என் மலர்
நீங்கள் தேடியது "பிஸிநெஸ்ம்ன"
- நிதி நிறுவன உரிமையாளரான இவருக்கு, அதே பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. விவசாயமும் செய்து வருகிறார்.
- நேற்று காலையில் தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
சேலம்:
சேலம், நெத்திமேடு, ஞானபத்ம அவென்யூவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 44). நிதி நிறுவன உரிமையாளரான இவருக்கு, அதே பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. விவசாயமும் செய்து வருகிறார். இவர் நேற்று காலையில் தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, காரில் வந்த கும்பல், தினேஷ்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த, 3 பவுன் சங்கிலி, 4,500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர்.
இது குறித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, சேலம் தாசநாயக்கன்பட்டி, இரும்புதலை ஈத்துக்காட்டை சேர்ந்த செந்தில்குமார் (38), அவரது கூட்டாளியான நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா நடுத்தெருவை சேர்ந்த இளங்கோவன் (43), ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நகை, பணத்தை மீட்டு, காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது கூட்டாளிகள் 7 பேரை தேடுகின்றனர்.






