என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான் கறி விற்பனை"

    • 3 கிலோ பறிமுதல்
    • புங்கனூர் காப்பு காட்டில் வேட்டையாடினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள ஆற்காடு வனச்சரக அலுவலக குழுவினர் ஆற்காடு-கலவை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லாடாவரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 62), விஜயன்(36) ஆகியோரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் ஆற்காடு அடுத்த புங்கனூர் காப்பு காடு பகுதியில் மான் வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ய சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 3 கிலோ எடை உள்ள மான்கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, விஜயன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    ×