என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Settlement day meeting"

    • மாற்றுத்திறனாளிக ளிடமிருந்து இருந்து மொத்தம் 278 மனுக்களை பெற்றார்
    • விவசாயிகளின் நிலம் தொடர்பான மென்பொருளில் 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்யப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிக ளிடமிருந்து இருந்து மொத்தம் 278 மனுக்களை பெற்றார்.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளின் நிலம் தொடர்பான விவரங்களை சேகரித்து அதற்கான மென்பொருளில் 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    பதிவு செய்து முடித்த 14 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    ×