என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்
    • பணத்தை பறிமுதல் செய்து விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் மற்றும் சுற்று வட் டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சோளிங்கர் கிழக்கு பஜார் தெருபகுதியில் ஒரு கும்பல் காட்டன் சூதாட் த்தில் ஈடுபட்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர்.

    அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத் தினர். விசாரணையில் அவர் சோளிங்கர் குமரன் தெருவை சேர்ந்த விஜயன் (வயது 43) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். அவரிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • மின் அதிகாரி விசாரணை
    • பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் நேற்று மேய்ச்சலுக்காக பசு மாடு ஒன்று சென்றது.

    அப்போது பாரி நகர் விரிவாக்க பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது அறுந்து கிடந்த இருந்த ஒயரை மிதித்தது. மின்சாரம் தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து ராணிப்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • 30-ந் தேதி கடைசி நாள்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின், தலைமை செயல் அலுவலரால் "அனைவருக்கும் இ-சேவை" மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பங்களை இணையவழி முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கீழ்கண்ட "https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in" என்ற இணைய முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளவும் விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதி வரை காலை 11.30 முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்துக்கொள்ளலாம்.

    கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3ஆயிரம்/- மற்றும் நகர்ப்புறத்திற்கு ரூ.6 ஆயிரம்/- செலுத்த வேண்டும். மேலும் அருகிலுள்ள இ-சேவை மைங்களின் தகவல்களை "முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in இணையதளத்தின் மூலம் காணலாம்.

    இந்த திட்டத்தில் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பயனடைய வேண்டும்

    என கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பாலம் கட்ட கொட்டப்பட்டிருந்த மண் மீது ஏறியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பகுதியில் உள்ள சஞ்சீவிராய பள்ளி எதிரே காவேரிப்பாக்கம் - பாணாவரம் செல்லும் சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றுவருகிறது.

    இந்த பணியின் காரணமாக சாலையின் குறுக்கே மண் கொட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்த பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் மண் மீது ஏறி தலைகீழாக கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 4 பேரும் எந்த சேதமும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

    • வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம்
    • வேளாண்மை அதிகாரி தகவல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் பாணாவரம் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பை மேற்கொள்ள ரூ.2000 மானியத்தில் விசைத்தெளிப்பான்கள் வழங்கப்படுகிறது.

    மேலும் இத்திட்டத்தில் உயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம்,பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மற்றும் அசோபாஸ் திரவ உயிர் உரங்கள் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    இது தவிர மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை எந்திர தொகுப்பு (கடப்பாரை, மண்வெட்டி, தாலா,அரிவாள் . களைக்கொத்தி) 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கடலை பயிருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஜிப்சம் மூட்டை ரூ.108 விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டத்தில் கீழ் பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான்கள் ரூ.2000 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    • முன்விரோத தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் திரு வாலங்காடு அரிச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் இர்பான் (வயது 20).

    இவர், திருவாலங் காடு ரெயில் நிலையம் பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, அரக்கோணம் பழனி பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (20) என்பவர் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து முன்விரோதம் காரணமாக இர்பானை தகாத வார்த்தையால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால் தலையில் வெட்டி யதாக கூறப்படுகிறது.

    இதில் இருப்பானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்த இர்பானை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    ரெயில்வே போலீசார் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • காலை 8 மணி முதல் 11 மணி வரை நிறுத்தம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆனைமல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் வருகிற 13-ந்தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை ௧த்தியவாடி மற்றும் விசாரம் பிரிவுக்குட்பட்ட டேனரி ரோடு, ஆஜி பேட்டை, ஹன்ச நகர், பாகர் தெரு, புதுப்பேட்டை, புளியமரம்நிறுத்தம், புளி மாதா தெரு, பேட்டை கடை தெரு, மீரா சாகிப்தெரு, சவுகார் தெரு, முத்துஜார் தெரு மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்குட்பட்ட முப்பதுவெட்டி கிளைவ் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதே போன்று வருகிற 14-ந்தேதி காவலூர் பிரிவுக்குட்பட்ட புங்கனூர், காவனூர் வெள்ளை குளம், கண்ணாடி குடிசை குப்பம், கண்ணாடி பாளையம் மற்றும் ஆற்காடு கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட உப்பு பேட்டை, கூரம்பாடி, கிருஷ்ணவரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் என ஆற்காடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    கருணாநிதி நூற் றாண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கூட் ரோடு அருகே நெடுஞ்சாலையோரம் 12000 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் டி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார், ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், துணைத்தலைவர் பூங்கொடி திட்ட ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு நெடுஞ்சாலையோரம் 12,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய கவுன்சி லர்கள் மாரிமுத்து, சந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார்
    • குடும்ப தகராறில் விபரீதம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது35). இவர் விவசாயம் செய்து வந்தார்.

    இவரது மனைவி காயத்ரி. நேற்று காலையில் அன்பரசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் காயத்ரி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து அவளூர் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வருகிற 26-ந் தேதி கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதியதாக தோற்று விக்கப்பட்ட ராணி ப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை.

    தற்போது ராணி ப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்ப ட்டோருக்கான இல்லம் அமைத்திட விருப்பமுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த விண்ணப்பத்தை ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தொலைபேசி எண்: 04172-274177 என்ற முகவரியில் வருகிற 26-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ராணிப்பே ட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் வளர்மதி உத்தரவு
    • சிறையில் அடைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் ( 29), கோவிந்தசேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (19) இவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை வாலாஜா போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேர் மீதும் வாலாஜா போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்கு களும் நிலுவையில் உள்ளது.

    இதனால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி கலெக்டர் வளர்மதியிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் வளர்மதி, 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம் இன்று நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் லதா நரசிம்மன் கலந்துகொண்டு தூய்மைப்பணியை துவக்கிவைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் பேரூராட்சி மன்றத்துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த தூய்மை பணியானது 15-வது வார்டில் துவங்கி அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஒட்டுமொத்த தூய்மை பணியின் மூலம் பேரூராட்சியில் அடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் கால்வாயை தூர்வாரியும், சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மட்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மேலும் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவது பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் வார்டு கவுன்சிலர்கள் இந்திரா, காஜா உமர், உமா, அலுவலக மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    ×