என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அடுத்தடுத்து 2 இடத்தில் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலல் பூஜை செய்யும் பூசாரி, நேற்று மாலை கோவிலை பூட்டிவிட்டு சாவியுடன் வீட்டுக்கு சென்றார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பூசாரி கோவிலை திறக்க சென்றார். அப்போது கோவில் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் பூசாரி, நிர்வாகிகளுடன் கோவில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கலி மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.

    இதேபோல் அதே கிராமத்தில் உள்ள கருமாத்தம்மன் கோவிலின் பூட்டும் உடைத்து,1/4 பவுன் தங்க நமை மற்றும் பணம் உள்ளிட்டவைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    கிராம மக்கள் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட் பட்ட பாட்டிக்குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் கோபால், நகராட்சி துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு பயணிகள் நிழற் குடையை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டை திறந்து வைத் தும், குத்துவிளக்கு ஏற்றினார்.

    தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், காங் கிரஸ் மாவட்ட செயலாளர் கல்பனா, வழக்கறிஞர் தனசேக ரன், மாவட்ட பிரதிநிதி ஷாஷிக்குமார், நகராட்சி பொறியா ளர் ஆசிர்வாதம், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வளர்மதி வழங்கினார்
    • ரூ.90ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து மொத்தம் 243 கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.98 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. தாட்கோ மற்றும் தமிழ்நாடு சிமென்ட் கழகத்துடன் இணைந்து சிமெண்ட் விற்பனை முகவராகும் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ.90ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர்

    ஸ்ரீ வள்ளி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், தாட்கோ உதவி மேலாளர் அமுதா ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அரக்கோணம்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் எஸ்-1 கோச் அருகில் உள்ள ஏ.சி . பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் பரிசோதனை செய்தார். அந்த பெட்டியில் சுமார் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் பயந்து மூலையில் பதுங்கி நின்றான். டிக்கெட் பரிசோதகரை கண்டதும் அழுதான்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் தன்மையாக பேசி சமாதானப்படுத்தினார். அதற்குள் ரெயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அந்த சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் இந்த ரெயில் 5 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த சிறுவன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கிரண்பாபு என்பவரது மகன் அகில் (வயது 11) என்பது தெரியவந்தது. சிறுவன் அகில் போலீசாரிடம் கூறுகையில்:-

    நான் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். நேற்று மாலை டியூசன் முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு ரெயிலில் சென்ட்ரல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் இந்த ரெயிலில் ஏ.சி. பெட்டியில் என்னை ஏற்றிவிட்டு சென்றுவிட்டனர். ரெயில் வேகமாக சென்றதால் என்னால் இறங்க முடியவில்லை என கூறினார்.

    சிறுவனை வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். உண்மையில் அகிலை கடத்த மர்ம நபர்கள் முயற்சித்தார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசார் ரெயில் நிலையங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து செய்து வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    • தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
    • தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) லாரி மெக்கானிகான இவர் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணமானது. ஒரு மகள், மகன் உள்ளனர்.

    இந்நிலையில் தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான வாலாஜா அடுத்த சின்னதகரகுப்பம் கிராமத்திற்கு சென்றார். 2 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தார். அங்கும் தேவராஜ் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சின்ன தகரகுப்பத்திற்கு சென்ற தேவராஜ் அங்கு மனைவி பானுமதியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் மனைவியை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த பானுமதி கீழே கிடந்த கட்டையை எடுத்து தேவராஜை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவராஜின் மனைவி பானுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் சந்திரன் மகன் அரி (வயது 20), வெங்கடேசன் மகன் விஷ்வா (21). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சோளிங்கரில் இருந்து வாலாஜா சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால்பண்ணை அருகில் சென்றபோது நிலை தடுமாறி புளியமரத்தில் மோதி னர். இதில் அரி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே - உயிரிழந்தார். விஷ்வா படுகாயம் அடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
    • கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி தென்கழனி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 43). இவர் ஆற்காட்டில் ஸ்கூட்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். உப்புப்பேட்டை அருகே செல்லும்போது குடிபோதையில் இருந்த மூன்று நபர்கள் சுந்தர்ராஜை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அவர்கள் சுந்தர்ராஜை கத்தியால் குத்தி உள்ள னர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினர்
    • அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக பொதுக் குழு கூட்டம் அரக்கோ ணம் அடுத்த சாலை கிரா மத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கி.லோகநாதன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் மின்ன லான், மாநில பொதுக்குழு உறுப்பினர் பஞ்சாட்சரம், மாவட்ட பொருளாளர் உமா மகேஸ்வரி, மாநில வக்கீல் சங்க சமூக நீதிப் பேரவை துணை செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத் தலைவர் அ.ம.கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கி.லோகநாதன் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி, அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்.

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மற்றும் வேடந்தாங்கல் பகுதிகளில் நேற்று சப்கலெக்டர் பாத்திமா ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது மகேந்திரவாடியில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் சாலையில் டிப்பர் லாரி ஒன்று எதிரே வந்தது.

    அந்த டிப்பர் லாரியின் டிரைவர் சப் கலெக்டர் வருவதை பார்த்து லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பின்னர் லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் முறையாக அனுமதியின்றி கிராவல் மண்ணை கடத்திவந்தது தெரியவந்தது.

    உடனே சப் கலெக்டர் பாத்திமா நெமிலி தாசில்தார் பாலசந்தரை அழைத்து பறிமுதல் செய்யப்பட்ட லாரியை பாணாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் தயாளன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவில் உள்ளது.

    இங்கு நேற்று ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனையொட்டி நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகளும், மகா தீபாராதனை யும் நடைபெற்றது.

    பின்னர் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • போனஸ் வழங்கக்கோரி நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள பெல் நிறுவனத் தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள போனசை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.ஏ.பி. ஊழியர்கள் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணிவரை உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது ஜாயிண்ட் கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்டிபோனஸ் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், போக்குவரத்து மற்றும் உணவுக்கு வழங் கப்பட்டமானியங்களை ஏற்கனவே வழங்கியது போல வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் வாலாஜா இந்து முன்னணி ஒன்றிய செயற்குழுகூட்டம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வாலாஜா ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கலந்துகொண்டு பேசினார்.

    இதில் பள்ளி, கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்து முன்னணி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

    ×