என் மலர்
ராணிப்பேட்டை
- வயிற்று வலியால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த பெல் நரசிங்கபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் நிலா. இவரது மகன் பிரபாகரன்(29) சென்னையில் சினிமா படப்பிடிப்பிற்கான செட் அமைக்கும் பணியில் கூலி வேலை செய்து வந்தவர்.
கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபாகரன் அதற்காக மாத்திரை, மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் வயிற்று வலியால் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பிரபாகரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பிரபாகரனின் தாய் நிலா கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார், பிரபாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீட் தேர்வை ரத்து செய்ய மறுப்பதை கண்டித்து நடந்தது
- 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தி.மு.க.வின் இளைஞர் அணி,மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் வரவேற்று பேசினார்.
உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி, அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ். ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்து பேசினார்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர் லெனின் கண்டன உரையாற்றுகிறார்
உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவானந்தம், துரைமஸ்தான், ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், அசோகன், கண்ணையன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி , வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை ,வாலாஜா நகர மன்ற தலைவர்கள் சுஜாதா,ஹரிணி,அம்மூர் பேரூராட்சிமன்ற தலைவர் சங்கீதா மகேஷ்,
நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை உள்பட ஒன்றிய,நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி , மருத்துவர் அணி நிர்வாகிகள் உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மருத்துவ அணி அமைப்பாளர் சரவணன் நன்றி கூறுகிறார்.
- 3 கிலோ போதை பொருள் பறிமுதல்
- ரோந்து பணியில் சிக்கினர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ் ஏட்டு ரங்கநாதன் உள்பட போலீசார் கலவை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள பில்லாந்தி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கலவையை சேர்ந்த அலி (33) என்பவரும் கஞ்சா வைத்திருக்கும் தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து போலீசார் கலவையில் அலியிடம் சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் இருவரிடமிருந்தும் மொத்தம் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- 3 கிலோ பறிமுதல்
- புங்கனூர் காப்பு காட்டில் வேட்டையாடினர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள ஆற்காடு வனச்சரக அலுவலக குழுவினர் ஆற்காடு-கலவை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லாடாவரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 62), விஜயன்(36) ஆகியோரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் ஆற்காடு அடுத்த புங்கனூர் காப்பு காடு பகுதியில் மான் வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ய சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 3 கிலோ எடை உள்ள மான்கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, விஜயன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
- பயணிகள் கடும் அவதி!
- ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்-
அரக்கோணம்:
அரக்கோணம் ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவர்கள் பயணிக்க வேண்டிய ரெயிலுக்கு செல்ல ரெயில்கள் எந்தெந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்பது குறித்து சரியான அறிவிப்பு இல்லை.
சமீப காலமாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் ரெயிலுக்கு பிளாட்பாரங்களை மாற்றி அனுமதிப்பது பயணிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.
நேற்று காலை சென்னை-திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 9.15 க்கு புறப்படுவது வழக்கம். இதனால் அந்த ரெயிலில் செல்லும் பயணிகள் வழக்கமாக வரும் 3-ம் பிளாட்பாரத்தில் காத்திருந்தனர்.
திடீரென இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை நெருங்கும் போது முதலாம் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும் என அறிவித்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி க்குள்ளாகினர்.
உடனடியாக 3-வது பிளா ட்பாரத்தில் காத்திருந்த பயணிகள் குறுகிய நேரத்தில் மேம்பாலத்தை பயன்படுத்தி விரைவாக செல்ல வாய்ப்பு இல்லாததால் வயதான வர்கள், பெண்கள் படிக்கட்டில் ஏறி வருவதற்குள் ரெயில் வந்து விடுமே என அச்சத்தில் தண்டவாளத்தில் இறங்கி முதலாம் பிளாட்பாரத்தில் ஏற தொடங்கினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் முதலாம் பிளாட்பா ரத்தை நெருங்கும் நிலையில் பெண்கள், வயதானவர்கள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரெயிலானது அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு முன் எந்த பிளாட்பாரத்திற்கு வருகின்றது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பழமை வாய்ந்த இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றது.
- நாளை காலை 6 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அரக்கோணம் அருகே தக்கோலம் பேரூரில் பழம்பெருமை வாய்ந்த மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள நந்தி தீர்த்த சிறப்புமிக்க ஒரே கோவில் என்ற பெயருடனும் வழிபாட்டு சிறப்புடனும் திகழ்ந்து வருகிறது. பழமை வாய்ந்த இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றது.
இதையடுத்து பல நூற்றாண்டுகளுக்கு பின் நாளை (திங்கட்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி கடந்த 18-ந்தேதி லட்சுமி ஹோமம் மற்றும் தனபூஜை நடைபெற்றது. 19-ந்தேதி நவக்கிரக ஹோமமும் 20-ந்தேதி யாகசாலை பிரவேசம், பூர்ணாஹுதி நடைபெற்றது. நாளை காலை 6 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். இரவு 7. 30 மணிக்கு சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
- 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த நேர்காச்சி நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது.
அப்போது அதே போதையைச் சேர்ந்த லெனின் (வயது 25), அஜித் குமார் (27), சுலைமான் (20) ஐயோ குடிபோதையில் சாலையில் நடனம் ஆடினர்.
அப்போது அதனைப் பார்த்த லெனினின் தந்தை ராஜா (50) மற்றும் அவரது அண்ணன் ஸ்ரீகாந்த் (28) ஆகியோர் தட்டி கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த லெனின் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா மற்றும் ஸ்ரீகாந்த்தை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது குறித்து ஸ்ரீகாந்த் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லெனின், அஜித்குமார், சுலைமான் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ஆந்திரா மாநிலம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காதர் பாஷா (வயது 70). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக காதர் பாஷா தனது உறவினர்கள் நபி பாஷா அகமது பாஷா, அபிஷா, அம்மாஜி ஆகியவுடன் ஆம்புலன்ஸ் மூலம் இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.
அதே வழியாக கடப்பா கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லோடு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்புலிப்பாக்கம் அருகே வரும்போது லோடு லாரியும், ஆம்புலன்சும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டீசல் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து ஆம்புலன்ஸ் பற்றி எரிந்தது. அப்போது திடீரென ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சிவா மற்றும் சுனில், ஊழியர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அவளூர் போலீசருக்கும், காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்சை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து அணைக்க முயன்றனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் இந்த விபத்து குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- 3 ஆயிரத்து 559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், இடைநிலை ,பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பும்பொருட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவிக்க உள்ளது.
6 ஆயிரத்து 556 இடைநிலை ஆசிரியர், 3 ஆயிரத்து 587 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், இந்த தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் என 3 ஆயிரத்து 559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு வருகிற செப்டம்பர் 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் ராணி ப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதி உடையவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- குடி போதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த பஷிராபாத் பகுதியை சேர்ந்தவர் ஆசிம் (வயது 28). இவர் குடி போதையில் அதே பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து 38 வயது பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினார்.
மேலும் ஆசீமை வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசீமை கைது செய்தனர்.
- வாலிபர் போக்சோவில் கைது
- ெஜயிலில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 20)என்ற வாலிபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சிறுமி தனியாக இருந்தபோது லோகேஸ்வரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து ள்ளார். மேலும் இதே போல் பலமுறை உல்லாசமாக இருந்து விட்டு தற்போது திருமணத்திற்கு மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நேற்று ராணி ப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ெஜயிலில் அடைத்தனர்.
- காலை 9 முதல் முதல் பிற்பகல் 2 மணி வரை
- மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்
ஆற்காடு:
வேலூர் மின்பகிர்மான வட் டம் ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவ சிய மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத னால் நாளை (சனிக்கிழமை) காலை 9 முதல் முதல் பிற்ப கல் 2 மணி வரை இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்ன கர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்கு மேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங் களில் மின்நிறுத்தம் செய்யப் படும்.
இந்த தகவலை ஆற்காடு மின்வாரிய செயற்பொறியா ளர் விஜயகுமார் தெரிவித்துள் ளார்






