search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிடெக் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
    X

    ராணிடெக் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

    • சூரிய ஒளி நீராவி உற்பத்தி அமைப்பு
    • சுற்றுச்சூழல் மாசு பிரச்சனையும் தடுக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் ராணிடெக் பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

    கடந்த 1995-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் , ராணிப்பேட்டையை சுற்றி இயங்கி வரும் 92 தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீரை சுத்திகரித்து கழிவுநீரை நன்னீராக மாற்றி மீண்டும் தொழிற்சாலைகளின் மறு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு பணிக்காக ரூ.3 கோடியே 54 லட்சம் செலவில் நாட்டிலேயே முதல் முறையாக அமெரிக்க தொழில்நுட்பத்தில் சூரிய ஒளி அமைப்பு மூலம் நீராவி உற்பத்தி செய்யும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 2.3 டன் விறகு கட்டைகள் எரிப்பது நிறுத்தப்பட்டு, செலவு குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு பிரச்சனையும் தடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராணிடெக் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய ஒளி அமைப்பின் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்படுவதை ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி அமைப்பின் இந்திய பிரதிநிதி ரெனேவான்பெர்கல் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் தேபஜித் தாஸ், ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், நிர்வாக இயக்குநர் ஜபருல்லா, செம்காட் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன், எம்சோல் நிர்வாகிகள் ஜெய்பிரகாஷ் கர்ணா, ராஜ், ராணிடெக் பொதுமேலாளர் சிவக்குமார் மற்றும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×