என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மைபணி சிறப்பு முகாம்
- குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம் இன்று நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் லதா நரசிம்மன் கலந்துகொண்டு தூய்மைப்பணியை துவக்கிவைத்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் பேரூராட்சி மன்றத்துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த தூய்மை பணியானது 15-வது வார்டில் துவங்கி அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒட்டுமொத்த தூய்மை பணியின் மூலம் பேரூராட்சியில் அடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் கால்வாயை தூர்வாரியும், சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மட்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மேலும் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவது பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் வார்டு கவுன்சிலர்கள் இந்திரா, காஜா உமர், உமா, அலுவலக மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.






