என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி அலுவலக நுழைவு வாயிலில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்திய கவுன்சிலர்கள்.
தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய கவுன்சிலர்கள்
- வார்டு களில் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது
- எங்கள் வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தர தலைவர் அனு மதி அளிக்கவில்லை.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டு 18 வார்டுகள் உள்ளன. இதில் 11 தி.மு.க கவுன்சிலர்கள், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள், 3 அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவி கவிதா மற்றும் கவுன்சிலர் ராஜா ஆகியோர் மற்ற கவுன்சிலர்களிடம் எந்த ஆலோசனையும் பெறாமல், தன்னிச்சையாக டெண்டர் விடுவது மற்றும் மற்ற வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் ஒரே நபருக்கு அனைத்து டெண்டர்களையும் வழங்குவதால், வார்டு களில் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பேரூராட்சி சம்பந்தப்பட்ட பணிகளை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என பலமுறை பேரூராட்சி செயல் அலுவலர், பேரூ ராட்சி தலைவி கவிதாவிடம் மனு கொடுத்தும், இதை இதை கண்டு கொள்ள வில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் நேற்று பேரூராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தட்டுடன் உடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தம்மம்பட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் பேரூராட்சி தலைவி கவிதா, கவுன்சிலர் ராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில், அடிப்படை வசதிகளை செய்து தருகி றோம் எனக்கூறி நாங்கள் வார்டு மக்களிடம் வாக்குகள் பெற்றுள்ளோம். ஆனால் எங்கள் வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தர தலைவர் அனு மதி அளிக்கவில்லை. இதனால் எங்களால் வார்டுக்குள் செல்ல முடியவில்லை.
மேலும் தம்மம்பட்டியில் பேரூராட்சியில் ஒரே ஒப்பந்தாரிடம் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் விடப்பட்டதால் ஊருக்குள் எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பேரூ ராட்சி மன்ற கூட்டம் நடத்த வேண்டும். பேரூராட்சியில் நடக்கும் அனைத்து திட்டங்க ளும் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றனர். இதை ஏற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் பேரூராட்சி தலைவி கவிதா ஆகியோர், போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர்.மேலும் கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், தங்களுடைய பிரச்சனை களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொலை பேசி மூலம் கவுன்சிலர்க ளிடம் தெரிவித்தார். இதை யடுத்து சுமார் 8 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தை கவுன்சி லர்கள் கைவிட்டனர்.






