என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1 லட்சம் அபராதம்"

    • கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
    • 24 மணிநேர அவசர உதவி எண்ணை தொடர்புக்கொள்ள அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் கடந்த 19 மற்றும் 20-ந்தேதி ஆகிய 2 திருமண முகூர்த்த நாட்களில் மாவட்டத்திலுள்ள அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களில் மொத்தம் 11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ஆலோசனைகளும், அறிவுரையும் வழங்கப்பட்டது.

    குழந்தை திருமணம் செய்தால் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் முன் ஜாமீனில் வெளிவர முடியாது என எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

    குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்பட்ட குழந்தைகள் தற்போது, பெற்றோர்களிடம் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுமாயின் அக்குழந்தைகளை குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குழந்தை தொழிலாளர்கள், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், குழந்தைத் திருமணங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிட குழந்தைகளுக்கான 24 மணிநேர அவசர உதவி எண் சைல்டு லைன் -1098 க்கும், மேலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து பெண்கள் உதவி எண்-181 க்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நக ராட்சியை பிளாஸ்டிக் இல்லா நகராட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக, நகராட்சி மூலம் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து, மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என நகரில் வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தடையை மீறி சிலர் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள கடைகளில் நேற்று நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமையில் நகராட்சி ஆணையாளர்(பொ) சரவணன், சுகாதார அலு வலர்கள் மோகனசுந்தரம், துப்பரவு ஆய்வாளர்கள் சந்திரகுமார், உதயகுமார், கோவிந்தராஜ், துப்பரவு மேற்பார்வையாளர்கள் சரவணன், எஸ்.சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கார்நே சன் திடலுக்கு செல்லும் சாலையில் குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஆய்வுக்குழுவினர், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிக்காராம்(30) என்பவருக்கு எச்சரிக்கை விடுத்தும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார்.இது குறித்து நகர்மன்ற தலைவர் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மண், நீர், காற்று மாசுபடுகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி நகராட்சி யிலும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி மஞ்சள்பையை பயன்படுத்த வேண்டும் என்றார். 

    ×