ராணிப்பேட்டையில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பு கொள்ளாம் கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டையில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநில ரெயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், ஒடிசா மாநில முதல்-அமைச்சரையும், அலுவல ர்களையும் தொடர்பு கொண்டு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களில் யாரேனும் மேற்கண்ட விபத்து நடந்த ரெயில்களில் பயணம் செய்திருந்தால் அவர்களை மீட்க ஏதுவாக பயண விவரங்களை, உறவினர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 04172- 271766 மற்றும் 271966 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com