என் மலர்tooltip icon

    சேலம்

    • சாலை விரிவாக்கம் செய் யும் பணி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது.
    • மொத்தம் 51.7 கிலோமீட்டர் தொலைவில் விரிவாக்கம் செய்யப்படு கிறது.

    சங்ககிரி

    சென்னை-கன்னியா குமரி தொழிற்தடத்திட்டம் மூலம் சேலம் மாவட்டம் ஓமலூர், தாரமங்கலம், சங்ககிரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வரை ரூ.446 கோடி மதிப்பில் சாலை விரி வாக்கம் செய் யும் பணி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது.

    90 சதவீதம் நிறைவு

    மொத்தம் 51.7 கிலோமீட்டர் தொலைவில் விரிவாக்கம் செய்யப்படு கிறது. இந்த சாலையானது 28 மீட்டரில் இருந்து 35 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இப்பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது சங்ககிரி ஆர்.எஸ் பகுதி அருகே ரெயில்வே மேம்பா லம் அமைக்கும் பணிக்காக கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டால் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வெப்படை வழியாக சுற்றிச் செல்லாமல் வாகனங்களின் பயண தூரமும், எரிபொரு ளும் வெகுவாக குறையும். இது குறித்து நெடுஞ் சாலை துறை அதி காரிகள் கூறுகையில், சாலைப்பணி யானது தரமாகவும், பாது காப்பாகவும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட் டிற்கு விடப்படும் என்றனர்.

    • காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல்
    • காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

    மேட்டூர்

    மேட்டூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மேட்டூரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, தூக்கனாம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

    • தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது.
    • மலை கிராமங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்காடு

    தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேக மாக பரவி வருகிறது. இதையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் டெங்கு பரவாமல் இருக்க சுகாதார துறையினர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் ஜெமினி உத்தரவின் பேரில் வட்டார மருத்துவஅலுவலர் தாம்சன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், ராஜேஷ், புரு சோத்தமன் மற்றும் பணியா ளர்கள் கொண்ட குழு ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    அப்போது வீடுகளை சுற்றி மழைநீர் தேங்க கூடியபொருட்களை அப்புறப்ப டுத்தினர். மேலும் மலை கிராம மக்களுக்கு டெங்குகொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி னர். பொது இடங்களிலும் தண்ணீர் தேங்க கூடிய பொருட்களை அழித்தனர்.

    • கள்ளத்தொடர்பை கண்டித்ததால் வெட்டி கொன்றேன்
    • கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா எனது கடை யில் வேலை பார்த்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    சேலம்

    சேலம் மாவட்டம் வீர கனூர்ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் செல்வம் ( 55). வைக்கோல் வாங்கி மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    பேன்சி ஸ்டோர்

    இவரது நண்பர் செல்வ ராஜ் (58),இவர் வீரகனூர் பஸ் நிலைய பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரது கடையில் செல்வம் மனைவி சத்யா வேலை செய்து வந்தார். அப்போது இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இதனை செல்வராஜின் மனைவி தாரா கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2017-ம் ஆண்டு தாராவை செல்வராஜ் கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தார்.இதற்கிடையே குடும்ப தகராறால் செல்வத்தை விட்டு சத்யா பிரிந்தார். இத னால் கடந்த 4 ஆண்டு களாக வாழப்பாடி பகுதியில் சத்யா தனியாக வசித்து வந்தார். இதையடுத்து சத்யாவை, செல்வராஜ் மீண்டும் தனி யாக சந்தித்து வந்தார். இதனை அறிந்த செல்வம் கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    வெட்டி கொலை

    இந்த நிலையில் வீரகனூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் அமர்ந்து செல்வம் பேசிக்கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் திடீரென செல்வத்தின் தலையில் வெட்டினார். அதனை தடுக்க முயன்றதில் 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. இதில் மணிக்கட்டு துண்டானதால் செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்த செல்வராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.தகவல் அறிந்த வீரகனூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு யாரும் உத விக்கு வராததால் அந்ததோணி மைக்கேல் தனது காரில் ஏற்றி வீரகனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சேர்த்த சிறிது நேரத்தில் செல்வம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    வாக்குமூலம்

    இதற்கிடையே செல்வராஜ் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது-கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா எனது கடை யில் வேலை பார்த்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகி வந்தேன். இதனை அறிந்த எனது மனைவி என்னை கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டி கொலை செய்தேன். பின்னர் ஜெயிலுக்கு சென்று வெளியில் வந்த நான் கடும் மன உளைச்ச லில் இருந்தேன், இந்த நிலை யில் சத்யாவுடன் மீண்டும் நெருங்கி பழகினேன், இதனை செல்வம் கண்டித்தார்.இதனால் எனக்கு செல்வத்தின் மீது ஆத்திரம் ஏற்பட்டதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன், அதன்படி நேற்று எனது பேன்சி ஸ்டோர் அருகே உள்ள ஒரு கடையில் செல்வம் இருப்பதை அறிந்து அங்கு சென்றேன், பின்னர் தான் மறைத்து வைத்து எடுத்து சென்ற அரிவாளால் சரமாரி யாக தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடினேன், இதில் அவர் இறந்து விட்ட நிலையில் போலீசார் என்ைன கைது செய்து விட்ட னர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.கைதான செல்வராஜை இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீ சார் நடவ டிக்ைக எடுத்து வருகிறார்கள்.  

    • மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
    • இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.

    தனியார் நிறுவனம்

    இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் சென்னையை தலைமையி டமாக கொண்டு இயங்கும் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் நிலக்கரி கையா ளும் பிரிவு, முதன்மை அரவை மற்றும் 2-ம் நிலை அரவை, கொதிகலன் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு ஒப்பந்தங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    முறைகேடு புகார்

    இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரி யத்திற்கு சப்ளை செய்த பொருட்களில் இந்நிறு வனம் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்துள்ள தாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்த மான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை யில் ஈடுபட்டனர்.

    சோதனை

    இதன் அடிப்படையில் மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா? வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மேட்டூர் அனல்மின் நிலை யத்தில் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனத்தில் நேற்று காலை 7 மணிக்கு வருமானவரித் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    13 மணி நேரம்

    இதில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கணினி யில் பதிவாகி இருந்த தகவல்களை சோதனை செய்தனர். மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்களி டமும் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி னர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.

    வருமான வரித்துறையி னரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதி காரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. ஆனால் கைப் பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவல்களை யும் அதிகாரிகள் தெரிவிக்க வில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காலை சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது உணவின் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலு வலரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநருமான சங்கர் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலம் வந்தார்.

    காலை உணவு திட்டம்

    தொடர்ந்து இன்று காலை சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவின் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அல்லிக்குட்டை ஏரியில் நடைபெற்று வரும் புனர மைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் மேற்கொள்ளப் பட்டுள்ள புனரமைப்பு பணிகள் மற்றும் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆரம்ப சுகாதார நிலையம்

    தொடர்ந்து சேலம் பொன்னம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சை கள் குறித்து நோயா ளிகளி டம் கேட்டறிந்தார். அப்போது மருந்து மாத்திரை இருப்பு குறித்தும் கேட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதி காரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர் மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும் இன்று பிற்பகல் வட கிழக்கு பருவ மழையை யொட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி கள் குறித்தும் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

    ரூ.19 கோடி மதிப்பு

    இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது:-

    கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது குறித்த நேரத்தில் சத்தான உணவுகளை, சுகாதார மான முறையில் சமைத்து வழங்கி வரும் சமைய லர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மையத்தி னையும், அல்லிக்குட்டை ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனர மைப்பு மற்றும் அழகு படுத்தும் பணிகளை யும், அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நோயாளி களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் இருப்பு போதிய அளவில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் போடிநாயக்கன் பட்டி ஏரியில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி களும் ஆய்வு செய்யப் பட்டது. சேலம் மாநக ராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலு வலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவா திஸ்ரீ மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கோகுல் (20). இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை பகுதிக்கு பூ வாங்க சென்றுள்ளார்.
    • அப்போது அந்த வழியாக வந்த கார் கோகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் வீராணம் மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கோகுல் (20). இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை பகுதிக்கு பூ வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் கோகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலக்கியா (40). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள அரசு அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • மாலையில் கல்லூரி முடிந்து மகள் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    சேலம்:

    சேலம் அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி இலக்கியா (40). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள அரசு அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்று விட்டார். இவரது மகளும், மகனும் வெளியில் சென்றிருந்தனர். மாலையில் கல்லூரி முடிந்து மகள் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து இலக்கியாவுக்கு மகள் தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த இலக்கியா சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீடு புகுந்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • பட்டாசு உற்பத்தி செய்யும்‌ பணியாளர்கள்‌, விற்பனையாளர்களுக்கு விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு, விற்பனை குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்‌ சேலம்‌ கலெக்டர்்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்றது.
    • இப்பயிற்சி முகாமில்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள்‌, பட்டாசு விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள்‌ என 200க்கு மேற்பட்டோர்‌ கலந்து கொண்டனர்‌.

    சேலம்:

    சேலம் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் ஓசூர் இணை இயக்குநர்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகளில் தீ மற்றும் வெடிவிபத்து நடைபெறாமல் தடுப்பதற்கு, அத்தொழிலில் ஈடுபடும் உரிமையாளர்கள், பட்டாசு உற்பத்தி செய்யும் பணியாளர்கள், விற்பனையாளர்களுக்கு விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு, விற்பனை குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் சேலம் கலெக்டர்் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இப்பயிற்சி முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் என 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை ஏற்று தொடங்கி வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பட்டாசு தயாரித்தல் தொடர்பான பாதுகாப்பு கையேடு வெளியிட்டார்.

    அதனை தொழிற்சாலையின் உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமை உரையில் பட்டாசு தயாரிப்பில் அனுமதிக்கப்பட்ட ரசாயனங்களை அளவுடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பயன்படுத்தி கவனத்துடன் செயல்பட்டு விபத்தில்லா உற்பத்தி பணி செய்யவேண்டும் எனவும் பட்டாசு விற்பனையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தில் குறிப்பிட்டுள்ள் அளவில் மட்டும் பட்டாசு சேமித்து வைத்து எளிதில் தீப்பிடிக்கும் மற்ற பொருட்கள் இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்ய வேண்டுமென எடுத்துரைத்தார்.

    இப்பயிற்சி வகுப்பில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் பட்டாசு தயாரித்தலின் போது ரசாயனங்களை கையாளுதல் மற்றும் மருந்து கலவைகள் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட அளவில் ரசாயனங்களை பயன்படுத்துதல், இருப்பு வைத்தல், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை உடனுக்குடன் சேமிப்பு அறைக்கு எடுத்துச்செல்லுதல் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்கள். மேலும் அதிகளவில் ரசாயன கலவைகளை பயன்படுத்துதல் மற்றும் அதிக அழுத்தத்துடன் மருந்து கலவை செலுத்துவதால் ஏற்படும் உராய்வின் காரணமாக விபத்துகள் ஏற்படுவது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. மருந்து கலவை தயார் செய்து நிரப்பும் பணியில் நன்கு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற தொழிலாளர்களை மட்டுமே பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பட்டாசு விபத்திற்கான காரணங்கள் மற்றும் பட்டாசு விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பட்டாசு விற்பனை கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் குறும்படக் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளால் விரிவாக விளக்கப்பட்டது.

    முகாமில் காட்சிகள், ஆவணப்படங்கள் மூலமாக தொழிலக தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாக அலுவலர்களால் செய்யப்பட்டது.

    • மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
    • வருமான வரித்துறையினரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிற

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் நிலக்கரி கையாளும் பிரிவு, முதன்மை அரவை மற்றும் 2-ம் நிலை அரவை, கொதிகலன் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்துள்ளது.

    இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு ஒப்பந்தங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சப்ளை செய்த பொருட்களில் இந்நிறுவனம் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதன் அடிப்படையில் மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா? வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மேட்டூர் அனல்மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனத்தில் நேற்று காலை 7 மணிக்கு வருமானவரித் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கணினியில் பதிவாகி இருந்த தகவல்களை சோதனை செய்தனர். மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்களிடமும் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.

    வருமான வரித்துறையினரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 4,674 கன அடி திறப்பு
    • கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழகம்-கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.

    இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

    ஏற்கனவே இதுபோல் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தியும் கர்நாடக அரசு கண்டு கொள்ளவில்லை. கர்நாடக அரசு பெயரளவுக்கு கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்திற்கு நேற்று முன்தினம் முதல் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 3,834 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. 2-வது நாளாக நேற்று 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு 4 ஆயிரத்து 674 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இன்றும் அதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது மண்டியா மாவட்டம் கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2,674 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,336 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது.

    அதேபோல மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 75.70 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர் 2,799 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டுகிறது. இந்த மழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 844 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 938 கன அடி நீர் வந்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 3,367 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 39.75 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.13 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் மேலும் சரிந்து 38.57 அடியானது.

    • தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
    • சேலம் மாநகரில் இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை லேசான சாரல் மழையாக பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேட்டூர், எடப்பாடி, கெங்கவல்லி பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. மேட்டூரில் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது.

    இதே போல எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, சித்தூர் ஆகிய பகுதிகளில் 12 மணிக்கு மேல் தொடங்கிய மழை 1 மணி நேரம் கன மழையாக கொட்டியது . பின்னர் விடிய விடிய தூறலாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு 1.30 மணியளவில் தொடங்கிய மழை 2.30 மணி வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம் மாநகரில் இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை லேசான சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 43.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடியில் 30.2, கெங்கவல்லியில் 14, ஓமலூர் 8.6, ஏற்காடு 4.4, சேலம் 1.6, சங்ககிரி 1.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 103.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ×