என் மலர்
சேலம்
- காளிமுத்து என்பவரையும், பெரியண்ணன் மனைவி தங்கம்மாள் என்பவரையும் தனது பெற்றோர் என கூறி அவர்கள் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
- காளிமுத்து திருமணம் ஆகாமலேயே இறந்தவர் ஆவார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை சேர்ந்த துரைசாமி மனைவி சாந்தி. இவர் அதே பகுதியைச் காளிமுத்து என்பவரையும், பெரியண்ணன் மனைவி தங்கம்மாள் என்பவரையும் தனது பெற்றோர் என கூறி அவர்கள் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார். இதில் காளிமுத்து திருமணம் ஆகாமலேயே இறந்தவர் ஆவார். அதுமட்டுமின்றி, வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து, 2019 மார்ச் 13 அன்று காளிமுத்துக்கும், 2021 மார்ச் 18–-ல் தங்கம்மாளுக்கும் தானே வாரிசு என போலியாக வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த தங்கம்மாளின் மகனான வாழப்பாடியில் வசித்து வரும் சேகர் என்பவர், சாந்தி, தனது தாயார் பெயரில் போலியாக வாங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, ஆத்துார் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆத்துார் கோட்டாட்சியர் சரண்யா, சாந்தி போலியாக பெற்ற 2 வாரிசு சான்றிதழ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, தனது தாய் தங்கம்மாள் பெயரில் போலி வாரிசு சான்றிதழ் பெற்று, தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் சாந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏத்தாப்பூர் போலீசில் சேகர் புகார் தெரிவித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்துார் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரணை செய்த ஆத்துார் நடுவர் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, போலி வாரிசு சான்றிதழ் பெற்ற சாந்தி மற்றும் பொய் சாட்சியளித்த சாந்தியின் மகன் ராஜேந்திரன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பரமணி. பாப்பா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திட ஏத்தாப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் சாந்தி, ராஜேந்திரன், சுப்பரமணி மற்றும் பாப்பா ஆகிய 4 பேர் மீதும், 3 பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகராஜன் (வயது 27). கிச்சிபாளையத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய இவரை கிச்சிபாளையம் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
- வழக்கு தொடர்பாக அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சேலம் கோர்ட்டு கடந்த 10 நாட்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
சேலம்:
சேலம் மூன்றாம் கரடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 27). கிச்சிபாளையத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய இவரை கிச்சிபாளையம் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இதற்கு இடையே வழக்கு தொடர்பாக அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சேலம் கோர்ட்டு கடந்த 10 நாட்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர் .
இந்த நிலையில் நாகராஜன் நேற்று இரவு போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- மாதம்மாள்(வயது58). இவர் கணவருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தன் தாயாருடன் வசித்து வந்தார்.
- விநாயகர்புரம் என்ற இடத்தில் துணி துவைப் பதற்காக சென்றார். அப்போது தவறுதலாக ஆழமான இடத்திற்குச் சென்ற மாதம்மாள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாதம்மாள்(வயது58). இவர் கணவருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தன் தாயாருடன் வசித்து வந்தார்.
நேற்று அவர் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி அருகே உள்ள விநாயகர்புரம் என்ற இடத்தில் துணி துவைப் பதற்காக சென்றார். அப்போது தவறுதலாக ஆழமான இடத்திற்குச் சென்ற மாதம்மாள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாதம்மாள் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
- ஜான்சன் (வயது 56). இவர், காரில் 4 பேருடன் தண்டாரம்பட்டு பகுதியில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
- கார் சேலம் அம்மாபேட்டை பெருமாள் கோவில் மேடு அருகே இரவு வந்தபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே காரை ஓரமாக நிறுத்தி 4 பேரும் கீழே இறங்கினர்.
சேலம்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு வி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 56). இவர், காரில் 4 பேருடன் தண்டாரம்பட்டு பகுதியில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது கார் சேலம் அம்மாபேட்டை பெருமாள் கோவில் மேடு அருகே இரவு வந்தபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே காரை ஓரமாக நிறுத்தி 4 பேரும் கீழே இறங்கினர். அதற்குள் கார் மளமள தீப்பிடித்து எரிந்தது. சுதாரித்துக்கொண்டு உடனடியாக 4 பேரும் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.
இது குறித்து அம்மா பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அணைக்கு வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
- தற்போது அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 8-வது நாளாக நேற்றும், விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று 547 இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 454 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்துவருகிறது. நேற்று 99.64அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 98.98 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ந் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். கடந்த 2022-ம் ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து, 249 நாட்களில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 205 டி.எம்.சி. தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 8.40 டி.எம்.சி. தண்ணீரும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி முதல், டெல்டா பாசனத்திற்காக தினமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ந்தேதி 100 அடிக்கும் கீழ் சரிந்த நீர்மட்டம், ஓராண்டுக்கு பின்பு மீண்டும் 100 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது.
- ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
- சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஏற்காடு மலை பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது.
சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.
- சேலம் அம்மாபேட்டை வையாபுரி தெருவில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது.
- 3 பேரும் பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர்கள். மாலையில் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை வையாபுரி தெருவில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெரிய கிணறு தெரு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் இவரது மகன் கோகுல் (வயது 12), 7-ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் கார்த்திகேயன் (13) 8-ம் வகுப்பும், ராஜேந்திரன் மகன் தரண் (14) 9-ம் வகுப்பும் படித்து வருகின்றார்கள். இவர்கள் 3 பேரும் பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர்கள். மாலையில் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் இன்று பள்ளிக்கு வரவில்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மாணவர்கள் காணவில்லை. இது குறித்து அம்மாபேட்டை போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
- உணுவு வணிகம் புரிவோர், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
- உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது தண்டனைக்குரிய குற்றம். 6 மாத சிறை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உணுவு வணிகம் புரிவோர், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெங்கவல்லி, காடை யாம்பட்டி, கொங்கணா புரம், வாழப்பாடி, வீர பாண்டி, ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிக ளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கும் பணி மேற்கொள்ளப் பட்டன. இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது தண்டனைக்குரிய குற்றம். 6 மாத சிறை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், உணவு வணிகம் புரிவோர் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தங்களுக்கான உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ரூ.12 லட்சத்திற்கு மேல் விற்பனை உள்ளவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுதல் வேண்டும்.
ரூ.12 லட்சத்துக்கு கீழ் விற்பனை உள்ளவர்கள் பதிவு சான்றிதழ் பெற்றால் போதும். உரிமம் பெறு வதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி பெற்று கொள்ள லாம். பதிவு சான்றிதழ் பெறுவதற்கு ரூ.100 ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி பெற்று கொள்ள லாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
- ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது.
- சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோ ழபுரம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்கிறது.
சேலம்:
ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது. சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோ ழபுரம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்கிறது. இந்த பகுதியில் ஒரு சில சாயப்பட்டறைகளின் கழிவு நீர் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றி விடுவதாக புகார் எழுந்துள்ளது. அப்படி வெளியேற்றப்படும் கழிவுநீர், நுரை பொங்கி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவ தாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதாகவும், கழிவுநீர் கலந்து செல்வதால், நுரை பொங்கி வருவதால் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயி கள் தெரிவிக்கின்றனர். திருமணிமுத்தாற்றில் சாய கழிவுநீரை கலப்பதை தடுக்க மாசுகட்டுப்பாடு வாரியம் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அதனை தடுக்க முடியும். மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது கழிவுநீர் வெளியேற்று வதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் திருமணிமுத்தாற்றில் ஆய்வு செய்தனர். சாய கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது
சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்ட றையை கண்டறிந்து, அந்த பட்டறையை முடியும், மின் இணைப்பு துண்டிக்கப் பட்டும் வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனு மதி பெறாமல், சாயப்பட்ட றையின் கழிவுநீரை வெளியேற்றினால் அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அந்த பட்டறை மூடப்படும். கழிவுநீரினை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மூடப்படும்.
அபராதம் விதிக்கப்படும். அனுமதி பெறாத சாயப்பட் டறைக்கு வாடகைக்கு அளித்தால், அந்த உரிமையா ளர் மீது வழக்கு தொட ரப்படும். அந்த உரிமையாள ரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூ லிக்கப்படும்.திருமணி முத்தாற்றில் சாயக்கழிவு நீரை கலப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
- வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகி யுள்ளது.
- இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம்:
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகி யுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்க ளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழையும் பல இடங்களில் கனமழையும் பதிவாகும்.
வரும் நாட்களில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களி லும் ஓரிரு நாட்கள் மழை எதிர்பார்க்கலாம். அடுத்த 4 நாட்களை பொறுத்தவரை குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள் அதிக மழையை சந்திக்கும். இதனால் வெப்பத்தில் பிடியில் இருந்து சற்று விடுதலை கிடைக்கும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- நிதி நிறுவன உரிமையாளரான இவருக்கு, அதே பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. விவசாயமும் செய்து வருகிறார்.
- நேற்று காலையில் தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
சேலம்:
சேலம், நெத்திமேடு, ஞானபத்ம அவென்யூவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 44). நிதி நிறுவன உரிமையாளரான இவருக்கு, அதே பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. விவசாயமும் செய்து வருகிறார். இவர் நேற்று காலையில் தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, காரில் வந்த கும்பல், தினேஷ்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த, 3 பவுன் சங்கிலி, 4,500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர்.
இது குறித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, சேலம் தாசநாயக்கன்பட்டி, இரும்புதலை ஈத்துக்காட்டை சேர்ந்த செந்தில்குமார் (38), அவரது கூட்டாளியான நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா நடுத்தெருவை சேர்ந்த இளங்கோவன் (43), ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நகை, பணத்தை மீட்டு, காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது கூட்டாளிகள் 7 பேரை தேடுகின்றனர்.
- விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு மானியம் வேண்டி சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மணியார் குண்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. இவர், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு மானியம் வேண்டி சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
இதையடுத்து ரூ.7.50 லட்சம் மதிப்பிலான டிராக்டருக்கு 50 சதவீதம் மானியம் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று குமாரிடம் தாட்கோ மேலாளர் (பொறுப்பு) ஜி.சாந்தி கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர்களது ஆலோசனையின்பேரில் கடந்த 15-ந் தேதி தாட்கோ அலுவலகத்திற்கு விவசாயி குமார் சென்றார்.
இதையடுத்து அங்கிருந்த தாட்கோ மேலாளர் ஜி.சாந்தியிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது, அதை அலுவலக உதவியாளர் எம்.சாந்தியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
பணியிடை நீக்கம்
இதைத்தொடர்ந்து அவரிடம் குமார் லஞ்ச பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைதான தாட்கோ பெண் மேலாளர் ஜி.சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் எம்.சாந்தி ஆகிய 2 பேரையும் நேற்று பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.






