என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.57 அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.57 அடியாக குறைந்தது

    • அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 639 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 37.92 அடியாக இருந்த நிலையில் இன்று 37.57 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 639 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை பகுதியில் நேற்று 32.40 மி.மீட்டர் மழை பெய்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×