என் மலர்
ராணிப்பேட்டை
- அடி வாங்கியவர் காப்பாற்ற கோரி கதறல்
- நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையம் 6-வது நடை மேடையில் மின்சார ரெயில் வந்து நின்றது. பயணிகள் பரபரப்பாக இறங்கி சென்றனர்.
அப்போது நடைமடை அருகே பயணி ஒருவர், மற்றொரு பயணியை சரமாரியாக தாக்கினார்.
அடி வாங்கிய நபர் என்னை விட்டு விடு என அடித்தவர் காலில் விழுந்துள்ளார்.
இருப்பினும் அவர் தொடர்ந்து அடித்ததால், அடி வாங்கியவர் என்னை காப்பாற்றுங்கள் என சக பயணிகளிடம் கதறி அழுதார். ஒரு கட்டத்தில் பயணிகள் ஒன்று கூடி அடி வாங்கியவரை மீட்டனர்.
பயணிகள் போட்ட சத்தத்தில் அடித்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
ரெயில் பெட்டிகளை சோதனை செய்வதோடு, பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவே ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொதுவாக ரெயில் நிலையங்களில் அடிதடி போன்ற குற்ற செயல்கள் நடைபெறுவது குறைவு.
ஆனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
ரெயில்வே போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதே, இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு காரணம். இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் மவுனம் சாதிக்கின்றனர்.
ரெயில் நிலையங்களில் இது போன்ற குற்றசம்பவ தடுக்க ரெயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
- பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, பொதுமக்க ளிடமிருந்து மொத்தம் 24 மனுக்களை பெற்று கொண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்சோ வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர நடவடிக்கை மேற்கொண்ட ஆற்காடு, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் விநாயகமூர்த்தி, ஆனந்தன், ஷாகீன், வாசுகிபோலீஸ் ஏட்டுகள் முத்துராணி, பிரேமா ஆகியோரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ெரயில்வே நிலையம் அருகே பலத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக இருந்தார்.
தகவலின் பேரில் காட்பாடி ரெயில்வே போலீசார் விரைந்த வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணையில் இறந்தவர் பாணாவரத்தை சேர்ந்த ராஜேஷ் (30) என்பதும் இவர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது
- 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்
நெமிலி:
காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செல்லும் வேகாமங்கலம், திருப்பாற்கடல், சக்கரமல்லூர், தர்மநீதி, ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
இதற்காக திருப்பாற்கடல், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், சாத்தம் பாக்கம், திருமலைச்சேரி, எசையனூர், வளவனூர், புத்தேரி, அனந்தாங்கள் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என காவேரிப்பாக்கம் உதவி செயற் பொறியாளர் துரைசங்கர் தெரிவித்தார்.
- புதிய மார்க்கெட் கட்டப்படுவதால் நடவடிக்கை
- வியாபாரிகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் உள்ள மார்க்கெட் மிகவும் பழைய கட்டிடங்களில் இயங்கி வருகிறது.
கட்டிடத்தின் தன்மை மற்றும் நெரிசல் ஏற்படுதன் காரணமாக அந்தக் கட்டிடத்தை அகற்றி புதியதாக மார்க்கெட் கட்ட அரக்கோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் கடைகளை அகற்றுவது குறித்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் வியாபாரிகள் பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் ஏ.டி.எஸ்.பி கிரிஷ் யாதவ் அசோக் மற்றும் நகர மன்ற தலைவர் லட்சுமி ஆகியோர் தலைமையில் மார்க்கெட் வியாபாரி களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
அப்பொழுது புதிய மார்க்கெட் கட்டுவதற்கு வியாபாரிகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். நகராட்சி நிர்வாகம் அதை ஏற்றுக் கொண்டதால் புதிய மார்க்கெட் கட்ட வியாபாரிகள் சம்மதித்தனர்.
இந்நிலையில் முதலில் யார் கடையை அகற்றுவது என்ற கேள்வி எழுந்த நிலையில் மீன் வியாபாரிகள் தானாக முன்வந்து சுமார் 16 கடைகளை அகற்றினர்.
தானாக முன்வந்து கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்ட மீன் வியாபாரிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.
- கேமரா பதிவு மூலம் போலீசார் விசாரணை
- பூட்டை உடைத்து துணிகரம்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் பாலாறு அணைக்கட்டு செல்லும் சாலையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த குமார் (48) என்பவர் பல வருடங்களாக நெல்லை சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் அந்த கடையின் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடை கல்லாப் பெட்டியில் வைத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தையும், மளிகை பொருட்கள் சிலவற்றையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து குமார் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கேமரா பதிவுகளில் 2 நபர்கள் கல்லாப்பெட்டிகளில் இருந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மளிகை கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்கள் பேசினர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரமன்ற கூட்டம் , நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் கமலரா கவன், ஆணையாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வாலாஜா நகரில் பல இடங்களில் ஆடு, மாடு, மீன் கடைகள் உள்ளது.அந்த இறைச்சி கடைகளில் கழிவுகளை அருகில் கழிவுநீர் கால்வாயில் கொட்டி வருகின்றனர்.
இதனால் கால்வாய்கள் நிரம்பி கழிவுநீர் தெருக்கள், சாலைகளில் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனவே இறைச்சிக் கடைகளை சோளிங்கர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்கு நகராட்சி மூலம் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி நகர சபை உறுப்பி னர்களுக்கு தெரியப்படு த்தவில்லை.இதை விழாவாக நடத்தி வழங்கி இருந்தால் அதன் பயன் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்கள் பேசினர்.
கூட்டத்தில் வாலாஜா நகரில் ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்காக ரு.15லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த உணர்வு திறன் பூங்கா அமைப்பது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவே ற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்
- 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆற்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் (37), முனியாண்டி (55) ஆகிய 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்ப ட்டனர்.
போக்சோவில் கைது செய்யப்பட்ட 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார்.
அதன்படி கலெக்டர் வளர்மதி, சந்திரன், முனியாண்டி ஆகிய 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
- நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைத்து பயன்பெறலாம்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய "மதி எக்ஸ்பிரஸ்" என்று பெயரில் வாகன அங்காடியை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் மாற்றுத்திற னாளிகளுக்கு வாழ்வாதார மும் உறுதி செய்யப்படுகிறது. இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 "மதி எக்ஸ்பிரஸ்" வாகன அங்காடிகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இதற்காக விண்ணப்பிக்கும் உறுப்பி னர்கள் மாற்றுத்திறனாளி சிறப்பு சுய உதவிக் குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
பொருள்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். சிறப்பு சுய உதவிக் குழு தொடங்கி ஓர் ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவி டப்பட்ட விதவை மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் உறுப்பினர் மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதை யும் வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வாராக்கடன் ஏதுமில்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிட மிருந்து விண்ணப்ப ங்கள் வரும் பட்சத்தில் மாவட்ட அளவிலான குழுவின் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
மேற்காணும் தகுதிக ளுக்குட் பட்ட சிறப்பு சுய உதவிக்குழு மாற்றுத்தி றனாளி உறுப்பினரி டமிருந்து வருகிற 10-ந் தேதிக்குள் விண் ணப்பத்தை மாவட்டத்திலுள்ள 7 வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் மற்றும் ராணிப்பேட்டை மகளிர் திட்ட அலுவ லகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைத்து பயன்பெறலாம் எனத் தெரிவித்தார்.
- உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது
- கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவ ரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலைகளில் அமைந்துள்ள தரைமட்ட கிணறுகளால் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் கிணறு தெரியாமல் விபத்து நடக்கிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே இதை தடுக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றில் போக்குவரத்துக்கு இடையூராக சாலைகளுக்கு ஓரமாக உள்ள அனைத்து தரைமட்ட கிணறுகளுக்கு தரைமட்டத்திலிருந்து குறைந்தபட்சம் சுமார் 3 அடி உயரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், இந்த தடுப்புச்சுவரை ஒரு மாத காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.16 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்னம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
குடிநீர் மேம்பாட்டு பணிகள்
இப்பணிகள் ஓராண்டு பணிக்காலத்திற்குள் முடிக்கப்படும். இதனால் இப்பகுதியைச் சார்ந்த 25 ஆயிரம் மேற்பட்ட பொது மக்கள் பயன்பெ றுவார்கள்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர் அம்சா, பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், துணைத் தலைவர் தீபிகா முருகன், ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, செயல் அலுவலர் சரவணன், காவேரிப்பாக்கம் நகர செயலாளர் பாஸ்(எ) நர சிம்மன், காவேரிப்பாக்கம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலாஜி (தெற்கு), தெய்வசிகாமணி (வடக்கு), மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திட்ட பணிகள்
அதைத்தொடர்ந்து நெமிலி ஒன்றியத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
அதன்படி பனப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.14 லட்சத்துக்கு 60 ஆயிரம் மதிப்பில் நெடும்புலி தொடக்க கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு முழுநேர ரேஷன் கடையின் புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.தொடர்ந்து ரூ.7 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கினை பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து மேலபுலம் ஊராட்சியில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வளர்மதி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சிவமணி, சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுந்தரம்பாள் பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ரவீந்திரன் (மேற்கு), எஸ்.ஜி.சி. பெருமாள் (மத்தியம்), நெடும்புலி கூட்டுறவு சங்க செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குருபூர்ணிமா பவுர்ணமியை முன்னிட்டு நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் தலைமையில், குரு பூர்ணிமா பவுர்ணமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்திலுள்ள அனைத்து குருமார்களையும் வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனருக்கு 6வது நாளாக லட்ச ஜப மஹா சுதர்சன ஹோமம் மற்றும் 27 கலசங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அன்னதானம், ஹோம பிரசாதங்களுடன் ஆசி வழங்கினார்.






