சில் நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை சீசன் இருக்கும்.

    இந்தாண்டு மாங்காய் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது சேலம் மாவட்டம் நங்கவள்ளி, வரகம்பாடி, மல்லூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து அதிகம் மாங்காய் வர தொடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×