என் மலர்
ராணிப்பேட்டை
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்த கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில் சோனியா காந்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் திறப்பு விழா மற்றும் கொடி கம்பம், கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் அக்ராவரம்.கே. பாஸ்கர் தலைமை தாங்கினார். சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ, முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சோனியா காந்தி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டு திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பெல் ஆன்சிலரி கம்பெனி உரிமையாளர்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்து கோரிக்கை வைத்து பேசினர்.
அக்ராவரம் பகுதியிலும் கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டினை திறந்து,பின்னர் ராகுல் காந்தி தெருவை தொடங்கிவைத்தார். .
பின்னர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:-
பாஜக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆகியவை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசியல் இயக்கங்கள்.
மகாராஷ்டிராவில் சரத்பவாரின் கட்சி உடைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனா கட்சியை உடைத்தார்கள். சிவசேனாவை இரண்டாக உடைத்து ஒரு தரப்பு பாஜகவுக்கு ஆதரவாகவும், சரத்பவார் கட்சியில் ஒரு தரப்பு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள இரண்டு தரப்புகளும் அட்டை கத்திகள் தான்.
தமிழக முதல் அமைச்சர் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கு தளபதியாக செய்படுகிறார். எனவே அவரை பலவீனப்படுத்த வேண்டும். அவருக்கு எதிராக செயல்பட வேண்டும். அவருடைய அரசை செயலிழந்த அரசாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அது தமிழகத்தில் முடியாது.
தமிழக அரசியல் என்பது வேறு, வடஇந்திய பா.ஜ.கவால் தமிழக அரசியலை புரிந்து கொள்ள முடியாது. தமிழக அரசியலில் எங்கள் கருத்துகள் தான் வெற்றி பெரும்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. காவிரி பொது சொத்து, இதற்கு ஆணையம்,உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் தமிழ்நாடு அரசு பக்கம் இருக்கும். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கணக்கு தெரியவில்லை. விதவை உதவிதொகை, முதியோர் உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை இது இல்லாமல் மகளிர் உரிமை தொகை என இந்த நான்கையும் கூட்டி பார்த்தால் 70 சதவீதம் பெண்கள் பயன்பெறு வார்கள். மேலும் தகுதியான வர்களுக்கு மகளிர் உரிமைதொகை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செயலாளர் அக்ராவரம். கே.பாஸ்கர், மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், வி.சி.மோட்டூர்.கணேசன் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நினைவுயொட்டி,கட்சி கொடி ஏற்றி , கல்வெட்டுகளை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.
- கல்வெட்டு திறக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் பகுதியில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை பயண நினைவு கொடியேற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம், மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து கட்சி கொடியேற்றி வைத்து பேசினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் அருண்குமார், மாமண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா பிரகாஷ், வர்த்தகர் அணி வி.எல்.சி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை
- பயனாளிகளை தேர்வு செய்ய முகாம்
ராணிப்பேட்டை:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்படி ரேஷன் அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்திட சிறப்பு முகாம் நடத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் பயன்பெறும் விதமாக தகுதி உள்ள பயனாளிகளை தேர்வு செய்ய முதற்கட்ட முகாம் ஜூலை 20 அல்லது 24-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. முகாமானது தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும்.
இதில் முதல் 8 நாட்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திடவும், கடைசி 2 நாட்கள் சந்தேகம் உள்ள விண்ணப்பங்களை நேரடியாக கள ஆய்வு செய்து அவற்றை உறுதி செய்ய துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட் டத்தில் 614 ரேசன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடைகளின் கீழ் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கிட தேர்வு செய்ய வேண்டும்.
முகாம் தொடங்கப்படும் நாட்களில் பயோமெட்ரிக் எந்திரம் மூலம் பதிவு செய்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இப்பணிகளில் இல்லம் தேடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் புதன்கிழமையிலிருந்து தொடங்கப்பட உள்ளது.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியினரிடமோ, முக்கிய பிரமுகர்களிடமோ, ஒட்டுமொத்தமாகவோ அல்லது தெரிந்தவ ர்களிடமோ வழங்கிடுவது தெரிய வந்தால் சம்பந்த ப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அசல் விண்ணப்பங்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் விண்ணப்பங்கள் பாரபட்ச மின்றி வழங்குவதை உறுதி செய்திட இந்த நடவடிக்கை களை அரசு மேற்கொண்டு ள்ளது. தகுதியின் அடிப்படை யில் அவர்க ளுக்கு வழங்கப்படுவது குறித்தும், வழங்கப்படாதது குறித்தும் செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்ப ப்படும். தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும் இத்திட்டத்தில் பயன் பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, மாவட்ட வழங்கல்- அலுவலர் சத்தியபிரசாத் மற்றும் வருவாய்த்து றையினர், ஊரக வளர்ச்சித்து றையினர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சிகிச்சை பலனின்றி இறந்தார்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் நடராஜர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 61). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பைக்கில் சென்றார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரவிக்குமார் பலத்த காயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று ரவிக்குமார் இறந்தார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெடுஞ்சாலைப் பணிக்காக இடிக்கப்பட்டது
- பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையொட்டி காவேரிப்பாக்கம் பேரூராட்சி அமைந்துள்ளது.
இப்பகுதியில் இருந்து சென்னை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புத்தூர், ஓசூர், பெங்களூர், சித்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல காவேரிப்பாக்கம், அத்திப்பட்டு, திருப்பாற்கடல், ராமாபுரம், கடப்பேரி, கட்டளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், முதியோர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பஸ் நிலையத்திற்கு வருகின்றனர்.
இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பகுதியில் மக்கள் கூட்டம் பரப்பரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்ப டவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த பகுதி முக்கிய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் சந்திப்பாக இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து நிழற்குடையை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் வளர்மதி தகவல்
- ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் வளர்மதி வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு, முன்வைப்பு தொகையாக ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்யவும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைப்ப தற்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, வருகிற 21-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவ லகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடந்தது
நெமிலி:
பனப்பாக்கத்தை அடுத்து கல்பலாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வா கிகள் இயற்கை விவசாயி பிர பாகரன், பாலாஜி, கோபிக் ஆகியோர் முன்னிலை வகித்த.னர். சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில தலைவர் ஈசன் முருகசாமி கலந்துகொண்டார்.
உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். .
தென்னை, பனையிலிருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப டுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.
இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக் கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- 98 பேர் வேலை செய்து வருகின்றனர்
- குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சுவார்த்தை
நெமிலி:
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தம் 29 ஊராட்சிகள் உள்ளது. இதில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 74 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த மையங்களில் 56 அங்கன்வாடி பணியாளர்கள், 42 உதவியாளர்கள் என மொத்தம் 98 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது காவேரிப்பாக்கம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றிவரும் விஜயலட்சுமி என்பவர் அங்கன்வாடி ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதகவும், இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காவேரிப்பாக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் ஏறிய வாலிபர், ரெயில் பெட்டி வாசல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
- பட்டப்பகலில் ஓடும் ரெயிலில் பெண்ணிடமிருந்து செல்போன் பறித்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரக்கோணம்:
சென்னையை சேர்ந்த சகோதரிகள் பிரவீனா மற்றும் அவிதா. இவர்களின் மூத்த சகோதரி அரக்கோணம் அடுத்த திருவலங்காடு பகுதியில் வசித்து வருகிறார்.
அவரது பிறந்தநாள் விழாவுக்கு சகோதரிகள் தனது குழந்தைகளுடன் செல்ல முடிவு செய்தனர்.
சென்னையில் இருந்து பிரவீனா மற்றும் அவிதா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் நேற்று காலை அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர்.
திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் ஏறிய வாலிபர், ரெயில் பெட்டி வாசல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
அப்போது பிரவீனா செல்போன் மூலம் பேசிக்கொண்டு இருந்ததை வாலிபர் நோட்டமிட்டார். திருவள்ளூர் நிலையத்தில் நின்ற ரெயில் மெதுவாக புறப்பட்டு சென்றது. அப்போது வாலிபர், பிரவீனா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீனா கூச்சலிட்டார். இருப்பினும் வாலிபரை பிடிக்க முடியவில்லை.
இது குறித்து பிரவீனா ரெயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார். பட்டப்பகலில் ஓடும் ரெயிலில் பெண்ணிடமிருந்து செல்போன் பறித்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓடும் ரெயிலில் அவ்வப்போது பயணிகளிடம் இருந்து செல்போன் பறிக்கும் கும்பல் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.
நடைமேடையில் நடந்து செல்வது போல் சென்று, ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் நகை மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் கூட, செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் பயணிக்கும் மின்சார ரெயில்களில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது.
பாதுகாப்பு படையினர் ஓடும் ரெயிலில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- கடைகளை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர்
- கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர்.
தற்போது பயணிகளின் வசிக்காக பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ்
ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
பஸ் நிலையம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சேண்பாக்கம் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது
- பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது
ராணிப்பேட்டை:
வேலூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்டம் நிர்வாக பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழாய் பணிகள்
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்சமயம் பொதுப்பணி துறையின் மூலம் வேலூர் அடுத்த சேண்பாக்கம் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் நாளை 8-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்களுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.
எனவே வேலூர் மாநகராட்சி, மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், ஆரணி ஆகிய நகராட்சி பகுதிகள் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கனியம்பாடி, வாலாஜா, ஆற்காடு ஒன்றிய பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் சீரமைக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களின் மூலம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி க்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீண்ட நேரமாகியும் மீட்க முடியவில்லை
- தீயணைப்பு படைவீரர்கள் உயிருடன் மீட்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி (75). இவர் நேற்று காலை வழக்கம் போல் பசுமாட்டை பன்னியூர் அருகே உள்ள பகுதியில் மேச்சலுக்காக ஓட்டி சென்றார்.
பசுமாடு கயிறு அறுத்து அருகே இருந்த தரை கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் பசுமாட்டை மீட்க முடியவில்லை. இது குறித்து பன்னியூர் வி.ஏ.ஓ. தேவி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையிலான படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






