என் மலர்
ராணிப்பேட்டை
- கலெக்டர் எச்சரிக்கை
- 6 நாட்களுக்கு மட்டுமே அனுமதி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்பாலும் அனுமதியின்றி தற்காலிக ப்ளக்ஸ் பேனர்கள் அச்சிடுவது மற்றும் உரிமம் இன்றி விளம்பர பதாகைகள் அமைப்பது அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினர், கோவில் விழா குழுவினர், பல்வேறு வகையான சங்க அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் உரிய அனுமதியின்றி, உரிமம் இன்றி விளம்ப ரப்பதா கைகள், ப்ளக்ஸ் பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில் தற்காலிக ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க விரும்புவோர் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் உரிய படிவத்தில் பேனர் வைக்க உத்தேசித்துள்ள நாட்களுடன், அதில் இடம் பெறும் வாசகங்களையும் குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும்.
இந்த அனுமதிகள் அதிகபட்சமாக 6 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். நிகழ்வு முடிந்தவுடன்,காலக்கெடு முடிவுற்றவுடன் அதனை அனுமதி பெற்ற நபரே அகற்றிட வேண்டும்.
எந்தவொரு நபரும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதி பெறாமல் மாவட்டத்தின் எந்தவொரு இடத்திலும் நிரந்தர விளம்பர ப்பலகைகள் தற்காலிக ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ப்ளக்ஸ் பேனர்கள் அச்சிடுவோர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வழங்கப்படும் ப்ளக்ஸ்கள் மட்டுமே அச்சிட வேண்டும், அனுமதியின்றி அச்சிடக்கூ டாது, மீறி செயல்படுவோர் மீது விதிமுறைகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது,
இதனை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ராணிப்பேட்டை முத்துக்கடை மற்றும் வாலாஜா பஸ் நிலையங்களில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் ராணிப்பேட்டை, வாலாஜா நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்ல, துணை தலைவர்கள் ரமேஷ்கர்ணா, கமல் ராகவன், நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, வினோத், குமார், கோபி, இர்பான் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தேய்பிறை பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
நெமிலி:
நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று வைகாசிமாத தேய்பிறை பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி திதி நாளன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சென்னை, பெங்களூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- வீட்டிற்கு செல்லும் பெண்களும், மாணவ, மாணவிகளும் அச்சப்படுகின்றன
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம்- அத்திப்பட்டு சாலையில் எரியாத தெரு மின் விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிப்பாக்கம் -அத்திப்பட்டு, திருப்பாற்கடல் சாலையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு பொறுத்தப்ப ட்டுள்ளது. இந்த மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை என கூறப்படுகிறது.
இந்த பகுதியில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வீட்டிற்கு செல்லும் பெண்களும், மாணவ, மாணவிகளும் அச்சப்படுகின்றன.
எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- படுகாயமடைந்த கிளீனருக்கு தீவிர சிகிச்சை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (21) வேன் டிரைவர். அதே வேனில் கிளீனர் வேலை பார்ப்பவர் பிரவீன்குமார்(19).
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோடு வேனில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு சென்னை கோயம்பேடு நோக்கி செல்வதற்காக வந்தனர் .
ராணிப்பேட்டையில், சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் வந்த போது திடீரென வேனின் பின்பக்க டயர் பழுதடைந்துள்ளது.
இதை தொடர்ந்து வேனை நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி லோடு வேன் மீது மோதியது.
இதில் வேன் டிரைவர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காயமடைந்த கிளீனர் பிரவீன்குமார் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.சி,எஸ்.டி பிரிவு விவசாயிகளுக்கு 40 வழங்கிட அரசு ஒதுக்கீடு செய்துள்ளது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மானிய விலையில் பவர் டில்லர் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை எந்திரம யமாக்கல் திட்டத்தில் உழவு பணிகளுக்கு பவர் டில்லர் 2-வது தவணையாக பொது பிரிவினருக்கு 84, எஸ்.சி,எஸ்.டி பிரிவு விவசாயிகளுக்கு 40 வழங்கிட அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானிய விலையில் பவர் டில்லர் சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் ஆதி ிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, ஆதார் அட்டை நகல், பவர் டில்லர் எந்திரத்தின் விலைப்புள்ளி, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளாக இருப்பின் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் விரிவாக்க மையம், அணைக்கட்டு ரோடு, வாலாஜா என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடற்படை தளபதி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்
- வீரருக்கு கேரளா சுழற்கோப்பை வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இந்த விமான தளத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று 100-வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் 21 வீரர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித்தாஸ்குப்தா அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் இந்த பயிற்சி காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அனைத்து துறைகளிலும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீரருக்கு கேரளா சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
வீரர்களுக்கு பாதுகாப்பு தான்மிக முக்கியம் பாதுகாப்பை மனதில் கொண்டால் வீரமும் தானாக வரும், வீரமும் பாதுகாப்பும் 2 கைகள்.
தேசத்தில் கடற்படை முக்கிய சேவை ஆற்றி வருகிறது. உற்சாகப்படுத்தி அனுப்புகின்ற ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளையும் வந்திருக்கின்ற அனைவருக்கும் நன்றி என கடற்படை தளபதி கூறினார்.
நிகழ்ச்சியின் போது அரக்கோணம் ஐ.என். எஸ். ராஜாளி கடற்படை விமான தள கமாண்டர் கபில் மேத்தா உடன் இருந்தார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி மற்றும் கடற்படை வீரர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை
- கலெக்டர் வளர்மதி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 13 பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 445 இடங்களுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.
விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. மாணவ - மாணவிகள் 12-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு குழுவால் விடுதியில் தங்கும் மாணவர்கள் வருகிற ஜூலை 15-ந் தேதி தேர்வு செய்யப்படுவர்.
4-ம் வகுப்பு முதல் வரை பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் (85 சதவீதம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர் 10 சதவீதம் பிற வகுப்பினர்கள் 5 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது.
பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவருக்கு கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியரின் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பள்ளி மாணவருக்கும் எமிஸ் எண் மற்றும் மாணவர்களுக்கு மத்திய/மாநில அரசால் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றார்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள ஞானாம்பிகை காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அப்போது நீதியரசர்கள் கிருபாகரன், பாரதிதாசன், ஆலய நிர்வாகி சுதாகர், சத்தியநாராயணன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர். பக்தர்கள் ஏராளமானோர் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.
- முதலீட்டாளர்கள் காத்திருப்பு போராட்டம்
- போலீசார் பேச்சுவார்த்தை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள தனியார் நிதி நிறுவன ஏஜென்டுக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு முதலீட்டாளர்கள் பூட்டு போட்டு வீட்டை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூரை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டுவந்தது. ஒரு லட்சம் கட்டினால் மாதந்தோறும் 10 முதல் 15 ஆயிரம் வரை வட்டி தரப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டது.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நெமிலி சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோடி கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் நெமிலி பகுதி ஏஜன்டாக ஜெகன்நாதன் என்பவர் நியமிக்கப்பட்டு இவர் மூலமாக மக்கள் பணத்தை கட்டி வந்தனர். திடீரென்று 6 மாதத்திற்கு முன்பு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் மோசடி செய்ததாக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
நிறுவனத்தின் முக்கிய நிர்வா கிகள் தலைமறை வானதால் பணத்தை திரும்ப தரக்கோரி முதலீட்டாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று நெமிலியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் தனியார் ஏஜென்ட் ஜெகன்நாதனை பணத்தை திருப்பி தரக்கோரி அவருக்கு சொந்தமான நெமிலி ஒச்சேரி சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு பூட்டுபோட்டனர்.
மேலும் நெமிலி பஜார் பகுதியில் உள்ள அவரின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் முன்பு பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நெமிலி போலீசார் போராட்டகாரார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதனால் அங்குகு பரபரப்பு ஏற்பட்டது.
- ெபற்றோர் அச்சம்
- தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் சந்தை மேட்டில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. பல ஆண்டுகளாக ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளி தரைகிணறு உள்ளது.
கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருப்பதோடு எப்போதும் திறந்து கிடப்பதால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்கள் அச்சமடைகின்றனர்.
எனவே பயனற்று கிடக்கும் கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பெற்றோர்களும் மற்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
- ஏராளமான பத்தர்கள் தரிசனம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோவிலில் வைகாசி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கெங்கையம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடியும், தலைகீழாக தொங்கியும் அம்மனுக்கு ஆகாய மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
விழாவில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.






