என் மலர்
ராணிப்பேட்டை
- கேமரா காட்சிகள் மூலம் விசாரணை
- தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்
ஆற்காடு:
ஆற்காடு தொல்காப்பியர் தெருவில் ஜெயித்தமால்சிங் (வயது 30) என்பவர் 5 ஆண்டு களாக செல்போன் மற்றும் அதற்கான உதிரி பாகங் கள் விற்னை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரம் முடித்து கொண்டு இரவு கடையை பூட்டி விட்டுச் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
கடையில் வைத்திருந்த ரூ.16 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 20 செல்போன்கள் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர்.
இது குறித்து ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.
அதில் மர்ம நபரின் முகம் பதிவாகி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் தனி படைகள் அமைக்க ப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.
- சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி வழிகாட்டுதல் படி , இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி ஆகியவை குறித்தும் ,சைபர் கிரைம் உதவி எண் 1930 பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) ருத்ரகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
- சூரிய ஒளி நீராவி உற்பத்தி அமைப்பு
- சுற்றுச்சூழல் மாசு பிரச்சனையும் தடுக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் ராணிடெக் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் , ராணிப்பேட்டையை சுற்றி இயங்கி வரும் 92 தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீரை சுத்திகரித்து கழிவுநீரை நன்னீராக மாற்றி மீண்டும் தொழிற்சாலைகளின் மறு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு பணிக்காக ரூ.3 கோடியே 54 லட்சம் செலவில் நாட்டிலேயே முதல் முறையாக அமெரிக்க தொழில்நுட்பத்தில் சூரிய ஒளி அமைப்பு மூலம் நீராவி உற்பத்தி செய்யும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 2.3 டன் விறகு கட்டைகள் எரிப்பது நிறுத்தப்பட்டு, செலவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு பிரச்சனையும் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணிடெக் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய ஒளி அமைப்பின் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்படுவதை ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி அமைப்பின் இந்திய பிரதிநிதி ரெனேவான்பெர்கல் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் தேபஜித் தாஸ், ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், நிர்வாக இயக்குநர் ஜபருல்லா, செம்காட் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன், எம்சோல் நிர்வாகிகள் ஜெய்பிரகாஷ் கர்ணா, ராஜ், ராணிடெக் பொதுமேலாளர் சிவக்குமார் மற்றும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மூலவர் ஆதி மஹாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
- இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும்
- கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்தி றனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும்.
முதல் வார செவ்வாய் கிழமைகளில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
எளிதில் வருவதற்கு ஏதுவாக அமைந்துள்ள மின்னல் ஊராட்சி என்.எல்.பி.திருமண மண்டபத்தில் நடைபெறும். 3 வார செவ்வாய்கிழமைகளில் கலவை,திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக,ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.
ஜூன் மாத முதல் வார செவ்வாய்கிழமையான வருகிற 6-ந் தேதி அன்று மின்னல் ஊராட்சியில் நடைபெறுகிறது.
அந்த சமயத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறாது.
மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் வரவேண்டும்.
பழைய அடையாள அட்டை தவற விடப்பட்டிருப்பின் புதியதாக பெற வேண்டுமெனில் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பெற்று வந்தும் விண்ணப்பித்தும் புது அட்டை பெற்றுக் கொள்ளலாம். பழைய அடையாள அட்டை இருப்பின் அதன் அசல் அவசியம் கொண்டு வர வேண்டும்.மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்
- உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை நெமிலி போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர். அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறியதாவது:- தங்கள் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மர்ம கும்பல் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வெளியூர்களுக்கு செல்லும்போது தங்கள் உறவினரிடம் அல்லது போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். இரவு நேரங்களில் பயணம் செல்லும் போது நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதை தவிர்க்கவேண்டும். பஸ்களில் பயணம் செய்யும்போது அறிமுகம் இல்லாத யாரிடமும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம்.
உள்ளிட்டவை குறித்து போலீசார் பொதுமக்களிடையே துண்டு பிரசுரத்தை கொடுத்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.
- மின் வயர் மீது முறிந்து விழுந்த மரங்கள்
- அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதில் ராணிப்பேட்டை நகரத்தில்
நவல்பூர், முத்துக்கடை, ரெயில்வே ஸ்டேஷன் சாலை,ஒத்தவாடை தெரு உள்பட பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்சார வயர்கள் மீது விழுந்தது.
இதில் மின்கம்பங்கள் சாய்ந்ததோடு மற்றும் மின் வயர்களும் சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நேற்று இரவிலேயே பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடனடியாக மரக்கிளைகளை அகற்றி மின் இணைப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டடார்.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு, மின்சார வாரியம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது விழுந்திருந்த மரக் கிளைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் தீயணைப்பு, நகராட்சி, மின்சார வாரிய அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் தனது நெஞ்சினில் 2 பேரும் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இணைபிரியாத நண்பர்கள் 2 பேரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விஷால் (வயது 19), பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த சில வருடங்களாக அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 28-ந்தேதி இரவு மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த விஷாலின் உயிர் நண்பனான அஜித் என்கிற குண்டு (வயது 20) சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார். தூக்கில் தொங்கிய நண்பனை கீழே இறக்கி கதறி அழுதார். மேலும் அஜித், விஷாலை ஆஸ்பத்திரிக்கு பதறி அடித்துக் கொண்டு தூக்கிச் சென்றார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், விஷால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் நண்பன் விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட கயிற்றை கையில் வைத்துக் கொண்டு, வாலிபர் அஜித் என்ன செய்வதறியாமல் அங்கும், இங்கும் பித்து பிடித்தது போல் சுற்றித்திரிந்தார். மேலும் விஷால் உடலை புதைத்த சுடுகாட்டிற்கு, அஜித் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
கடந்த 30-ந்தேதி இரவு அஜித், மதுபாட்டில், சுவீட், பழம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு விஷால் உடல் புதைத்த இடத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்.
மதுவை விஷால் புதைத்த இடத்தில் ஊற்றி, சுவீட் மற்றும் பழங்களை படையலிட்டு அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தாராம்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர், அஜித்துக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில், நண்பன் விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், அஜித்தும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது உறவினர்கள், விஷால் உடல் புதைத்த இடத்திற்கு பக்கத்திலேயே அஜித் உடலையும் புதைத்தனர்.
அஜித் இறப்பதற்கு முன்பு அதிகாலை 2.50 மணிக்கு, விஷாலுடன் தான் எடுத்துக்கொண்ட படங்களை செல்போன் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, நானும் வருகிறேன் என பதிவிட்டிருந்தார்.
மேலும் அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் தனது நெஞ்சினில் 2 பேரும் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைபிரியாத நண்பர்கள் 2 பேரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான முரளி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம் எல் ஏ கலந்து கொண்டார். பெறப்பட்ட மனுக்ளை ஆய்வு செய்து அதில் தேர்வு செய்யப்பட்ட 222 பயனாளிகளுக்கு 91 லட்சத்து 32 ஆயிரத்து 71 ரூபாய் மதிப்பிலான ஒய்வுதியம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, எஸ்.டி.,சாதி சான்றிதழ், தையல் எந்திரம் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் திமுகவை சேர்ந்த அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் நிர்மலா சவுந்தர், தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கந்திர் பாவை, வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் துறையினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 3 பேர் பலி
- போலீசார் விசாரணை
வாலாஜா:
சென்னை அடையாறு பகு தியை சேர்ந்தவர் திருமால் (வயது 37). இவரது அக்கா எழிலரசி (40). திருமாலின் மகன் தருண் (14), மகள்கள் தரணிகா (14), தனுஷ்கா (14). இவர்கள் 3 பேரும் ஒரே பிரச வத்தில் பிறந்தவர்கள்.
தங்களது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் விரிஞ்சி புரத்துக்கு நேற்று முன்தினம் திருமால் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு உறவினர் திதியை முடித்துவிட்டு, நேற்று சென்னைக்கு வாடகை காரில் புறப்பட்டார்.
மதியம் 2 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட் டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலை ஓரம் கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண் டிருந்தது. இந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கன்டெய்னர் லாரியின் பின்பக்கமாக மோதிலாரிக்கு அடியில் புகுந் தது.
இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபா டுகளுக்குள் சிக்கி கார் டிரை வர் அய்யப்பன், திருமால் மற்றும் எழிலரசி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் திருமாலின் மகன் தருண், மகள்கள் தர ணிகா, தனுஷ்கா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் விட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தருண் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலைகளை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக வாலாஜா அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துண்டு பிரசாரம் வினியோகம்
- தியானத்தை கடைபிடிக்க வேண்டும்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலைய நடைமேடை மூன்றில் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
புகையிலை பழக்கத்தை கைவிட தியானத்தின் மூலம் நம்முடைய மனோபலத்தை அதிகரித்து நம்மிடம் உள்ள தவறான பழக்க வழக்கங்களிலிருந்து நிரந்தரமாக ஈடுபட்டு அமைதியும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கை வாழ தியானத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
ரெயில் பயணிகள் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை கொடுத்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- 11-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த அண்ணா நகர் மாசாப்பேட்டை பகு தியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், வேலூர் சத்துவாச்சாரி கண்ணமங்கலம் மதுரா புதுபேட்டை தங்கலார் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் மாசாப் பேட்டையில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடக்க இருந்தது.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மேற்பார்வையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, விரிவாக்க அலுவலர் காஞ்சனா, ஊர் நல அலுவலர் கீதா, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு இரவு விருந்து தயாராகி கொண்டு இருந்ததை நிறுத்தியதோடு, சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






