நகர்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா

ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு தொடங்கி வைத்தார்
நகர்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பிஞ்சி பகுதியில் புதிதாக ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்புற நல வாழ்வு மையத்தை நேற்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதனைதொடர்ந்து இந்த புதிய நகர்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ருத்ரகோட்டி, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், கோபிகிருஷ்ணன், ஜெயசங்கீதா அசேன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com