என் மலர்
ராணிப்பேட்டை
- 35 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை மாவட் டத்தில் நகராட்சிகளில் உள்ள 35 பள்ளிகளிலும், பேரூராட்சிகளில் உள்ள 34 பள்ளிகளிலும், ஊரக பகுதிகளில் 541 பள்ளிகள் என மொத்தம் 610 பள்ளிகளில் படிக்கும் 35 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
வாலாஜா டோல்கேட் அடுத்த சென்ன சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது மாணவர்களுடன் அமர்ந்து உணவு ஊட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா.வெங்கட், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் கடப்பேரி.சண்முகம் உள்பட தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
- 24 மணிநேர அவசர உதவி எண்ணை தொடர்புக்கொள்ள அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் கடந்த 19 மற்றும் 20-ந்தேதி ஆகிய 2 திருமண முகூர்த்த நாட்களில் மாவட்டத்திலுள்ள அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களில் மொத்தம் 11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ஆலோசனைகளும், அறிவுரையும் வழங்கப்பட்டது.
குழந்தை திருமணம் செய்தால் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் முன் ஜாமீனில் வெளிவர முடியாது என எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்பட்ட குழந்தைகள் தற்போது, பெற்றோர்களிடம் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுமாயின் அக்குழந்தைகளை குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தை தொழிலாளர்கள், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், குழந்தைத் திருமணங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிட குழந்தைகளுக்கான 24 மணிநேர அவசர உதவி எண் சைல்டு லைன் -1098 க்கும், மேலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து பெண்கள் உதவி எண்-181 க்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- காலை உணவு திட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்
- மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு நடத்தினார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் 1-வது வார்டு தந்தை பெரியார் நகரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து 2-வது வார்டு வேல்முருகன் நகரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி திடக்கழிவு மேலாண்மை மையம் மற்றும் குப்பைகள் தரம் பிரித்து மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆய்வு செய்தார்.
பின்னர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் பள்ளியில் முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி உதவி இயக்குனர் கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
- வேப்பமரத்தில் தழைபறித்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் கண் ணப்பன் விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 55). இவர் நேற்று வீட் டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தழைபறிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சா ரம் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச் செல்வியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஆற்காடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜாபேட்டையில் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் இங்குள்ள கழிவறை குப்பை தொட்டியில் பிறந்து 2 மணி நேரமே ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.
இது குறித்து ஆஸ்பத்திரி அலுவலர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள், குழந்தைகளின் விவரம் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே ஆஸ்பத்திரிக்கு வெளியிலிருந்து குழந்தையை கொண்டு வந்து கழிவறை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார்களா? முறையின்றி குழந்தை பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசி சென்று விட்டார்களா? என பல்வேறு கோணங்களிலும், ஆஸ்பத்திரி சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் வாலாஜா ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர், எனவே அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி வன்னிவேடு அரசினர் பள்ளியில் மாவட்டத்தின் சார்பில் அரசு விழா கொண்டாட மாவட்ட கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலரை கேட்டு கொள்வது, அடுத்த ஆண்டு முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை தினத்தை உள்ளூர் விடுமுறை தினம் என அரசாணை வழங்க வேண்டும்.
நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட கலெக்டரை கோருவது, வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் கொரோனாவிற்கு முன்பு நிறுத்தப்பட்டு வந்த அனைத்து ெரயில்களும் மீண்டும் நின்று செல்ல தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்து வது, ராணிப்பேட்டையில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவ மனையை மத்திய அரசு நிதி உதவியுடன் உடனடியாக துவங்க கோருவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை எனவே பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள்,கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், வியா பாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முறையான கால நேரத்தில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி அலுவலர் உமாபதி நன்றி கூறினார்.
- போக்குவரத்து விதிகளை மீறினர்
- அதிகாரிகள் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
வாலாஜாபேட்டையில் இருந்து ஆற்காடு நோக்கி இரு தனி யார் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. ஆட்டோ நகர் அருகே வந்த போது பின்னால் வந்த பஸ் முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது பொதுமக்களையும், பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் இரண்டு பஸ்களும் அதிவேகமாக சென்றுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் முத்துக்கடை பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் இரண்டு பஸ்களையும் நிறுத்தி போக்குவ ரத்து விதிகளை மீறி அதிவேகமாக வந்ததால் தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர்.
- தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 24). தெருக்கூத்து கலைஞர். திருமணமாகி மனைவி சுகன்யா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் செல்வம் சாலை கிராமத்தில் இருந்து அரக்கோ ணத்தில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அரக் கோணம் சோளிங்கர் ரோடு - ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப் போது அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற தனி யார் தொழிற்சாலை பஸ் எதிர் பாரதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த செல்வம் பஸ்சில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வத்தை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
- விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கவுரி (32).
சந்திரன் ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கவுரி தனது 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை கடைசி குழந்தை யான கபிலேஷ் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த கசக்கால்வாயில் குழந்தை எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டதாகத் தெரிகிறது.
விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் தாய் கவுரி அக்கம் பக்கத்தில் தேடினார். அந்த நேரத்தில் கபிலேஷின் பாட்டி உமா மாடுகளுக்கு தண்ணீர் காண்பிக்க குட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.
அந்த குட்டையில் கபிலேஷ் மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உறவினர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவேரிப்பாக்கம் ஏரியில் நடந்தது
- 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவிரிப்பாக்கம் ஏரியில் மாநில பேரிடர் மீட்புக் படையினர் சார்பில் மழைக்காலங்களில் துரிதமாக செயல்பட போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர்களுக்கு மழை, பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவது குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2-வது நாள் பயிற்சியாக நேற்று காவேரிப்பாக்கம் ஏரியில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
- வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது
- போலீசார் சமாதானம் செய்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரில் உள்ள அணைக்கட்டு சாலை மிகவும் குறுகி காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதி படுகின்றனர்.
எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலாஜா நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
அதன்படி சோளிங்கர் சாலை, பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நேற்று வாலாஜா- அணைக்கட்டு சாலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகள், வீடுகளின் ஆக்கிரமிப்பு மேற்கூரைகள், விளம்பர போர்டுகள் மற்றும் கட்டுமானங்கள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டன.
வாலாஜா நகராட்சி ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினை நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- 25 கிலோ சிக்கியது
- பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நெமிலி:
பனப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான மளிகை, டீ மற்றும் பேக்கரி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் நேற்று பனப் பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உத்தரவின் பேரில், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரவீன் குமார் மற்றும் பணியாளர்கள் பஸ் நிலையம், அரக்கோணம் ரோடு, அண்ணா நகர், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
இது போன்று பிளாஸ்டிக் கவர் மற்றும் கப்புகளை பயன்ப டுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.






