search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby delivery"

    • சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டையில் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மதியம் இங்குள்ள கழிவறை குப்பை தொட்டியில் பிறந்து 2 மணி நேரமே ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.

    இது குறித்து ஆஸ்பத்திரி அலுவலர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள், குழந்தைகளின் விவரம் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே ஆஸ்பத்திரிக்கு வெளியிலிருந்து குழந்தையை கொண்டு வந்து கழிவறை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார்களா? முறையின்றி குழந்தை பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசி சென்று விட்டார்களா? என பல்வேறு கோணங்களிலும், ஆஸ்பத்திரி சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளகாதலில் பிறந்ததா?
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு அடுத்த செ.ஆண்டப்பட்டு ஊராட்சி வரவேற்பு எல்லை குப்பை தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

    ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை காவலர்களை கொண்டு தினசரி ஊராட்சியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று காலை சுகாதார இயக்குனர் வெண்ணிலா, தூய்மை பணியாளர்கள் இந்திரா, வேணி, சக்தி, மகேஷ் ஆகியோர் குப்பை சேகரிக்கும் வண்டியை நிறுத்திவிட்டு குப்பை தொட்டியில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குப்பைக்கு அடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்ததை பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் குப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தானிப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தானிப்பாடி போலீசார் ஆண் குழந்தையின் உடலை மீட்டனர்.

    குழந்தை இறந்தே பிறந்ததால் குப்பை தொட்டியில் அதனை பெற்றவர் வீசினரா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் கொலை செய்து வீசினரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×