என் மலர்
ராணிப்பேட்டை
- அங்கன்வாடி மையம், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் சோதனை
- பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா, என கேட்டறிந்தார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பனப்பாக்கம், மேலபுலம், துறையூர், வெளிதாங்கிபுரம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலப்புலம் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளில் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பழுது நீக்குதல் மற்றும் சீரமைக்கும் பணிகளையும், ரூ.63.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் ரேசன் கடை, அங்கன்வாடி மையம், மேல்நிலை தண்ணீர் தொட்டி, பேவர் பிளாக் சாலை போன்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, பனப்பாக்கம் பேரூராட்சி தென்மாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 2 பள்ளி வகுப்பறை கட்டிடம் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தினையும், நெல்லூர்ப்பேட்டை தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டிடம் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டிலும், துறையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 பள்ளி வகுப்பறை கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து மேலபுலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை துகள் செய்யும் எந்திர மையத்தினையும், வெளிதாங்கிபுரம் ஊராட்சி ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா, விநியோகம் செய்யப்படவுள்ள பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார்.
ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சிவராம், உதவிப் பொறியாளர் ராஜேஷ். வட்டாட்சியர் பாலச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
- வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சட்டப்பூர்வ ஆணையில் தெரிவித்தபடி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
அதன்படி இன்று தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பெறப்பட்டது. வேட்பு மனு பெறுவதற்கான கடைசி நாள் 10-ந் தேதியாகும். 12-ந்தேதி காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 14-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுதலும் நடைபெறும்.
23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
24-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவு செய்யப்படும். 28-ந்தேதி புதியதாக தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும்.
தேர்தலில் மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினர்களும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றில் இருந்து 4 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சியில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், 6 நகராட்சிகளின் 168 வார்டு உறுப்பினர்களும், 8 பேரூராட்சிகளின் 119 வார்டு உறுப்பினர்களும் ஆக மொத்தம் 300 வார்டு உறுப்பினர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
ஊரக, நகர்ப்புற பகுதிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படும். ஊரகப்பகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, நகர்ப்புற பகுதிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பிரசாத் ஆகியோர் உதவி தேர்தல் அலுவல ர்களாக செயல்படுவர்.
இந்த தகவலை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான வளர்மதி வெளியிட்டுள்ள அறி விப்பில் தெரிவித்துள்ளார்.
- பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி வேண்டுகோள்
- கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடன் உதவிகளை வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா மைதீன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில்:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையிலான அரசின் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
அதனை பெற பயனாளிகள் வரும் போது அவர்களை துறை சார்ந்த அலுவலர்கள் அலைக்கழிக்க கூடாது. நடப்பு நிதி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாப்செட்கோ மூலம் ரூ.ஒரு கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்து பேசினார் .
பின்னர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிக கடன்கள் பெற்று தொழில் செய்து வரும் சோளிங்கர் தாலுகா, கன்னிகாபுரம் மகளிர் சுய உதவி குழுக்களை சந்தித்து தொழில் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி, தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக பொது மேலாளர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி வேண்டுகோள்
- கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடன் உதவிகளை வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜா மைதீன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில்:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையிலான அரசின் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
அதனை பெற பயனாளிகள் வரும் போது அவர்களை துறை சார்ந்த அலுவலர்கள் அலைக்கழிக்க கூடாது. நடப்பு நிதி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாப்செட்கோ மூலம் ரூ.ஒரு கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்து பேசினார் .
பின்னர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிக கடன்கள் பெற்று தொழில் செய்து வரும் சோளிங்கர் தாலுகா, கன்னிகாபுரம் மகளிர் சுய உதவி குழுக்களை சந்தித்து தொழில் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி, தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக பொது மேலாளர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
- அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பிஞ்சி பகுதியில் புதிதாக ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்புற நல வாழ்வு மையத்தை நேற்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதனைதொடர்ந்து இந்த புதிய நகர்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ருத்ரகோட்டி, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், கோபிகிருஷ்ணன், ஜெயசங்கீதா அசேன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கல்வி அலுவலர் ஆலோசனைகள் வழங்கினார்
- ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில்,அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கான ஆயத்த புத்தாக்க பயிற்சி ராணிப்பேட்டை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் பாடங்களை குறித்த நேரத்தில் நடத்துவது, நடத்தி முடித்த பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களை தயாரித்து தொடர் தேர்வுகள் வைத்து மாணவர்களின் கற்றல் திறனை கண்காணிப்பது, பாடவாரியாக மாணவர்களின் கற்றல் திறனை தலைமை ஆசிரியர் மூலம் கண்காணிக்க செய்வது உள்பட கற்றல் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு 100 சதவித தேர்ச்சி பெற முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தற்காலிக ஆசிரியர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிக ளிடமிருந்து இருந்து மொத்தம் 278 மனுக்களை பெற்றார்
- விவசாயிகளின் நிலம் தொடர்பான மென்பொருளில் 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்யப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிக ளிடமிருந்து இருந்து மொத்தம் 278 மனுக்களை பெற்றார்.
மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளின் நிலம் தொடர்பான விவரங்களை சேகரித்து அதற்கான மென்பொருளில் 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
பதிவு செய்து முடித்த 14 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
- போலீசார் விசாரணை
- பைக் பறிமுதல் செய்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் யுவராஜ் (25).இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.
இது தொடர்பாக யுவராஜ் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் ராஜேஸ்வரி தியேட்டர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த வினோத் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ஒட்டி வந்த பைக் திருட்டு போன யுவராஜின் பைக் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் வினோத்தை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்தது
- பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு பேரூராட்சி மன்றதலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினர். பின்னர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கலைஞர் நகர் பூங்கா, இருளர் காலனி பூங்கா ஆகிய பகுதிகளில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கினார்.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
- மின்கம்பி அறுந்து கொட்டைகையின் மேல்விழுந்தது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி சுற்றுவட்டார பகுதிகளான அகவலம், ரெட்டிவலம், கீழ்வீதி, மகேந்திரவாடி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதில் மகேந்திரவாடி கிராமத்தில் அண்ணா நகரில் வசிக்கும் கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான பசுமாடு அவரது வீட்டருகில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது.
நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தபோது உயர்அழுத்த மின்கம்பி அறுந்து கொட்டைகையின் மேல்விழுந்தது. பசுமாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
- மாட்டின் அலறல் சத்தம் கேட்டு வந்தனர்
- 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா ஜங்கமர் தெருவில் உள்ள காலி மனையில் தண்ணீர் வற்றிய நிலையில் பாழடைந்த கிணறு உள்ளது.
இந்த நிலையில் நேற்று அப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. இதனால் மாட்டின் அலரல் சத்தம் கேட்டது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
- அலகு குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
- பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் முத்துமாரியம்மன், கவுக்கியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும்; பறக்கும் காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.






