திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது
திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
Published on

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை நெமிலி போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர். அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறியதாவது:- தங்கள் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மர்ம கும்பல் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெளியூர்களுக்கு செல்லும்போது தங்கள் உறவினரிடம் அல்லது போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். இரவு நேரங்களில் பயணம் செல்லும் போது நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதை தவிர்க்கவேண்டும். பஸ்களில் பயணம் செய்யும்போது அறிமுகம் இல்லாத யாரிடமும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம்.

உள்ளிட்டவை குறித்து போலீசார் பொதுமக்களிடையே துண்டு பிரசுரத்தை கொடுத்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com