என் மலர்
ராணிப்பேட்டை
- உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
- ஆணையாளர் எச்சரிக்கை
சோளிங்கர்:
சோளிங் கர் நகராட்சியில் அனுமதியின்றி கழிவுநீர் வாகனங்கள் இயக்கினால் உரிமையாளர் கள் மீது வழக்கு பதிவு செய் யப்படும் என்ற ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சோளிங்கர் நகராட்சியில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் உள்ள கழிவறைகளில் இருந்து கழிவுநீர் அகற்ற கழிவுநீர் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
தனியார் மூலம் இயக்கப்படும் இந்த வாகனங்கள் உரிய அனுமதியின்றி இயக்கப்படுகிறது.
இந்த வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வாளரின் உரிய சான்றிதழ் பெற்று வரைமுறைகளுக்கு உட் பட்டு இயக்கப்பட வேண்டும்.
சோளிங்கர் நகராட்சி பகுதிக ளில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவ ணங்களுடன் விண்ணப்பம் செய்து கழிவுநீர் அகற்றும் வாக னத்திற்கான உரிமத்தை பெற்று கொள்ள வேண்டும்.
உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் முன்னறிவிப்பின்றி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், வாகன உரிமையாளர்கள் மீது நீதிமன்றம் மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும்.
எனவே பொதுமக்கள், தங்கள் இல் லங்களில் உள்ள கழிவுகளை அகற்ற நகராட்சியில் உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் லதா(பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
- 36 வார்டுகளில் பொருத்தும் பணி தீவிரம்
- குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெ ரிய நகராட்சியாக அரக்கோணம் விளங்குகிறது. 9 கிலோ மீட்டருக்கும் மேல் பரப்பளவை கொண்ட 36 வார்டுகள் உள்ளது.
இங்கு, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வகிக்கின்ற னர். இந்நிலையில், அரக் கோணம் நகர மக்களின் பாதுகாப்பை கருதியும், குற்றச்செயல்களை கண் காணித்து தடுப்பதற்காக நகராட்சி முழுவதும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்த நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நகராட்சியில் மொத்த முள்ள 36 வார்டுகளில் முதல் கட்டமாக 10 வார் டுகளில் சிசிடிவி கேமராக் கள் பொருத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
அதேபோல், நகராட்சி அலுவலகம் முழுவதும் பாதுகாப்பை கருதி 21 இடங்களில் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட்டு தினமும் அலுவலக பகு தியில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரக்கோணம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அரக்கோணம் நகரின் முக்கிய பகுதிகளில் குற்றங்களை குறைக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வும் அனைத்து இடங்களி லும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
36 வார்டுகளில் தற்போது 10 வார்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது. 4- வது வார்டில் கண்காணிப்பு பொருத்தப் பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், 30-வது வார் டில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் செயல்பாட் டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
தொடர்ந்து, மற்ற அனைத்து வாடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற் கொள்ளப்படும்.
பாதுகாப்பை கருதி அலுவலக வளாகங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அரக்கோணம் நகரம் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு அதன் கண்காணிப்பு பணிகள் போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.
- குடிநீரோடு கலக்கும் அபாயம் உள்ளது
- அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவன குறைவால் நடந்துள்ளது
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அயிலம் ஊராட்சி, கவரபாளையம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
இதில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாய் நடுவே குடிநீர் அடி பம்பு உள்ளது. குடிநீர் அடி பம்புவை அகற்றாமல் இருப்பதால் கழிவுநீர், குடிநீரோடு கலக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவன குறைவாலே இந்த தவறு நடந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அடி பம்பு அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 31 பாட்டில்கள் பறிமுதல்
- கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பந்தாங்கள் பகுதியில் அனுமதியின்றி அரசு மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவேரிப்பாக்கம் சப் - இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
மது விற்றவரை பிடித்து விசாரித்ததில் அவர் எடையன்தாங்கல் கிராமத்தை ேசர்ந்த லட்சுமணன் (41) என்பதும் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து லட்சுமணனை கைது செய்து அவரிடமிருந்து 31 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
- பைக் பறிமுதல் செய்யப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த ரெட்டிவலம் பகுதியில் நேற்று நெமிலி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நந்திவேடுதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி அதனை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
- பொதுமக்கள் சாலை ஓரத்திலேயே கூடியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே லாலாபேட்டை, முகுந்தராயபுரம் ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கிடையே கடந்த சில மாதங்களாக ஊராட்சி எல்லை உள்பட சில பிரச்சனைகள் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க.ஒன்றிய செயலாளருமான அக்ராவரம். முருகன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் லாலாபேட்டையில் தி.மு.க கட்சி கொடி ஏற்றுவதற்காக சென்றபோது, லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து லாலாப்பேட்டையிலும், முகுந்தராயபுரம் ஊராட்சி அக்ராவரம் பகுதியிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவ்வாறு 2 ஊராட்சி பகுதியிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் சாலை ஓரத்திலேயே கூடியிருந்ததால் இரு ஊராட்சிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட கூடியிருந்தவர்களை கைது செய்தனர்.
இதில் லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோகுலன் உள்பட 18 பேரும், முகுந்தராயபுரம் ஊராட்சி அக்ராவரம் பகுதியை சேர்ந்த 17 பேரும் என இரு தரப்பை சேர்ந்த மொத்தம் 35 பேரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதி யில் மண் கடத்தப்படுவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரது தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர் கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அந்த வழியாக டிராக்டரில் மண் ஏற்றி வந்த வர்கள், அதிகாரிகளை கண்ட தும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து தாசில்தார் சண் முகசுந்தரம் டிராக்டரை பறி முதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒடிசா ரெயில் விபத்து தொடர்பு கொள்ளாம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநில ரெயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், ஒடிசா மாநில முதல்-அமைச்சரையும், அலுவல ர்களையும் தொடர்பு கொண்டு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரெயில்களில் பயணம் செய்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை, உறவினர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 04172- 271766 மற்றும் 271966 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஆற்காடு:
ஆற்காடு அருகே சிவ ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சிவ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஊராட்சி எல்லை பிரச்சனைகளால் நடந்தது
- போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே லாலாபேட்டை, முகுந்தராயபுரம் ஊராட்சிகள் உள்ளன. இந்த 2 ஊராட்சிகளுக்கிடையே கடந்த சில மாதங்களாக ஊராட்சி எல்லை உள்பட சில பிரச்சனைகள் நிலவி வருகிறது.
இதற்காக 2 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முகுந்தராயபுரம் தி.மு.க நிர்வாகிகள் லாலாபேட்டையில் தி.மு.க கட்சி கொடி ஏற்றுவதற்காக சென்றனர்.
இதற்கு லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி தாக்கி கொண்டனர். இது பற்றிய தகவல் அறிந்த அக்ராவரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கைகலப்பில் காயம் அடைந்த லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும்போது அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர்கள் வழிமடக்கி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் லாலாப்பேட்டையிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லாலாபேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரு ஊராட்சிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் சாலை ஓரத்திலே குவிந்திருப்பதால் இரு ஊராட்சிகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சிக்னல் கோளாறு காரணமாக
- 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன
அரக்கோணம் :
திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து ஜோலார் பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணம் மற்றும் திருத்தணி செல்லும் புறநகர் ரெயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன.
இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
- சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சாமி வீதி உலா
- பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயணசுவாமி கோவில் உள்ளது.
கடந்த வாரம் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் நிறைவு நாளான நேற்று கருடசேவை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக லட்சுமி நாராயண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






