அதிவேகமாக வந்த 2 தனியார் பஸ்களுக்கு அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறினர் அதிகாரிகள் நடவடிக்கை
அதிவேகமாக வந்த 2 தனியார் பஸ்களுக்கு அபராதம்
Published on

ராணிப்பேட்டை:

வாலாஜாபேட்டையில் இருந்து ஆற்காடு நோக்கி இரு தனி யார் பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. ஆட்டோ நகர் அருகே வந்த போது பின்னால் வந்த பஸ் முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது பொதுமக்களையும், பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் இரண்டு பஸ்களும் அதிவேகமாக சென்றுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் முத்துக்கடை பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் இரண்டு பஸ்களையும் நிறுத்தி போக்குவ ரத்து விதிகளை மீறி அதிவேகமாக வந்ததால் தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com