என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
    X

    கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட காட்சி.

    கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

    • நீண்ட நேரமாகியும் மீட்க முடியவில்லை
    • தீயணைப்பு படைவீரர்கள் உயிருடன் மீட்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி (75). இவர் நேற்று காலை வழக்கம் போல் பசுமாட்டை பன்னியூர் அருகே உள்ள பகுதியில் மேச்சலுக்காக ஓட்டி சென்றார்.

    பசுமாடு கயிறு அறுத்து அருகே இருந்த தரை கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரமாகியும் பசுமாட்டை மீட்க முடியவில்லை. இது குறித்து பன்னியூர் வி.ஏ.ஓ. தேவி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையிலான படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×