என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special pujas for all the priests"

    • குருபூர்ணிமா பவுர்ணமியை முன்னிட்டு நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் தலைமையில், குரு பூர்ணிமா பவுர்ணமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்திலுள்ள அனைத்து குருமார்களையும் வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனருக்கு 6வது நாளாக லட்ச ஜப மஹா சுதர்சன ஹோமம் மற்றும் 27 கலசங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அன்னதானம், ஹோம பிரசாதங்களுடன் ஆசி வழங்கினார்.

    ×